Karthigai Deepam: அமெரிக்கா கிளம்பிய கார்த்திக்.. அபிராமி எடுக்க போகும் முடிவு என்ன? கார்த்திகை தீபம் இன்று!
Karthigai Deepam Oct 03: கார்த்திக் ரூமில் ஒரே யோசனையில் இருக்க, அங்கு வரும் மீனாட்சி அவனுக்கு ஆறுதல் சொல்கிறாள், "அத்தை இப்படி பண்ணி இருப்பாங்கன்னு நான் கொஞ்சம் கூட யோசிக்கல" என்று சொல்கிறாள்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தீபா வீட்டை விட்டு வெளியே போக நான் தான் காரணம் என அபிராமி உண்மையை உடைக்க எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் கார்த்திக் எதுவும் பேசாமல் ரூமுக்குள் சென்று விட அருணாச்சலம் அபிராமியை பிடித்து திட்டுகிறார். "அவனுக்கும் ஆசைகள் இருக்கும், உன்னுடைய விருப்பத்தை அவன் மேல திணிக்காதே" என்று கோபப்படுகிறார்.
கார்த்திக் ரூமில் ஒரே யோசனையில் இருக்க, அங்கு வரும் மீனாட்சி அவனுக்கு ஆறுதல் சொல்கிறாள், "அத்தை இப்படி பண்ணி இருப்பாங்கன்னு நான் கொஞ்சம் கூட யோசிக்கல" என்று சொல்கிறாள்.
மறுபக்கம் தீபாவும் கார்த்தியுடனான நினைவுகளுடன் சமையல் செய்து கொண்டிருக்க, வெளியே ஒருவர் கார்த்திக்.. கார்த்திக்.. என கத்துவது போல சத்தம் கேட்டு தீபா வெளியே ஓடி வர, இங்கே அடுப்பில் எல்லாம் கருகி போக மைதிலி கோபப்படுகிறாள். ஜானகி அபிராமி பற்றிய விஷயத்தை சொல்ல வர, தீபா அதனைத் தடுத்து விடுகிறாள்.
அடுத்து இங்கே அபிராமி வீட்டில் ஒருவர் வந்து அமெரிக்கா செல்வதற்கான பிளைட் டிக்கெட்டை கார்த்திக் புக் செய்ய சொல்லி இருந்ததாக கொடுத்து விட்டுச் செல்ல, எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். கார்த்திக் கீழே வர, அபிராமி காரணம் கேட்க, கொஞ்சம் தனியா இருக்கணும்னு ஆசைப்படுவதாக சொல்கிறான்.
கொஞ்ச நேரத்தில் வழக்கறிஞர் ஒருவர் வந்து கம்பெனி பொறுப்புகளை அருண் பெயருக்கு மாற்றி விட்டதாக சொல்ல, அனைவரும் பேரதிர்ச்சி அடைகின்றனர். கார்த்திக் பேக்குடன் கிளம்ப, அபிராமி செய்வதறியாது தவித்து நிற்கிறாள், இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.