Siragadikka Aasai: சிவகுமார் ஹீரோயின்.. எம்ஜிஆருக்கு தங்கை.. சிறகடிக்க ஆசை பாட்டி பற்றிய சுவாரஸ்ய தகவல்!
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அனைத்து சீரியல் குழுக்களும் ரசிகர்களை கவர சுவாரஸ்யமாக கதைகளை நகர்த்தி வருகிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில் பாட்டியாக நடித்து வரும் நடிகை ரேவதி பற்றி சுவாரஸ்யமான தகவலை காணலாம்.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அனைத்து சீரியல் குழுக்களும் ரசிகர்களை கவர சுவாரஸ்யமாக கதைகளை நகர்த்தி வருகிறது. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் காலை 8 மணி தொடங்கி இரவு 11 மணி வரையும் தொடர்ச்சியாக சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியல்களுக்கான டிஆர்பி ரேட்டிங் வாரம்தோறும் வெளியாகும். இதனை கொண்டும் கடந்த வாரத்தை விட அடுத்த வாரம் சீரியலை சிறப்பாக கொண்டு வர வேண்டும் என்ற மெனக்கெடலும் நடைபெறுகிறது என்பது மறுக்க முடியாது.
இப்படியான நிலையில் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் “சிறக்கடிக்க ஆசை”. இந்த சீரியல் தான் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. இந்த சீரியலில் ஆர்.சுந்தரராஜன், வெற்றி வசந்த், கோமதி பிரியா, அனிலா ஸ்ரீகுமார், பாக்யலட்சுமி, ரேவதி, சல்மா அருண், ப்ரீதா ரெட்டி என பலரும் நடித்து வருகிறனர். எஸ்.குமரன் இந்த சீரியலை மிகவும் சிறப்பாக இயக்கி வருகிறார்.
View this post on Instagram
இந்த சீரியல் சமீபத்தில் 300 எபிசோட்களை கடந்தது. தொடர்ச்சியாக சிறகடிக்க ஆசை சிறப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இதில் ஹீரோவாக நடிக்கும் முத்துவின் பாட்டியாக ரேவதி நடித்துள்ளார். இவர் தொடர்பான காட்சிகள் கடந்த 2 வாரங்களாக ஒளிபரப்பாகி அனைவரிடமும் வரவேற்பை பெற்றது. மருமகள்களை மிரட்டும் மாமியாக விஜயா வந்த நிலையில், அவரையே மிரட்டும் மாமியார் நாச்சியாராக ரேவதி நடித்திருப்பது நல்ல திருப்புமுனையாக அமைந்தது. இந்த ரேவதி பாட்டி சின்னத்திரை மட்டுமல்லாமல் பெரிய திரையிலும் படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக நடிகர் சிவகுமார் அறிமுகமான காக்கும் கரங்கள் படத்தில் அவருக்கு ஜோடியாக ரேவதி தான் நடித்திருப்பார். அதுமட்டுமல்லாமல் தனிப்பிறவி என்ற படத்தில் எம்ஜிஆருக்கு தங்கையாக நடித்திருக்கிறார். நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் அவரின் பாட்டியாக நடித்திருப்பார். இப்படி இளம் வயதில் இருந்தே நடித்து வரும் ரேவதி தன்னுடைய முதிர் வயதிலும் சிறப்பாக நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
மேலும் படிக்க: Kavin: வெற்றிமாறன் படத்தில் நடிக்கும் கவின்.. வெளியான சூப்பர் அப்டேட் இதோ!