Ranjithame serial : சீரியல் பாருங்க 1 பவுன் தங்கத்தை அள்ளுங்க! இன்று முதல் ரசிகர்களை தங்க மழையில் நனைக்க வருகிறது 'ரஞ்சிதமே' சீரியல்
இன்று முதல் கலைஞர் தொலைக்காட்சியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது 'ரஞ்சிதமே' புதிய சீரியல். ஆடி மாதம் முழுவதும் ஒரு நாளைக்கு ஒருவருக்கு 1 சவரன் தங்கம் பரிசு மழை.
![Ranjithame serial : சீரியல் பாருங்க 1 பவுன் தங்கத்தை அள்ளுங்க! இன்று முதல் ரசிகர்களை தங்க மழையில் நனைக்க வருகிறது 'ரஞ்சிதமே' சீரியல் Kalaingar TV new serial ranjithame gifts one sovereign gold coin prize for one person every day Aadi special Ranjithame serial : சீரியல் பாருங்க 1 பவுன் தங்கத்தை அள்ளுங்க! இன்று முதல் ரசிகர்களை தங்க மழையில் நனைக்க வருகிறது 'ரஞ்சிதமே' சீரியல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/17/8033954261dc56b707289c44728646a61689600973555224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சின்னத்திரை ரசிகர்களை நாள் முழுவதும் கட்டி போடுவதில் பெரும் பங்கு வகிப்பது சீரியல்கள். வெவ்வேறு தொலைக்காட்சிகளில் வகைவகையாக சீரியல்கள் ஒளிபரப்பானாலும் அவை அனைத்திற்கும் ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றன. திரைப்பட நடிகர் நடிகையர்களை போலவே சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் பார்வையாளர்கள் மத்தியில் பயங்கரமான ஃபேன் பாலோவர்ஸ் உள்ளனர். அந்த அளவுக்கு சீரியல்களின் ராஜாங்கம் அதிகரித்துள்ளது.
திரைப்படங்களுக்கு இருக்கும் புரொமோஷன் போலவே சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கும் கண்கவர் ப்ரோமோவை வெளியிட்டு ரசிகர்களை காந்தம் போல இழுத்து விடுகின்றனர். போட்டி போட்டு கொண்டு புரொமோஷன் செய்து தொலைக்காட்சி சேனல்கள் புதிய யுக்தியாக ஆடி மாதத்தையும் சேர்த்துவிட்டனர். ஆடி மாதம் அம்மனுக்கு மட்டும் உகந்தது அல்ல தள்ளுபடிக்கும்தான் என்பது காலம் காலமாக இருந்து வரும் வழக்கம். அதை லாவகமாக பயன்படுத்தி ஆடி ஆஃபர் ஒன்றை சின்னத்திரை ரசிகர்களுக்கு ஸ்பெஷலாக வழங்க கலைஞர் தொலைக்காட்சி முடிவெடுத்துள்ளது.
பல பழைய தொடர்கள் மீண்டும் புதுப்பொலிவுடன் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதோடு பல புதிய சீரியல்களின் வருகையும் கலைஞர் டிவி ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. அந்த வகையில் விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனத்தின் அடுத்த படைப்பான 'ரஞ்சிதமே' என்று புதிய தொடர் ஜூலை 17ம் தேதியான இன்று முதல் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
இந்த சீரியலில் சிவ் சதீஷ் மற்றும் மனிஷாஜித் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் நடிகை ரூபாஸ்ரீ இந்த சீரியலில் ஹீரோவின் அம்மாவாக நடித்துள்ளார். ஆடி ஸ்பெஷல் சர்ப்ரைஸாக ஜூலை 17ம் தேதி முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை இந்த சீரியலை தவறாமல் பார்ப்பவர்களுக்கு தினம் ஒரு நபருக்கு ஒரு பவும் தங்கம் பரிசுக்காக வழங்கப்படும் என்ற விளம்பரத்துடன் புரொமோஷன் செய்யப்படுகிறது. இடையில் கேள்விகள் ஏதேனும் கேட்கப்பட்டு அதற்கு பதில் அளிப்பவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பரிசளிக்க படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆஃபர் கலைஞர் டிவி ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இன்று இரவு முதல் கலைஞர் டிவியில் 'ரஞ்சிதமே' தொடரை தவறாமல் பார்த்து தங்க மழையில் நனைய தயாராக காத்திருக்கிறார்கள் சின்னத்திரை ரசிகர்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)