Ethirneechal June24th: ஜனனி மீது கோபப்படும் விசாலாட்சி... ஆதிரை சொல்லப்போகும் உண்மை... எதிர்நீச்சல் அப்டேட்..!
ஆதிரை - கரிகாலன் திருமணத்தை பதிவு செய்ய ரிஜிஸ்டர் ஆபீஸில் காத்திருக்கிறார் குணசேகரன். நேற்றைய தினம் எதிர்நீச்சல் சீரியலில் என்ன நடந்தது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான தொடரான 'எதிர்நீச்சல்' சீரியலில் இத்தனை நாட்களாக மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ஆதிரையின் திருமணம் ஒரு வழியாக படு பயங்கரமான ட்விஸ்டுடன் நடந்து முடிந்தது. ஆதிரை திருமணம் எப்படியாவது அருணுடன் நடந்து விடும் என மிகவும் நம்பிக்கையுடன் இருந்த ரசிகர்களுக்கு கரிகாலனுடன் வலுக்கட்டாயமாக நடுத்தெருவில் நடந்த ஆதிரையின் திருமணம் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
கட்டாய கல்யாணம்:
ரெஜிஸ்டர் ஆபிஸில் ஆதிரை - கரிகாலன் திருமணத்தை பதிவு செய்வதற்காக குணசேகரன் அவர்களை அங்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவருக்கு தெரிந்த ஒரு ஊழியர் துணையோடு திருமணத்தை பதிவு செய்வதற்கான அனைத்து வேலைகளையும் நடத்தி வருகிறார். ஆதிரை மற்றும் கரிகாலனின் ஆதார் மற்றும் மற்ற அதரங்களை எல்லாம் தயாராக வைத்து கொள்ள சொல்கிறார்.
ஆதிரை என்னால் கையெழுத்து போட முடியாது. எனக்கு பிடிக்காத கல்யாணத்தை நான் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கேட்கிறார்கள். குணசேகரன் ஜான்சி ராணியிடம் சொல்லி ஆதிரையை காருக்கு அழைத்து செல்ல சொல்கிறார். ஆதிரையை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும். அவள் எதற்கும் துணிந்துவிட்டாள். அதனால் கதிரை அவளுக்கு காவலாக இருக்க சொல்கிறார்.
சமாதானம்:
மறுபக்கம் ஜனனி டீம் வீட்டுக்கு திரும்புகிறார்கள். காரை காணவில்லையே அவர்கள் எங்கே சென்று இருப்பார்கள் என யோசிக்கிறார்கள். உள்ளே சென்றதும் நடந்தை எல்லாம் ஈஸ்வரி கேட்டு கொண்டு இருக்கும் போது அவர்களின் குரல் கேட்டு விசாலாட்சி அங்கு வருகிறார். திருமணம் நல்லபடியாக முடிந்ததா என ஜனனியிடம் கேட்க ஜனனி இல்லை அருண் வராததால் திருமணம் நடக்கவில்லை. நாங்கள் அருணை தேடி கிளம்புவதற்குள் குணசேகரன் அங்கு வந்து ஆதிரையை அடித்து கரிகாலனை வைத்து தாலி கட்ட வைத்துவிட்டார் என சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார் விசாலாட்சி. உன்னை நம்பி தானே என் மகளை நான் அனுப்பி வைத்தேன் அவளை இப்படி ஏமாற்றிவிட்டாயே என புலம்புகிறார். நீ இப்படி தோற்று போய் வந்து நிக்கிறியே என அழுது புலம்புகிறார். அனைவரும் விசலாட்சியை சமாதானப்படுத்துகிறார்கள்.
அந்த அருண் நிலைமை என்ன ஆனது என ஈஸ்வரி கேட்க, ஜனனி அவன் கொடைக்கானல் மலையில் இருந்து கீழே இறங்கி விட்டான் ஆனால் இடையில் என்ன ஆனது என்பது தெரியவில்லை. இத்தனை பிரச்சனைகளுக்கு நடுவில் நடக்கும் திருமணத்திற்கு யாராவது பையனை தனியாக அனுப்புவார்களா? அந்த பையனுக்கும் நிலையான புத்தி இல்லை. நாம் தான் முன்னரே சுதாரித்து இருக்க வேண்டும். வேறு ஒரு மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைத்து இருக்க வேண்டும். பெண் புத்தி பின் புத்தி என்பதை இந்த விஷயம் மூலம் நிரூபித்துவிட்டாய் என ஜனனியிடம் கோபித்து கொள்கிறார் விசாலாட்சி.
மறுபக்கம் காரில் ஆதிரை. குணசேகரனிடம் வந்து இந்த கல்யாணம் செல்லாது. எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை எல்லாரும் சேர்ந்து எனக்கு கட்டாய கல்யாணம் பண்ணி வைக்குறாங்க என ரெஜிஸ்ட்ராரிடம் நான் சொன்னால் அடுத்த நிமிடமே உங்கள் அனைவரையும் ஜெயிலில் போட்டு விடுவார்கள் என சொல்லி மிரட்டுகிறாள்.
நடக்கப்போவது என்ன?
ஈஸ்வரி ஞானத்திற்கு போன் செய்து எங்கே இருக்கீங்க என கேட்கிறார். ஆதிரையிடம் பேச வேண்டும் என விசாலாட்சி ஆசைப்படுவதை பற்றி சொல்கிறார். இப்போ ஆதிரையிடம் பேச முடியாது. அவளை நாங்கள் ஒன்றும் செய்யவில்லை. ரெஜிஸ்டர் ஆபிஸில் தான் இருக்கிறோம் என்பதை அவர்களிடம் சொல்கிறான் ஞானம். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.
ஆதிரை கரிகாலன் இருவரின் திருமணமும் பதிவு செய்யப்படுமா? ஆதிரை வேறு ஏதாவது முயற்சி செய்து எஸ்கேப்பாக போகிறாளா? அருண் நிலை என்ன ஆனது? ஜனனி ஏதாவது பிளான் செய்யபோகிறாளா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.