KPY Bala: உதவியால் வந்த சிக்கல்.. KPY பாலாவின் காதல் திருமணத்தில் எழுந்த பிரச்னை!
KPY Bala : KPY பாலா தொடர்ந்து செய்து வரும் உதவிகளைப் பலர் பாராட்டி வந்தாலும் அவரின் காதல் கல்யாணத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பணம் படைத்தவர்களே ஏழை எளியோருக்கு பண உதவி செய்ய தயக்கம் காட்டும் இன்றைய காலகட்டத்தில் தன்னுடைய சம்பாத்தியத்தில் இருந்து பெரும் பகுதியை ஏழை, எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார் 'கலக்கப் போவது யாரு', 'குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான நடிகர் பாலா.
போக்குவரத்துக்கு வசதி இல்லாத கிராமங்கள், மலைவாழ் மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி தருவது, படிப்பிற்கு உதவுவது, மருத்துவ உதவி, முதியோர் இல்லம் என பல வகையிலும் மக்களுக்கு உதவி கரம் நீட்டி வரும் பாலாவின் இந்த தன்னலமற்ற சேவையையை பலரும் பாராட்டி வருகிறார்கள். மேலும் அவர் செய்து வரும் இந்த சேவைக்கு பக்கபலமாக ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பல பிரபலங்களும் அவருக்கு உதவி செய்து வருகிறார்கள். ஒரு பக்கம் இவரது சேவைப் பணி பாராட்டுகளை குவித்து வந்தாலும், ஒரு சிலர் இதை விமர்சிக்கவும் செய்கிறார்கள். “உதவி செய்வதை அமைதியாக செய்து விட்டு போகலாமே, எதற்காக இதை பப்ளிசிட்டி செய்ய வேண்டும்?” என விமர்சித்து வருபவர்களும் உண்டு.
சமீபத்தில் நடிகர் பாலா தான் காதலித்து வந்த பெண்ணை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அதை விரைவில் அறிவிப்பதாகவும் தெரிவித்து இருந்தார். தற்போது அவரின் திருமணத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சின்னத்திரை மற்றும் பாலாவின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது. பாலா காதலித்து வந்த பெண் வீட்டில் முன்னரே திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்கள். ஆனால் பாலா செய்து வரும் இந்த உதவிகளால் அந்தப் பெண்ணின் தந்தைக்கு ஏதோ சங்கடம் ஏற்பட்டுள்ளதால், இந்தத் திருமணத்தை நடத்தி வைப்பதில் சற்று தயக்கம் காட்டி வருகிறார் எனக் கூறப்படுகிறது.
“சினிமாவில் வாய்ப்பு என்பது எப்போதுமே வரும் என சொல்ல முடியாது. அப்படி இருக்கையில் பணம் சம்பாதிக்கும்போதே அதை சேர்த்து வைத்து வாய்ப்பு இல்லாத காலங்களில் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். திருமணத்திற்கு பிறகு மனைவி குழந்தைகளுக்கு என பணம் சேமிக்க வேண்டும். இப்படி செலவு செய்வது சரியாக வருமா?” என ஒரு சிலர் பாலா காதலித்து வரும் பெண்ணின் தந்தையிடம் சொல்லி வைக்க, அவர்கள் இப்போது திருமணத்திற்கு எதிராக மாறியுள்ளார்கள் எனக் கூறப்படுகிறது.
எது எப்படியோ விரைவில் இந்த திருமணச் சிக்கலுக்கு ஒரு முடிவு வந்து பாலாவுக்கு திருமணம் நடைபெற வேண்டுமென்பதே அவரின் ரசிகர்கள் விருப்பமாக உள்ளது.
மேலும் படிக்க: Saranya Ponvannan: ரசிகர்களின் பாசக்கார அம்மா சரண்யா பொன்வண்ணன் கொலை மிரட்டல் விடுத்தாரா? உண்மை என்ன?