Ethirneechal June 26th : கல்யாண கையெழுத்துபோட்ட ஆதிரை... சுயநினைவின்றி கிடக்கும் அருண்... எதிர்நீச்சல் அதிர்ச்சி அப்டேட்..
Ethir Neechal Serial June 26th : வேறு வழியின்றி அண்ணன்களின் கொடுமையால் ரெஜிஸ்டர் ஆபிசில் கையெழுத்து போட்ட ஆதிரை. பலத்த காயங்களுடன் சுயநினைவின்றி அருண். எதிர் நீச்சலில் நேற்று என்ன நடந்தது?
சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியல் மிகவும் பரபரப்பான கட்டத்தில் உள்ளது. ஆதிரை கழுத்தில் வலுக்கட்டாயமாக கரிகாலன் தாலிகட்டிய பிறகு அவர்கள் இருவரையும் குணசேகரன் ரெஜிஸ்டர் ஆபிஸுக்கு அழைத்து சென்று திருமணத்தை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
ஞானம், விசாலாட்சியிடம் ஆதிரை கரிகாலன் திருமணத்தை பதிய போவதைப் பற்றி கூறியதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். உடனே சக்தியும் ஜனனியும் அங்கிருந்து ரெஜிஸ்டர் ஆபிஸுக்கு கிளம்புகிறார்கள்.
மறுபக்கம் ரெஜிஸ்டர் முன்னிலையில் ஆதிரையை கையெழுத்து போட சொல்கிறார்கள். அதற்கு ஆதிரை ஒரு நிமிடம் நான் ஞானம் அண்ணனுடன் பேச வேண்டும் என கெஞ்சுகிறாள். ரெஜிஸ்டராரும் சம்மதம் தெரிவிக்கிறார். ஆதிரை ஞானத்திடம் ஒரே ஒரு முறை நான் அருணுடன் பேச வேண்டும் என கெஞ்சுகிறாள். உனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதமா அண்ணா? அந்த குடும்பத்தில் நான் எப்படி போய் வாழ முடியும்? என ஞானத்திடம் கேட்கிறாள்.
அண்ணன் முடிவு செய்துவிட்டார்.. இனிமேல் எதுவும் செய்ய முடியாது என்கிறான் ஞானம். குணசேகரன் அருண் அண்ணன் எஸ்.கே.ஆரிடம் நான் பேசுகிறேன் என போன் மூலம் பேசுகிறார். அருணிடம் கரிகாலன் மனைவி ஆதிரை ஒரு முறை பேச வேண்டும் என ஆசைப்படுகிறாள், என சொல்ல அருண் அண்ணன் இனிமேல் அருண் அவளிடம் பேசமாட்டான், என சொல்லிவிட்டு ஃபோனை கட் செய்துவிடுகிறார்.
அருண் அண்ணன்கள் மற்றும் அண்ணி மருத்துவமனையில் இருக்கிறார்கள். சுயநினைவின்றி உடல் முழுக்க காயங்களுடன் படுத்து இருக்கிறான் அருண். அருகில் இருந்த போலீஸ் கூறுகையில் கொடைக்கானல் மலையில் இருந்து கார் கீழே இறங்கும்போது கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பெரிய பள்ளத்தில் விழுந்து விட்டது. பெரிய ஆபத்தில் இருந்து அவர் இந்த காயங்களுடன் தப்பித்துவிட்டார். இல்லை என்றால் அவர் அவ்வளவுதான். அவரை மேலே கொண்டு வரும் போது காசி அங்கு வந்ததால் அது அருண் என தெரியவந்தது, என்றார்.
காசி, அருணின் இந்த நிலைக்கு அந்த குணசேகரன்தான் காரணம். இது சாதாரண விபத்து போல் இல்லை. இதற்கு பின்னால் குணசேகரனின் சதி வேலை இருப்பது போல் தெரிகிறது. அவர்களை நான் சும்மா விடமாட்டேன் என சொல்ல அவரின் அண்ணி வேண்டாம் காசி அருண் பிரச்சனையை இத்துடன் முடித்து விடுங்கள். குணசேகரனை என்ன செய்ய வேண்டும் என்பதை நான் பார்த்து கொள்கிறேன் என்கிறார்.
மறுபக்கம் ஆதிரையும் வேறு வழியின்றி கையெழுத்து போட்டு விடுகிறாள். இன்றோடு என் வாழ்க்கை போய்விட்டது என அழுது துடிக்கிறாள். அந்த நேரத்தில் ஜனனி அங்கு வர அவள் மீது கோபத்தை வார்த்தையால் கொட்டுகிறாள் ஆதிரை. எல்லாரும் பிளான் பண்ணி என்னை ஏமாற்றி விட்டீர்கள். இன்றோடு எனது வாழ்க்கை காலி என அழுது விட்டு அங்கிருந்து சென்று விடுகிறாள்.
ஜனனிக்கு அருண் அண்ணி போன் செய்து உடனடியாக மருத்துவமனைக்கு வரச் சொல்கிறார். காரணம் புரியாமல் ஜனனியும் சக்தியும் விரைகிறார்கள். ஆதிரையை கரிகாலன் வீட்டுக்கு அழைத்து செல்கிறார்கள். இடுக்கு சந்து என்பதால் கார் உள்ளே நுழைய முடியாததால் அனைவரும் அந்த சந்து வழியாக நடந்து செல்கிறார்கள். ஜான்சி ராணி போகும் வழியெல்லாம் மருமகளை பற்றி பெருமையாக அனைவரிடமும் அறிமுகப்படுத்தி வைக்கிறார். குணசேகரன் கடுப்பில் இருக்க ஆதிரை விரக்தியில் வாழ்க்கை போனதை நினைத்து இடிந்து போனது போல மௌனமாக செல்கிறாள். இத்துடன் நேற்றைய எபிசோட் நிறைவுக்கு பெற்றது.