Karthigai Deepam: சரவணன் சூழ்ச்சிக்கு ஃபுல்ஸ்டாப்.. கார்த்தியை மடக்க சவால் விடும் தீபா.. கார்த்திகை தீபம் இன்று!
அபிராமி “நான் உன்னை இதெல்லாம் செய்ய சொல்லலையே, நீ சாதாரணமாக சமைச்சி இருக்கலாமே” என்று சொல்ல, “இல்ல சரவணன் மாமா தான் இந்த சமைக்க சொன்னாரு” என்று சரவணனின் திட்டத்தை தகர்த்து எறிகிறாள்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோட்டில் தீபா அசைவம் சமைக்க சரவணன் பரமேஸ்வரி பாட்டியிடம் போட்டுக் கொடுத்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது பரமேஸ்வரி பாட்டி “தீபா அசைவம் சமைத்திருப்பதை பார்த்தேன், அவளை திட்டி இனி இந்த வீட்டில் நீ இருக்கக் கூடாது” என வெளியே துரத்துகிறார். பிறகுதான் தெரிய வருகிறது இது சரவணன் கண்ட கனவு.
இந்த நேரம் பார்த்து பாட்டி வீட்டுக்கு வர சரவணன் தீபாவை போட்டுக் கொடுக்க கிச்சனுக்கு வந்த பாட்டி “என்னது நவராத்திரி நாளில் அசைவம் செய்றீங்களா?” என்று கேட்க, “இது அசைவமில்ல வாழக்காய் மீன் வருவல்” என்று சொல்கிறாள். மேலும் “இது பலாப்பழம் பிரியாணி” எனவும் கூறுகிறாள்.
அபிராமி “நான் உன்னை இதெல்லாம் செய்ய சொல்லலையே, நீ சாதாரணமாக சமைச்சி இருக்கலாமே” என்று சொல்ல, “இல்ல சரவணன் மாமா தான் இந்த சமைக்க சொன்னாரு” என்று சரவணனின் திட்டத்தை தகர்த்து எறிகிறாள்.
அதைத் தொடர்ந்து மலர் “என்ன ஓவரா தலைகனத்தில் ஆடுற?” என்று தீபாவிடம் வந்து வம்பு செய்ய, இருவருக்கும் வாக்குவாதம் அதிகமாக மலர், “நான் ஆசைப்பட்ட என் மாமாவ நீ எடுத்துகிட்ட.. அதனால் திருப்பி எடுத்துக்க போறேன்” என்று சொல்ல, தீபா அவர் என் புருஷனுக்கு பதில் அடி கொடுக்கிறாள்.
மலர், “உன் கண் எதிரே அவரை என் பக்கம் இழுத்துக் காட்டுகிறேன் பாரு” என சவால் விட்டு கார்த்தியிடம் சென்று, “மாமா இந்த ஊருக்கு வந்தா நீங்க என்ன பைக்ல கோவிலுக்கு கூட்டிட்டு போவீங்களா, இப்பவும் கூட்டிட்டு போங்க” என்று சொல்லிக் கேட்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.