Karthigai Deepam: கார்த்திக்கு தெரியவரும் உண்மை.. பழியை ஏற்றுக்கொண்ட ஐஸ்வர்யா, ஆனா ட்விஸ்ட்.. கார்த்திகை தீபம் இன்று!
Karthigai Deepam Oct 02: தீபாவிடம் நான் எதுவும் சொல்லல, அப்படின்னா அத்தை தான் சொல்லி இருக்கணும் ”என ஐஸ்வர்யா முடிவெடுக்கிறாள்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலில் கடந்த சனிக்கிழமை எபிசோடில் அபிராமி தீபாவுக்கு போன் செய்து திட்டிய அனைத்தையும் ஜானகி கேட்டு விட, ஜானகிக்கு உண்மை தெரிய வந்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது தீபா ரோமில் வருத்தமாக உட்கார்ந்திருக்க, அங்கு வரும் ஜானகி “இவ்வளவு நடந்து இருக்கு, ஏன் என்கிட்ட சொல்லல” என்று கேட்க, தீபா அம்மாவை கட்டியணைத்துக் கொண்டு அழுகிறாள். “அபிராமியும் ஒரு பொண்ணு தானே.. அவங்களுக்கு இப்படி சொல்ல எப்படி மனசு வந்தது.. அவங்களும் ஒரு குடும்பத்துக்கு வாழ வந்தவங்க தானே” என ஜானகி வருத்தப்படுகிறாள்.
மறுபக்கம் கார்த்திக் சாப்பிடாமல் இருக்க, ஐஸ்வர்யா “இந்த வீட்டில தீபாவ பிடிக்காத ரெண்டே ஆளு நானும் அபிராமியும் மட்டும்தான். தீபாவிடம் நான் எதுவும் சொல்லல, அப்படின்னா அத்தை தான் சொல்லி இருக்கணும் ”என முடிவெடுக்கிறாள்.
அதைத்தொடர்ந்து வீட்டில் எல்லோரும் சாப்பிடாமல் இருக்க, அங்கு வரும் அபிராமி “ஏன் சாப்பிடாமல் இருக்கீங்க?” என்று கேட்க, “கார்த்திக் நேத்து வந்தான்.. இன்ன வரைக்கும் சாப்பிடல.. எங்களுக்கு கஷ்டமா இருக்கு” என்று சொல்கின்றனர்.
பிறகு கார்த்திக்கும் அங்கு வர, அபிராமி “ஏன் சாப்பிடல” என்று கேட்க, “தீபா விஷய தெரியாம சாப்பிட மாட்டேன்” என்று சொல்கிறான். இப்படியே எல்லோருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாக, ஐஸ்வர்யா “நான்தான் சொன்னேன்” என அபிராமியிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக பழியை ஏற்றுக்கொள்ள, பிறகு அபிராமியே உண்மையை உடைத்து விடுகிறாள்.
இதனால் கார்த்திக் உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.