Ethirneechal June 23rd 2023 : வலுக்கட்டாயமாக ஆதிரை கழுத்தில் தாலி கட்டிய கரிகாலன்.. ட்விஸ்ட்டால் எதிர்நீச்சல் ரசிகர்கள் அதிர்ச்சி..
Ethir Neechal June 23rd: நடு ரோட்டிலேயே வலுக்கட்டாயமாக ஆதிரை கழுத்தில் தாலி கட்டிய கரிகாலன். தெருவிலேயே கதறி அழுத ஜனனி. நேற்று எதிர்நீச்சல் சீரியலில் நடந்தது என்ன?
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் பல வாரங்களாக மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்து ஆதிரையின் திருமணம் ஒரு முடிவுக்கு வந்தது. அருணுக்கு ஆதிரைக்கும் திருமணத்தை எப்படியாவது ஜனனி நடத்திவிடுவாள் என மிகுந்த நம்பிக்கையோடு இருந்த அனைவரின் தலையிலும் இடி விழுவதுபோல ஆகிவிட்டது. அப்படி நெற்றியை எபிசோடில் என்ன நடந்தது?
ஆதிரை மற்றும் ஜனனி டீம் இருந்த கோயிலுக்கு குணசேகரன் வந்திறங்கி திட்டி தீர்க்கிறார். அரசு எங்கே என ஞானம் அனைவரையும் மிரட்ட மிகவும் துணிச்சலாக ஜனனி அரசு குடும்பத்திற்கும் இந்த கல்யாணத்துக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. அருண் ஆதிரை திருமணத்தை நான் தான் பிளான் செய்தேன். அருணை கொடைக்கானலில் ஒளித்து வைத்து இருந்தேன், ஆனால் அவன் இப்போது எங்கு இருக்கிறான்? என்பது தெரியவில்லை என சொல்கிறாள்.
குணசேகரன் ஆதிரையின் கழுத்தில் தாலி இருக்கிறதா என்பதை பார்க்க சொல்லவும் அனைவரும் அவளை சுற்றி கழுத்தை செக் செய்து நடக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டனர். ஆதிரையை இழுத்து வர சொல்கிறார். மரத்தில் கட்டியிருந்த மஞ்சள் கயிறு ஒன்றை எடுத்துக்கொண்டு தரதரவென ரோட்டில் இழுத்து வருகிறார்கள். மக்கள் அனைவரும் கூடி இருக்கும் இடத்தில் கொண்டு போய் நிறுத்தி, ”இவளுக்கு இன்னைக்கு கல்யாணம் ஆனா பண்ணிக்கொள்ள மாட்டேன் என காதல் வெறி புடிச்சு ஓடி வந்துட்டா.... இப்போ இந்த இடத்திலேயே கல்யாணம் முடிக்க போறோம்” என்கிறார்.
மூன்று அணிகளுக்கும் சேர்ந்து இதை தடுக்க வரும்போது அவர்களை ஜான்சி ராணி தள்ளிவிடுகிறாள். குணசேகரன் எல்லாரும் அமைதியா இருங்க என அடிக்க வருகிறார். கரிகாலனை அழைத்து தாலியை கட்ட சொல்கிறார். நடத்திட்டேன் பாத்தீங்களா என சொல்லி வீட்டுக்கு வந்துடாதீங்க என தம்பி மனைவிகளை பார்த்து சொல்லிவிட்டு ஆதிரையை கூட்டிக்கொண்டு செல்கிறார். தெருவில் உட்கார்ந்து அழுகிறார்கள் ரேணுகா, நந்தினி மற்றும் ஜனனி.
மறுபக்கம் ஈஸ்வரி, விசாலாட்சியை வீட்டிற்கு அழைத்து வருகிறார். அவர்களின் நிலைமையை நினைத்து வேதனைப்படுகிறார். பயப்படாதீர்கள், இவர்கள் செல்வதற்குள் அங்கு கல்யாணம் நல்லபடியாக முடிந்து இருக்கும் என் சொல்லி மாமியாரை சமாதானம் செய்கிறார் ஈஸ்வரி. நம்மையே அப்படி படுத்துனானே அவர்களை என்ன செய்து இருப்பான் என தெரியவில்லையே. ஜனனி எல்லாத்தையும் பார்த்துக்கொள்வான் நீங்கள் கவலைப்படாதீர்கள் என சொல்கிறாள்.
காரில் வரும்போது ஆதிரையிடம், யாருகிட்ட விளையாடுற. நல்லவேளை அந்த அருண் வரவில்லை. வந்திருந்த இந்நேரம் கல்யாணத்தை முடிச்சு வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்திருப்பார்கள் என கூறுகிறார் குணசேகரன்.ஆதிரை கழுத்தில் இருந்த தாலியை அறுத்து எறிந்து விடுகிறாள். எனக்கு பிடிக்காதவன் கட்டிய தாலி ஏன் என்னோட கழுத்தில் இருக்கணும். எனக்கு அது வேண்டாம். மனசுக்கு புடிச்சு ஏத்துக்கிட்டாதான் அது கல்யாணம். திரும்பவும் கரிகாலன் தாலியை ஆதிரை கழுத்தில் கட்டிவிடுகிறான். நேராக அவர்கள் கல்யாணத்தை பதிவு செய்ய ரெஜிஸ்டர் அலுவலகத்துக்கு செல்கிறார்கள்.
ஜனனி எல்லாரிடமும் மன்னிப்பு கேட்கிறாள். உங்கள் அனைவரையும் நம்பவைத்து ஏமாற்றி விட்டேன். ரேணுகா நீ ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். அவ தலையெழுத்து இந்த வீட்டில வந்து பொறந்துட்டா. நம்ம நினைத்த மாதிரி கல்யாணம் நடந்து இருந்ததா கூட பரவாயில்லை. ஆனா இப்போ எல்லாமே மாறிப்போச்சு. இப்படி வாழ்க்கை வாழ செத்துப் போகலாம். ஜனனியிடம் நான் என்னைக்குமே உனக்கு ஆதரவாக இருப்பேன் என சக்தி சொல்கிறான். அருணுக்கு என்ன நடந்தது? என நினைத்து புலம்புகிறார்கள்.
ஈஸ்வரி ரேணுகா மூலம் நடந்ததை எல்லாம் கேட்டு தெரிந்து கொள்கிறாள். அத்தைகிட்ட என்ன சொல்வது என புரியவில்லையே என புலம்புகிறார்கள். அத்துடன் இன்றைய எபிசோட் நிறைவுக்கு வருகிறது. அருண் திரும்பி வந்தனா? அவனுக்கு என்ன ஆனது? ஆதிரையின் நிலை என்ன? ஜனனியை என்ன செய்ய போகிறார் குணசேகரன். இவை அனைத்திற்கும் வரும் வாரம் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.