மேலும் அறிய

Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..

Top 5 Best Selling SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்யுவி பிரிவில் அதிக விற்பனை மூலம் ஆதிக்கம் செலுத்தி வரும் டாப் 5 மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Top 5 Best Selling SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்யுவி பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வரும் டாப் 5 மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் எஸ்யுவிக்கள்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்யுவிக்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அதில் மிகப்பெரிய அளவில் கோலோச்சும் மாடல்கள் எவை என்பது தெரியுமா? அதனை புள்ளி விவரங்களுடன் ஒப்பிட்டால், உள்ளூரில் எஸ்யுவி பிரிவில் அதிகம் விற்பனையாகும் மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அணுகக் கூடிய விலை, நம்பகத்தன்மை கொண்ட ப்ராண்ட், வலுவான மைலேஜ், பாதுகாப்பு அம்சங்கள் போன்ற பல்வேறு காரணிகளால் கீழே பட்டியலிடப்பட்டுள்ள கார்கள் வாடிக்கையாளர்களால் விரும்பி தேர்வு செய்யப்படுகின்றன.

இந்தியாவின் டாப் 5 எஸ்யுவிக்கள்:

1. டாடா ப்ஞ்ச் 

எஸ்யுவி பிரிவில் கடந்த ஜுலை மாதம் அதிகம் விற்பனையான கார் மாடலாக, டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் மாடல் முதலிடம் பிடித்துள்ளது. ஒட்டுமொத்த கார் விற்பனையில் கடந்த ஜுன் மாதத்தில் முதலிடம் பிடித்திருந்த நிலையில், ஜுலை மாதத்தில் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. பஞ்ச், அதன் பிரிவில் மலிவு விலை மற்றும் சிறந்த வசதிகள் கொண்ட எஸ்யுவிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இது சிஎன்ஜி பவர்டிரெய்னுடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வையும் வழங்குகிறது. உள்ளூர் சந்தையில் இந்த காரானது ரூ.5.70 லட்சத்தில் தொடங்கி ரூ.10.67 லட்சம் வரையிலான விலை (எக்ஸ் - ஷோரூம்) வரம்பை கொண்டுள்ளது. கடந்த ஆண்டின் ஜுலை மாதத்தில் 10 ஆயிரத்து 785 யூனிட்களை விற்பனை செய்த பஞ்ச, கடந்த ஜுலை மாதத்தில் 21 ஆயிரத்து 313 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.

2. மாருதி ஃப்ராங்க்ஸ்

கடந்த ஆண்டின் ஜுலை மாதத்தில் 12 ஆயிரத்து 872 யூனிட்கள் விற்பனையான மாருதியின் ஃப்ராங்க்ஸ், நடப்பாண்டில் 19 ஆயிரத்து 473 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. மாருதி நிறுவனம், ஃபிராங்க்ஸின் ஒரு புதிய சீரிஸ்-ஹைப்ரிட் பவர்டிரெய்ன் அடங்கிய மேம்படுத்தலை ஏற்கனவே திட்டமிட்டு வருகிறது. இந்த புதிய மேம்படுத்தல், இந்த எஸ்யுவியின் விற்பனையை அதிகரிக்க உதவக்கூடும். உள்ளூர் சந்தையில் தற்போது ரூ.6.85 லட்சத்தில் தொடங்கி ரூ.11.98 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது.

3. ஹுண்டாய் க்ரேட்டா

ஹுண்டாய் க்ரேட்டா ஜூலை மாதத்தில் அதிகம் விற்பனையான எஸ்யுவிக்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இந்த மாடல் ஜூன் மாதத்தில் அதிகம் விற்பனையான முதல் 25 வாகனங்கள் பட்டியலில் இடம்பெறத் தவறி, இந்த மாதம் மீண்டும் முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த ஆண்டின் ஜுலையில் 16 ஆயிரத்து 898 யூனிட்கள் விற்பனையான நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 18 ஆயிரத்து 88 யூனிட்களாக உயர்ந்துள்ளன. ஒரு நல்ல மிட்-சைஸ் எஸ்யுவி வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு, ஹுண்டாய் க்ரேட்டா பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பிற சிறப்பம்சங்கள் அடங்கிய ஒரு தொகுப்பை வழங்குகிறது. உள்ளூர் சந்தையில் தற்போது இந்த காரின் விலை ரூ.10.91 லட்சத்தில் தொடங்கி ரூ.20.11 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது.

இதையும் படியுங்கள்: Maruti 7 Seater: 32KM மைலேஜில் புது 7 சீட்டரை களமிறக்கும் மாருதி? பட்ஜெட்டில் குடும்பங்களுக்கான கார் - முழு விவரம்

4. டாடா நெக்ஸான்

ஜூலை மாதத்தில் அதிகம் விற்பனையான எஸ்யுவிக்களின் பட்டியலில் டாடா நெக்ஸான் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த டாடா எஸ்யூவியின் விற்பனை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது அதிகரித்திருந்தாலும், ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 900 யூனிட்கள் குறைவாக உள்ளது. டர்போ பெட்ரோல்-சிஎன்ஜி உட்பட பல்வேறு அம்சங்களையும் பலவிதமான பவர்டிரெய்ன் தேர்வுகளையும் வழங்கும், விலைக்கு நிகரான அம்சங்கள் மற்றும் வசதிகள் கொண்ட எஸ்யுவி ஆக விளங்குகிறது. உள்ளூர் சந்தையில் தற்போது இந்த காரின் விலை ரூ.7.40 லட்சத்தில் தொடங்கி ரூ.14.40 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது.

5. மஹிந்த்ரா ஸ்கார்ப்பியோ

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ (க்ளாசிக் மற்றும் N மாடல்கள் சேர்த்து) ஜூன் மாதத்தில், 16 ஆயிரத்து 9 யூனிட்கள் விற்பனையாகி அதிகம் விற்பனையாகும் எஸ்யுவிக்களில் ஐந்தாவது இடத்தையும், ஒட்டுமொத்த கார் விற்பனையில் பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளது. எத்தகைய சாலையிலும் செல்லும் திறன் கொண்ட, உறுதியான, லேடர்-ஃப்ரேம் எஸ்யுவியை விரும்பும் வாங்குபவர்களுக்கு, ஸ்கார்ப்பியோ ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம்.மஹிந்த்திரா தற்போது ஸ்கார்பியோ N மாடலையும் மேம்படுத்தியுள்ளது; இதில் சில புதிய அம்சங்கள் மற்றும் உபகரணப் பட்டியல் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மேம்படுத்தல், வரும் மாதங்களில் ஸ்கார்ப்பியோவின் விற்பனையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் சந்தையில் தற்போது இந்த காரின் விலை ரூ.13.37 லட்சத்தில் தொடங்கி ரூ.17.40 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
TVS Bike Price Hike: டிவிஎஸ் பைக் வாங்க போறீங்களா?.. சத்தம் இல்லாமல் உயர்ந்த விலை.. எவ்வளவு?
TVS Bike Price Hike: டிவிஎஸ் பைக் வாங்க போறீங்களா?.. சத்தம் இல்லாமல் உயர்ந்த விலை.. எவ்வளவு?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Embed widget