Marimuthu: அவருக்கு பதிலா வேறு ஒருத்தரை ஈஸியா எடுக்க முடியாது... உண்மையை உடைத்த திருச்செல்வம்!
“ஆதி குணசேகரன் என்பது நடிகர் மாரிமுத்துவுக்குரியது. அவர் ஒரு பெஞ்ச்மார்க் செட் செய்து விட்டார். அது அப்படியே இருக்கட்டும்” - இயக்குநர் திருச்செல்வம்
![Marimuthu: அவருக்கு பதிலா வேறு ஒருத்தரை ஈஸியா எடுக்க முடியாது... உண்மையை உடைத்த திருச்செல்வம்! Director Thiruselvam opens up about the replacement for Marimuthu in Adhi gunasekran character Marimuthu: அவருக்கு பதிலா வேறு ஒருத்தரை ஈஸியா எடுக்க முடியாது... உண்மையை உடைத்த திருச்செல்வம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/23/3437fa2d709454e460ce33f84e7e23011695460245674224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சன் டிவியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பானாலும் டி.ஆர்.பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் சீரியல் எதிர்நீச்சல். 'கோலங்கள்' சீரியல் மூலம் பிரபலமான இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலின் பிரதான கதாபாத்திரமான ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து சமீபத்தில் மாரடைப்பால் காலமானார். அவரின் இழப்பு திரைப் பிரபலங்கள், சக நடிகர்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இன்றும் நடிகர் மாரிமுத்துவின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.
சமீபத்தில் அவருக்கு புகழஞ்சலி விழா ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் திருச்செல்வம் நடிகர் மாரிமுத்து பற்றி பல சுவாரஸ்யமான நல்ல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். நடிகர் மாரிமுத்து பாராட்டுகளை அதிகம் விரும்பக் கூடியவர். இந்த உலகமே அவரை நல்ல நடிகன் என ஏற்று கொண்டலும் "நான் நல்லா நடிக்கிறேன் இல்ல சார்" என அடிக்கடி கேட்டு கொண்டே இருப்பார்.
ஹியூமர் சென்ஸ் அதிகம் கொண்டவர். அவரை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டாடத் தொடங்கியதில் அவருக்கு மிகவும் சந்தோஷம். மீம்ஸ் கிரீடர்களுக்கு நல்ல ஒரு கன்டென்ட் கொடுப்பவராக மாறினார். அதிலும் “யம்மா ஏய்!” மூலம் இளைஞர்களின் கவனம் பெற தொடங்கினார். சினிமா நடிகர்களுக்கு கூட கிடைக்காத ஒரு அங்கீகாரம்.
எதிர் நீச்சல் சீரியலில் அவருக்கு மாரடைப்பு வருவதாகவும் பக்கவாதம் வருவதாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டது முழுக்க முழுக்க நடிப்பிற்காகவே. அதிலும் அவர் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக அவர் அப்படி அதிகப்படியாக நடிப்பது போல தான் காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது. இது எதேச்சையாக நடந்த சம்பவம் தான்.
ஆதி குணசேகரான மாரிமுத்து நடித்த அந்த கதாபாத்திரத்தில் வேறு யாரையும் வைத்து பார்க்க முடியாது என்பது தான் ரசிகர்களின் ஏக்கமாக இருக்கிறது. அதற்கு காரணம் அவரை ஒரு சீரியல் கதாபாத்திரமாக பார்க்காமல் அதற்கு மேலும் ஒரு உணர்வோடு பார்த்து விட்டார்கள். எங்களுக்கே அவருக்கு பதிலாக வேறு ஒருவரை நடிக்க வைத்து அடுத்த காட்சிகளை நகர்த்த மனம் வரவில்லை.
தற்போது ஓடிக்கொண்டு இருக்கும் காட்சிகளில் அவரின் இருப்பு உள்ளது. போலியாக அவரின் இருப்பை வைக்க முடியவில்லை. அந்த வீட்டை ரூல் பண்ண ஒருவரை ஈஸியா எடுக்க விரும்பல. அடுத்தடுத்த காட்சிகளை அதற்கு ஏற்றாற்போல் தான் நகர்த்தி வருகிறோம். தற்போது அவரை காணவில்லை அவரை நாங்கள் தேடி கொண்டு இருக்கிறோம். இப்படி தான் காட்சிகள் நகர்ந்து வருகிறது.
கடந்த பத்து நாட்களில் இன்றைய எபிசோடில் மீண்டும் குணசேகரனை பார்த்து விட மாட்டோமா என ரசிகர்கள் ஏங்குகிறார்கள். அவரின் ரீ கலெக்ஷன் காட்சிகளை வைத்து நகர்த்த வேண்டும் என்றால் இன்னும் 100 எபிசோட் கூட நகர்த்த முடியும். அது மனிதம் அல்ல. அந்த காட்சிகள் அழுத்தத்தை தான் கொடுக்கிறதே தவிர ரசனைக்குரிய விஷயமாக இல்லை.
குணசேகரனுக்கும் குடும்பத்திற்குமான காட்சிகள் பல முடிவு செய்யப்பட்டு இருந்தது. மகளுடனும், மகனுடனுமான உரையாடல் வர இருந்தது. அதற்கான காட்சிகளை எடுக்க வேண்டி இருந்தது. ஆனால் அவர் படங்களில் பிஸியாக இருந்ததால் டேட்ஸ் கிடைக்கவில்லை.
மகன் பைக் வாங்கி வருவது போன்ற காட்சிகளில் அவர் பேச வேண்டியது இருந்தது. அவர் பேச முடியாவிட்டாலும் அவர் கேக்கணும் இருக்கணும் என நான் நினைத்தேன். அதற்காக தான் அந்த பால்கனி காட்சியில் அவரின் ரீ கலெக்ஷன் காட்சிகளை வைத்தேன். அந்த காட்சி ஏராளமானவர்களை உலுக்கியது” என்று பேசியுள்ளார் இயக்குநர் திருச்செல்வம்.
“ஆதி குணசேகரன் என்பது நடிகர் மாரிமுத்துவுக்குரியது. அவர் ஒரு பெஞ்ச்மார்க் செட் செய்து விட்டார். அது அப்படியே இருக்கட்டும்” என இயக்குநர் திருச்செல்வம் தெரிவித்துள்ளதால் இனி ஆதி குணசேரனுக்கு ரீபிளேஸ்மென்ட் இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)