மேலும் அறிய

நாராயணர் அசுரன் ஹயக்ரீவனை வதம் செய்யும் வழிமுறை தெரியாமல் தவிக்கிறார்…? அடுத்து நடந்தது என்ன….?.

நாராயணர் அசுரன் ஹயக்ரீவனை வதம் செய்யும் வழிமுறை தெரியாமல் தவிக்கிறார்…? அடுத்து நடந்தது என்ன….?.

லட்சுமி நாராயணா – நமோ நமஹ

Dec 16 to Dec 20 வரை

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மிகப் பிரமாண்டமாகவும் காண்போரை ஈர்க்கும் வகையில் மிகுந்த சுவாரஸ்யத்தோடும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது…. “ லட்சுமி நாராயணா – நமோ நமஹ “ ஆன்மீகப் புராண தொடர்.

இந்த வாரம்

ஆதிசக்தியிடம் வரம் பெற்று வந்த அசுரன் ஹயக்ரீவன் சர்வநாச அஸ்திரத்தை ஏவி பிரளயத்தை தோற்றுவிப்பது…. பிரளயத்தை எதிர்கொள்ள முடியாமல் அழியும் ஜீவராசிகளும், மக்களும், தேவர்களும்….  லட்சுமியும் நாராயணரும் காப்பாற்றினார்களா….?

வைகுந்தத்தில் நாராயணருக்கும் லட்சுமிக்கும் விவாகம் சிறப்பாக நடந்து முடிந்ததை தடுத்து நிறுத்த முடியாத அசுரன் ஹயக்ரீவன் நாராயணரையும் லட்சுமியையும் விரைவில் அழிப்பேன் என்று சபதம் எடுக்கிறான். உடனே நாராயணரை அழிக்க பிரளயத்தை தோற்றுவிப்பதாகப் புறப்படுகிறான்.  ஹயக்ரீவனின் தந்தை கஷ்யப்ப முனிவரும் தாய் கத்ருவும் அவனை தடுத்து அறிவுரை கூறுகிறார்கள். அசுரன் கேட்காமல் தான் பெற்ற தவவலிமையால் சர்வநாச அஸ்திரத்தை வரவழைத்து பிரபஞ்சத்தில் பெரும்பிரளயத்தை உண்டாக்குகிறான். அண்டசராசரமே நடுநடுங்குகிறது. ஹயக்ரீவன் தோற்றுவித்த பிரளயத்தை…எதிர்கொள்ள முடியாமல் ஜீவராசிகளும், மக்களும், தேவர்களும் அழிந்து கொண்டிருக்கின்றனர். லட்சுமியும் நாராயணரும் யாது செய்வதென்று புரியாமல் குழம்பித் தவிக்கின்றனர். சிவன், பிரம்மா, நாரதர் மற்றும் தேவாதிதேவர்களும் பிரளயத்தை முறியடிக்க நாராயணர் என்ன செய்யப் போகிறார் என்று காத்திருக்கின்றனர்.

அப்போது நாராயணர் தேவசிற்பி மனுவிடம் புதிய கப்பலை நிர்மாணிக்கும்படி சொல்கிறார். பிரளயத்தின் அழிவிலிருந்து மீட்டு புது உலகை படைப்பதாகவும் சொல்கிறார். உடனே மனு தன் துணைசிற்பிகளுடன் சேர்ந்து நாராயணர் வடிவைமைக்கச் சொன்ன கப்பலை நிர்மாணித்து முடிக்கிறான். நாராயணர் உத்தரவுப்படி அந்தக் கப்பலில் பிரளயத்தினால் தத்தளிக்கும் தேவர்களையும் கஷ்யப்ப முனிவரையும் ஏற்றுகிறான். மேலும் நாராயணர் படைக்கப்போகும்  புது உலகிற்கு பிரளயத்தில் எஞ்சிய ஜீவராசிகளையும் தாவரவித்துக்களையும் ஏற்றிக்கொண்டு புறப்படுகிறான். அப்போது அசுரன் ஹயக்ரீவன் சர்வநாச அஸ்திரங்களை ஏவி அந்தக் கப்பலையும் அழிக்க முற்படுகிறான். உடனே லட்சுமி நாராயணர் மச்சாவதாரம் எடுத்து அந்தக் கப்பலை காப்பாற்றுகிறார். சேஷநாதன் நாராயணரின் மச்சாவதாரத்திற்கு உதவும் பொருட்டு வந்து அந்தக் கப்பலை தாங்குகிறான். அதேநேரம் அஷ்டலட்சுமியாய் தேவர்களுக்கு காட்சி கொடுத்த லட்சுமி தன் கணவர் நாராயணரின் எண்ணத்தை நிறைவேற்ற புது உலகத்தை படைக்கிறார். பிரளயத்திலிருந்து அந்த புது உலகை காப்பாற்ற  சிவனே நேரடியாகச் சென்று தாங்கிப் பிடிக்கிறார். லட்சுமி தன் தீவிர முயற்சியில் பிரளயத்தின் நீரினால் தத்தளிக்கும் அந்த கப்பலை புது உலகின் கரையில் சேர்க்கிறார். ஜீவராசிகளும் தேவர்களும் தப்பிக்கின்றனர். நாராயணர் மச்சாவதாரத்திலிருந்து வெளிப்படுகிறார்.

இதனை அறியாத அசுரன் ஹயக்ரீவன் தன் பிரளயத்தினால் நாராயணரும் தேவர்களும் ஜீவராசிகளும் அழிந்து விட்டனர் என நினைத்து அவன் அசுரர்களின் புது உலகை படைக்கும் கொண்டாட்டத்தை தொடங்குகிறான். அந்த சமயத்தில் அவனுக்கு நாராயணர் அழியவில்லை என்கிற தகவல் வந்து சேர்கிறது. உடனே ஹயக்ரீவன் நாராயணரின் புது உலகுக்குள் புகுந்து நாராயணரை நேருக்குநேர் யுத்தம் செய்ய அழைக்கிறான். நாராயணர் அசுரன் ஹயக்ரீவனை வதம் செய்ய முற்படுகிறார். அவை தோல்வியிலேயே முடிகின்றன. ஹயக்ரீவன் தான் ஆதிசக்தியிடம் வரம் பெற்று வந்தவன் தன்னை யாராலும் அழிக்க முடியாது என்கிறான்.

நாராயணர் அசுரன் ஹயக்ரீவனை வதம் செய்யும் வழிமுறை தெரியாமல் தவிக்கிறார்…? அடுத்து நடந்தது என்ன….?

இப்படி பல திருப்பங்களுடன் இந்த வார லட்சுமி நாராயணா – நமோ நமஹ தொடர் விறுவிறுப்பாக செல்கிறது.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகும்  “ லட்சுமி நாராயணா – நமோ நமஹ “ தொடரை காணத் தவறாதீர்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 15 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 15 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Travis Head:
Travis Head: "இந்தியானாலே அடிப்பேன்" எப்படி போட்டாலும் அடிக்கும் டிராவிஸ் ஹெட் புது ரெக்கார்ட்!
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி  ஈவி வரை, இவ்வளவா?
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி ஈவி வரை, இவ்வளவா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 15 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 15 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Travis Head:
Travis Head: "இந்தியானாலே அடிப்பேன்" எப்படி போட்டாலும் அடிக்கும் டிராவிஸ் ஹெட் புது ரெக்கார்ட்!
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி  ஈவி வரை, இவ்வளவா?
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி ஈவி வரை, இவ்வளவா?
TAHDCO Loan Scheme: பெண்களுக்கான ஜாக்பாட் - ரூ.4.5 லட்சம் வரை கடன், 5.5% மட்டுமே வட்டி - யாருக்கு கிடைக்கும்?
TAHDCO Loan Scheme: பெண்களுக்கான ஜாக்பாட் - ரூ.4.5 லட்சம் வரை கடன், 5.5% மட்டுமே வட்டி - யாருக்கு கிடைக்கும்?
ADMK Meeting: சட்டை கிழியாமல்? பாட்டில் பறக்காமல்? இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு - அடக்குவாரா ஈபிஎஸ்?
ADMK Meeting: சட்டை கிழியாமல்? பாட்டில் பறக்காமல்? இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு - அடக்குவாரா ஈபிஎஸ்?
General Knowledge: இதெல்லாம் உண்மையா? இந்தியாவிற்கு இப்படி ஒரு பெருமையா? கூகுளின் வேகம் என்ன? எத்தனை ட்வீட்கள்?
General Knowledge: இதெல்லாம் உண்மையா? இந்தியாவிற்கு இப்படி ஒரு பெருமையா? கூகுளின் வேகம் என்ன? எத்தனை ட்வீட்கள்?
Breaking News LIVE: அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இரங்கல்
Breaking News LIVE: அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இரங்கல்
Embed widget