Cook with Comali season 4 winners list: லீக்கானது குக் வித் கோமாளி சீசன் 4 வின்னர் லிஸ்ட்... இவரா வின்னர்? ரசிகர்கள் ஆச்சரியம்!
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் வெற்றி பெற்ற போட்டியாளர்களின் விவரம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

புதுமையான ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்புவதில் முன்னணியில் இருப்பவர்கள் விஜய் டிவி. அந்த வகையில் இதுவரையில் எந்த ஒரு தமிழ் தொலைக்காட்சிகளிலும் பார்த்திராத ஒரு புதுமையான குக்கிங் கம் காமெடி ஷோ தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி. உலக அளவில் ரசிகர்களை பெற்றுள்ள இந்த நிகழ்ச்சி பலருக்கும் மிக பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டர் நிகழ்ச்சி என கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மூன்று சீசன்களாக மாபெரும் வெற்றியை பெற்ற இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்களும் கோமாளிகளும் மட்டுமின்றி நடுவர்களும் செய்யும் லூட்டிகளும் சேட்டைகளும் ஏராளம். அதுவே இந்த நிகழ்ச்சியை இன்று வரை கலகலப்பாக வைத்திருக்கிறது. தொடர்ச்சியாக டி. ஆர். பி ரேட்டிங்கில் முன்னணி வகிக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இறுதி சுற்று நடந்து முடிந்துள்ளது என்றும் அதில் முதல் மூன்று இடங்களை பிடித்த போட்டியாளர்களின் விவரம் தற்போது இணையத்தில் வெளியாகி மிகவும் வேக வேகமாக பரவி வைரலாகி வருகிறது.
விசித்திரா முதல் நபராக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். அவரை தொடர்ந்து மைம் கோபி, சிவாங்கி, ஸ்ருஷ்டி மற்றும் கிரண் இந்த போட்டிக்கு நேரடியாக தேர்வானார்கள். வைல்ட் கார்டு சுற்றில் வெற்றி பெற்ற ஆண்ட்ரியன் என மொத்தம் ஆறு பேர் இருந்து சுற்றில் போட்டியிட்டனர். இருந்து இறுதி சுற்றில் வெற்றி பெற்ற போட்டியாளர்கள் யார் என்ற விவரம் இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த தகவலின் படி மைம் கோபி டைட்டில் வின்னராக பட்டம் வென்றுள்ளார் என்றும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை ஸ்ருஷ்டி மற்றும் விசித்திரா பெற்றுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிவாங்கி மற்றும் ஆண்ட்ரியன் இந்த போட்டியில் எந்த இடத்தையும் பிடிக்கவில்லை என்பது அவர்களின் ரசிகர்களுக்கு மன வருத்தத்தை கொடுத்துள்ளது. இருப்பினும் அதிகாரபூர்வமான தகவல் இன்னும் வெளியாகாததால் இந்த தகவல் உண்மையானதா இல்லை வெறும் வதந்தியா என்பது தெரியவில்லை. இறுதி சுற்று முடிவு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிறகே தெரியவரும்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த மூன்று சீசன்களாக மிகவும் ஃபேவரட் கோமாளியாக இருந்த சிவாங்கி இந்த நான்காவது சீசனில் குக்காக புரொமோஷன் பெற்று மிக சிறப்பாக சமைத்து பல முறை நடுவர்களின் பாராட்டுகளை குவித்தார். இந்த 4வது சீசனோடு இனிமேல் இந்த போட்டியில் கலந்து கொள்ள போவதில்லை என ஏற்கனவே சிவாங்கி கூறியிருந்தார். சீசன் 4 இறுதி சுற்று செட்டில் கடைசி நாள் அன்று எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை பகிர்ந்து நெகிழ்ச்சியான ஒரு பதிவை போஸ்ட் செய்துள்ளார் சிவாங்கி. "4 வருடங்களாக ஏகப்பட்ட மெமரிஸ், எக்கச்சக்கமான ட்ரீம் மொமெண்ட்ஸ். இவை அனைத்துக்கும் குட் பை சொல்வது கடினமாக இருந்தது" என போஸ்ட் செய்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

