CWC 4 Finalist: குக் வித் கோமாளி ஃபைனல்.. முதல்முறையாக தேர்வான சிவாங்கி.. குவியும் வாழ்த்து
குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒரு வழியாக முடிவுக்கு வரவுள்ள நிலையில், ஃபைனலுக்கு சென்ற 5 பேர் யார் என்ற விவரத்தை காணலாம்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒரு வழியாக முடிவுக்கு வரவுள்ள நிலையில், ஃபைனலுக்கு சென்ற 5 பேர் யார் என்ற விவரத்தை காணலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி ஷோக்களில் அனைவராலும் பார்க்கப்படும் நிகழ்ச்சி என்றால் அது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி தான். மக்களின் பேராதரவை பெற்ற இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதற்கு காரணம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் அமோகமான வாய்ப்புகள் வரும்.
இந்த நிகழ்ச்சியில் விசித்ரா, மைம் கோபி, சிவாங்கி, ஸ்ருஷ்டி டாங்கே, கிரண், ஆண்ட்ரியனா, கஜேஷ், ஷெரின், விஜே விஷால், ராஜ் அய்யப்பா, காளையன், கிஷோர் ராஜ்குமார் உள்ளிட்ட பலரும் குக் ஆக பங்கேற்றனர். கோமாளிகளாக புகழ், சுனிதா, ஜிபி முத்து, குரேஷி, மோனிஷா, தங்கத்துரை, சிங்கப்பூர் தீபன், சிபா, ஒட்டேரி சிவா, மணிமேகலை, பரத், சரத், சக்தி, வினோத் என பலரும் பங்கேற்றனர்.
முன்னதாக நடந்த டிக்கெட் டூ பினாலே சுற்றில் வெற்றி பெற்று நடிகை விசித்திரா நேரடியாக ஃபைனலுக்குள் சென்றார். இதனைத் தொடர்ந்து இந்த வாரம் அரையிறுதி போட்டிகள் நடைபெற்றது. இதில் கிரண், மைம் கோபி, சிவாங்கி, ஸ்ருஷ்டி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் 3 பேர் ஃபைனலுக்கு செல்ல உள்ளதாக நடுவர்கள் செஃப் தாமு, வெங்கடேஷ் பட் இருவரும் அறிவித்தனர். இரண்டாவது இடத்திற்கு மைம் கோபி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 3வதாக சிவாங்கி, நான்காவதாக ஸ்ருஷ்டி டாங்கே தேர்வாக அனைவரும் கிரண் இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக நினைத்தனர்.
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஐந்தாவதாக ஃபைனலுக்கு தேர்வானார் கிரண். இதன்மூலம் ஃபைனலுக்கு தேர்வான 5 பேருக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதில் சிவாங்கி முதல்முறையாக ஃபைனலுக்கு தேர்வாகியுள்ளார். கடந்த 3 சீசன்களும் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
முன்னதாக ஷிவாங்கிகாகதான் விஷாலை எலிமினேட் செய்தனர். ஸ்ருஷ்டியை கார்னர் செய்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதற்கு சிவாங்கி, ’நாங்கள் பல தியாகங்களை மேற்கொள்கிறோம். நாங்கள் உங்களை மகிழ்விக்க கடினமாக உழைக்கிறோம்.மற்றவர்களின் கடின உழைப்பை குறைத்து மதிப்பிடுவது ஒரு சுலபமான செயலாகும் என பதிலடி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.