Karthigai Deepam: மறுபடி முருங்கைமரம் ஏறிய வேதாளம்.. தீபாவுக்கு அபிராமி கொடுத்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் இன்று
மறுபக்கம் அலங்காரம் செய்து கொண்ட தீபா, அப்பா, அம்மா, ஜானகி மற்றும் தர்மலிங்கம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறாள்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மற்றும் தீபாவுக்கு முதலிரவுக்கு நேரம் குறித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது முதலிரவுக்கான ஏற்பாடுகள் நடக்க ஐஸ்வர்யா வழக்கம் போல சதித்திட்டம் தீட்டி தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறாள். ஆனால் மீனாட்சியும் மைதிலியும் சேர்ந்து ஐஸ்வர்யாவை கலாய்த்து வெறுப்பேற்றுகின்றனர்.
மறுபக்கம் அலங்காரம் செய்து கொண்ட தீபா, அப்பா, அம்மா, ஜானகி மற்றும் தர்மலிங்கம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறாள், “தர்மலிங்கம் அபிராமி கிட்டயும் ஆசிர்வாதம் வாங்கிக்கமா, அவங்க ஆசிர்வாதமும் உனக்கு ரொம்ப முக்கியம் என்று சொல்ல தீபாவும் அபிராமிடம் ஆசிர்வாதம் வாங்க வருகிறாள்.
அபிராமி ரூமுக்குள் நுழைந்த தீபா தன்னை மருமகளாக ஏற்று கொண்டதற்கு நன்றி சொல்ல, அபிராமி "இங்க பாரு உனக்கு இந்த வீட்டில எந்த தடையும் கிடையாது, நீ பூஜா ரூம், கிட்சன் என எல்லா இடத்துக்கும் போகலாம், மற்ற மருமகள்களுக்கு இருக்க எல்லா உரிமையும் உனக்கு இருக்கு, ஆனால் நான் உன்னை மருமகளாக ஏற்றுக் கொள்ள மாட்டேன்” என்று ஷாக் கொடுக்கிறாள்.
இதையெல்லாம் கார்த்திக் ரூமுக்கு வெளியே இருந்து கேட்டு விடுகிறான், இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.