மேலும் அறிய

Hima Bindhu :சீரியலை விட்டு விலகுகிறேன்... கனத்த இதயத்துடன் அறிவிப்பை வெளியிட்ட சன் டிவி நடிகை... இனி இலக்கியாவாக யார்?

Hima Bindhu : இலக்கியா சீரியலில் இருந்து விலகுவதற்கான காரணம் குறித்து இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் தெரிவித்துள்ளார் நடிகை ஹீமா பிந்து.

சீரியல்களுக்கு பெயர் போன சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தான் 'இலக்கியா'. கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கப்பட்ட இந்த சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை ஹீமா பிந்து. இவர் தற்போது இலக்கியா சீரியலில் இருந்து விலகுவதாக போஸ்ட் மூலம் அறிவித்துள்ளார். 

Hima Bindhu :சீரியலை விட்டு விலகுகிறேன்... கனத்த இதயத்துடன் அறிவிப்பை வெளியிட்ட சன் டிவி நடிகை... இனி இலக்கியாவாக யார்?

இலக்கியாவில் ஹீமா பிந்து :

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் சீரியலான 'இதயத்தை திருடாதே' சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஹீமா பிந்து. அதன் மூலம் அவருக்கு சன் டிவி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சன் டிவியில் கிடைத்த இந்த வாய்ப்பு வெகு சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். 

நல்ல வரவேற்பு :

மதிய நேரங்களில் ஒளிபரப்பாகி வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த தொடரில் சித்தி 2 சீரியல் பிரபலம் நந்தன் லோகநாதன், ரூபஸ்ரீ, மீனாவேம்புரி, சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வாருகிறார்கள். டிஆர்பி ரேட்டிங் வரிசையிலும் முன்னணியில் இருந்து வரும் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக நடிகை ஹீமா பிந்து தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஹீமா பிந்துவின் போஸ்ட் :

இலக்கியா சீரியலில் இருந்து ஹீமா பிந்து விலகுவதற்கான காரணத்தை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார். "என்னுடைய சக நடிகர்கள், ரசிகர்கள் எனக்கு கொடுத்த அன்புக்கும்  ஆதரவுக்கும் நான் என்றுமே நன்றி கடன் பட்டுள்ளேன். கனத்த இதயத்துடன் இலக்கியா சீரியலை விட்டு விலகுவதாக முடிவு எடுத்துள்ளேன். என்னுடைய இந்த முடிவு உங்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து இருந்ததால் அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இதனால் நீங்கள் வருத்தப்படாதீர்கள். 

Hima Bindhu :சீரியலை விட்டு விலகுகிறேன்... கனத்த இதயத்துடன் அறிவிப்பை வெளியிட்ட சன் டிவி நடிகை... இனி இலக்கியாவாக யார்?
என்னையும் மீறிய சில காரணங்களால்தான் நான் இந்த சீரியலை விட்டு விலகுகிறேன். சினிமாவையும் சீரியலையும் பேலன்ஸ் செய்வது மிகவும் கஷ்டமானதாக இருக்கிறது. இது எனக்கு மட்டுமில்லை இலக்கியா சீரியலில் நடிக்கும் சக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் பொருந்தும். அது தேவையில்லாத மன அழுத்தத்தையும், பிரஷரையும் ஏற்படுத்தியது. என்னால் இந்த சீரியலுக்கு தொந்தரவு வருவதை  ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் சீரியல் தொடர வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அதனால் தான் நான் இந்த சீரியலை விட்டு விலகுகிறேன். 

இந்த வெற்றிகரமான சீரியலில் நானும் ஒரு பங்காக இருந்ததை நினைத்து சந்தோஷப்படுகிறேன். எனக்கு கொடுத்த அன்பையும் ஆதரவையும் மற்றவர்களும் கொடுங்கள். என்னுடைய இந்த முடிவுக்கு பக்கபலமாக இருந்ததற்கு நன்றி. அன்புடன் நன்றியுடன் பிந்து! என பகிர்ந்துள்ளார். 

இனி இலக்கியாவாக :

இலக்கியா சீரியலில் இனி இலக்கியாவாக நடிகை ஷாம்பவி குருமூர்த்தி நடிக்க உள்ளார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான கண்மணி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். இனி இலக்கியாவாக ரசிகர்களின் வரவேற்பை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Embed widget