மேலும் அறிய

Etir neechal Arun: அசினுக்கு மகனாக நடித்தவர் எதிர் நீச்சல் அருணா! - அடடே இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா சாணக்யா?

எதிர் நீச்சல் தொடரில் அருண் கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமான நடிகர் சாணக்யா பல படங்கள், விளம்பரங்கள் மற்றும் தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் டி.ஆர்.பி ரேட்டிங் வரிசையின் அடிப்படையில் முன்னிலையில் இருக்கும் தொடர் எதிர் நீச்சல். மிகவும் பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார் அதன் இயக்குனர் திருச்செல்வம். 

ஆணாதிக்கம் நிறைந்த ஒரு குடும்பத்தில் படித்த பட்டதாரி பெண்களாக தேடி திருமணம் செய்து அவர்களை வீட்டில் அடிமைகளை போல நடத்தும் ஒரு கதாபாத்திரம். அடக்கு முறையை முறியடிக்கும் ஒரு பெண்ணின் பயணத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது எதிர் நீச்சல் தொடர். 

Etir neechal Arun: அசினுக்கு மகனாக நடித்தவர் எதிர் நீச்சல் அருணா! - அடடே இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா சாணக்யா?

இந்த தொடரில் நாளுக்கு நாள் பரபரப்பு அதிகமாகி வருகிறது. அந்த வகையில் கடந்த சில வாரங்களாக மிகவும் ஸ்வாரஸ்யமான கட்டத்தில் ஒளிபரப்பானது ஆதிரை அருண் திருமணம். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அருண் - ஆதிரை திருமணம் கடைசியில் நடைபெறாமல் போனது ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது. இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடர் இல்லதரிசிகள் மட்டுமின்றி குடும்ப தலைவர்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் கூட மிகவும் ஆவலாக பார்த்து வருகிறார்கள். 

இந்த சீரியலில் அருண் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் சாணக்யா சிறு வயது முதலே படங்கள், விளம்பரங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார். நடிகை கீதா ஸ்ரீயின் மகனான சாணக்யா முதலில் நடித்தது மெட்டி ஒலி சீரியலில் கோபி - விஜயலட்சுமியின் மகனாக நடித்திருந்தார். சூர்யா - அசின் நடிப்பில் சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்ற 'கஜினி' படத்தில் அசின் நடித்த விளம்பர படம் ஒன்றில் அவரின் மகனாக ஒரு காட்சியில் தோன்றியிருப்பார். ஹீரோவாக ஜெய் நடித்த 'அவள் பெயர் தமிழரசி'  படத்தில் ஜெய்யின் சிறு வயது கதாபாத்திரமாக  ஒரு சில காட்சியில் நடித்திருந்தார். அஜித் நடித்த பரமசிவம் படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  

சின்னத்திரை தொடர் மற்றும் படங்களில் நடித்த சாணக்யா பல விளம்பரங்களிலும் தோன்றியுள்ளார். தற்போது எதிர் நீச்சல் தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு முகமாக மாறியுள்ளார். 

எதிர் நீச்சல் தொடரில் ஆதிரைக்கு கரிகாலனுடன் கட்டாய திருமணம் நடத்த பிறகும் அருணுடன் ஆதிரை நிச்சயம் சேருவார் என ரசிகர்கள் இன்னும் எதிர்பார்க்கிறார்கள். இந்த தொடர் மூலம் மேலும் பல வாய்ப்புகள் சாணக்யாவுக்கு நிச்சயம் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamil Pudhalvan Scheme: போடு வெடிய: மாணவர்களுக்கும் ஆகஸ்ட் முதல் மாதாமாதம் ரூ.1000: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு- விவரம்
Tamil Pudhalvan Scheme: போடு வெடிய: மாணவர்களுக்கும் ஆகஸ்ட் முதல் மாதாமாதம் ரூ.1000: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு- விவரம்
Trai Mobile Number: ரைட்ரா, இனி ரீசார்ஜ் மட்டும் போதாதாம்..! மொபைல் நம்பருக்கும் கட்டணம்? - TRAI புதிய விதி சொல்வது என்ன?
ரைட்ரா, இனி ரீசார்ஜ் மட்டும் போதாதாம்..! மொபைல் நம்பருக்கும் கட்டணம்? - TRAI புதிய விதி என்ன?
Breaking News LIVE: குவைத் தீ விபத்து : 7 தமிழர்களின் உடல்கள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பு
Breaking News LIVE: குவைத் தீ விபத்து : 7 தமிழர்களின் உடல்கள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பு
"எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க படிங்க" - ஐம்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Ramadoss vs Anbumani  : வேண்டும்.. வேண்டாம்..ராமதாஸ் vs அன்புமணி! குழப்பத்தில் பாமக!Tamilisai Vs Annamalai : தமிழிசைக்கு அழுத்தம்? மேடையில் நடந்தது என்ன? பரபரப்பு விளக்கம்Yediyurappa Arrest? | சிறுமிக்கு பாலியல் தொல்லை எடியூரப்பாவுக்கு கைது வாரண்ட்!Madurai Muthu Help Handicap People | லாரான்ஸ், பாலா வரிசையில்..   நடிகர் மதுரை முத்து!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Pudhalvan Scheme: போடு வெடிய: மாணவர்களுக்கும் ஆகஸ்ட் முதல் மாதாமாதம் ரூ.1000: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு- விவரம்
Tamil Pudhalvan Scheme: போடு வெடிய: மாணவர்களுக்கும் ஆகஸ்ட் முதல் மாதாமாதம் ரூ.1000: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு- விவரம்
Trai Mobile Number: ரைட்ரா, இனி ரீசார்ஜ் மட்டும் போதாதாம்..! மொபைல் நம்பருக்கும் கட்டணம்? - TRAI புதிய விதி சொல்வது என்ன?
ரைட்ரா, இனி ரீசார்ஜ் மட்டும் போதாதாம்..! மொபைல் நம்பருக்கும் கட்டணம்? - TRAI புதிய விதி என்ன?
Breaking News LIVE: குவைத் தீ விபத்து : 7 தமிழர்களின் உடல்கள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பு
Breaking News LIVE: குவைத் தீ விபத்து : 7 தமிழர்களின் உடல்கள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பு
"எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க படிங்க" - ஐம்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
Baby Anju: வெளித்தோற்றத்தை பார்த்து வாய்ப்பு.. தமிழ் சினிமாவை கடுமையாக சாடிய பேபி அஞ்சு!
வெளித்தோற்றத்தை பார்த்து வாய்ப்பு.. தமிழ் சினிமாவை கடுமையாக சாடிய பேபி அஞ்சு!
Amma Unavagam: புதுப்பொலிவு பெறும் சென்னை அம்மா உணவகங்கள்.. புதிய உணவுகளும் விரைவில் அறிமுகம்!
புதுப்பொலிவு பெறும் சென்னை அம்மா உணவகங்கள்.. புதிய உணவுகளும் விரைவில் அறிமுகம்!
Latest Gold Silver Rate: மகிழ்ச்சியான செய்தி.. இன்னைக்கு தங்கம் விலை சரிவு.. விலை நிலவரம் இதோ..
Latest Gold Silver Rate: மகிழ்ச்சியான செய்தி.. இன்னைக்கு தங்கம் விலை சரிவு.. விலை நிலவரம் இதோ..
AFG Vs PNG, T20 Wolrdcup: ரசிகர்கள் ஷாக் - உலகக் கோப்பையில் இருந்து நியூசிலாந்து வெளியேற்றம் - சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான்
AFG Vs PNG, T20 Wolrdcup: ரசிகர்கள் ஷாக் - உலகக் கோப்பையில் இருந்து நியூசிலாந்து வெளியேற்றம் - சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான்
Embed widget