Ethir Neechal September 7 Promo: அடுத்த கொலைக்கு ரெடியான கதிர்.. ஜனனி சொன்ன குட் நியூஸ்.. ஆத்திரத்தில் குணசேகரன்..!
Ethir neechal September 7 promo :* அதிரையை ஹனிமூனுக்கு அனுப்பும் பிளான் தடபுடலாக நடைபெறுகிறது * சக்தியும் ஜனனியும் வந்து சொன்ன குட் நியூஸ் எதிர் நீச்சலில் இன்று
சன்டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ஆடிட்டரும் வக்கீலும் அப்பத்தா சொத்தை எப்படி குணசேகரன் பெயருக்கு மாற்றுவது என்பது குறித்தும், அதில் இருக்கும் சிக்கல் குறித்தும் பேசுகிறார்கள். ஆனால் அப்பத்தாவை போட்டு தள்ள பிளான் போடுகிறார்கள் கதிரும் குணசேகரனும்.
ஏன் கவலை?
வீட்டில் அப்பத்தாவுடன் நான்கு மருமகள்கள் மற்றும் தர்ஷினி பேசி கொண்டு இருக்கிறார்கள். அப்போது நந்தினி அவர்களுக்கு ஜனனி எப்படி ஊக்குவித்து உதவி செய்துள்ளாள் என்பதை பற்றி அப்பத்தாவிடம் சொல்கிறாள். ரேணுகா, ஈஸ்வரி மற்றும் நந்தினி தங்களுடைய சொந்த காலில் நிற்க அவள் என்னென்ன செய்தாள் என்பதை பற்றி சொல்கிறாள். அவர்களின் பிசினஸ்ஸை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முதல் தேவைப்படுகிறது என்பதை பற்றி பேசும் போது தர்ஷினி அது தான் 40% ஷேர் நம்ம பக்கம் இருக்கும் போது ஏன் கவலை படவேண்டும் என கேட்கிறாள்.
அதை கேட்டு ஷாக்கான அப்பத்தா "யாரு சொன்ன இந்த 40% ஷேரை நான் இவங்களுக்கு கொடுக்கப்போறேன் என" என்கிறார். அதை கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். "நீங்க எங்களுக்கு மாரல் சப்போர்ட்டாக இருந்தால் அதுவே போதும். எங்களுக்கு இந்த சொத்து எல்லாம் தேவையே இல்லை" என்கிறார்கள். "உங்களை போல இப்படி அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் பல பெண்கள் வெளியில் வந்து சொந்த காலில் நிற்க வேண்டும். அது தான் என்னுடைய நோக்கம். இது என்னுடைய சொத்து. இதை யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும்" என்பதை அனைவருக்கும் தெளிவு படுத்துகிறார்.
கதிர் சவால்:
வளவனை சென்று சந்திக்கிறான் கதிர். ஜீவானந்தம் கதையை நான் தான் முடிப்பேன் என கதிர் சவால் விடுகிறான். "ஜீவானந்தம் இருக்கும் அட்ரஸ் கூட எனக்கு தெரியும். அவன் அவனோட பொண்ணு கூட திண்டுக்கல் கிட்ட இருக்கான். உங்க அண்ணி ஈஸ்வரிக்கும் ஜீவனந்தத்துக்கும் சம்பந்தம் இருப்பது கூட எனக்கு தெரியும். நீயே ஜீவானந்தத்தை போட்டு தள்ளு அந்த சமயத்தில் நானும் உன்னோடு இருப்பேன்" என்கிறார் வளவன்.
ஜனனி, ரேணுகா, ஈஸ்வரி மற்றும் நந்தினி நால்வரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த சமயத்தில் சக்தி வந்து பிசினஸ் தொடங்க அப்பளை பண்ண லோன் தொகை அக்கவுண்டுக்கு வந்து விட்டது என்கிறான். அதுதான் நேற்றைய எதிர் நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
குணசேகரன் ஆதிரையையும், கரிகாலனையும் ஹனிமூனுக்கு அனுப்புவது குறித்து கதிரிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். "எந்த ஊருல ஏற்பாடு பண்ணி இருக்க?" என குணசேகரன் கதிரிடம் கேட்கிறார். "கொடைக்கானலில் தான்" என கதிர் சொல்ல கரிகாலன் "அய்ய" என்கிறான். "ஹனிமூனுக்கு லண்டன் போகலாம் என பிளான் பண்ணி வச்சு இருந்தியா என்ன?" என ஞானம் கேட்கிறான். "நீங்க அப்படியே அனுப்பி வைச்சுட்டாலும். சும்மாவே எச்சி கையாள காக்கா ஓட்ட மாட்டீங்க" என நக்கல் செய்கிறான் கரிகாலன்.
அந்த சமயத்தில் சக்தியும் ஜனனியும் சந்தோஷமாக வந்து "புதுசா கம்பெனி ஆரம்பிச்சு இருக்கோம். நீ தான் அம்மா நல்ல நாள் பார்த்து சொல்லணும்" என விசாலாட்சியிடம் சொல்கிறான் சக்தி. விசாலாட்சி அம்மாவும் மலர்ந்த முகத்துடன் "பார்த்து சொல்றேன்" என சொல்கிறார். கடுப்பான குணசேகரன் "யார் வீட்ல வந்து யாரு கடைய போடுறது" என்கிறார். அனைவரும் சக்தியையும் ஜனனியையும் பார்த்து முறைக்கிறார்கள். இது தான் இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.