Bhagyalakshmi Serial: கோபியின் செயலால் உச்சக்கட்ட கோபத்தில் பாக்யா...இன்றைய எபிசோட் அப்டேட் இதோ..!
Bhagyalakshmi Serial Written Update Today (07.12.2022): கோபி இனியாவை ஸ்கூலில் இருந்து அழைத்துக் கொண்டு வருகிறார். இனியாவோ அம்மாவை பார்த்ததும் அங்கேயே நின்று கண்கலங்குகிறார்.
![Bhagyalakshmi Serial: கோபியின் செயலால் உச்சக்கட்ட கோபத்தில் பாக்யா...இன்றைய எபிசோட் அப்டேட் இதோ..! bhagyalakshmi serial written update today 7th december 2022 episode 680 Baakiyalakshmi gets emotional when Gopinath restricts Iniya to speak with her Bhagyalakshmi Serial: கோபியின் செயலால் உச்சக்கட்ட கோபத்தில் பாக்யா...இன்றைய எபிசோட் அப்டேட் இதோ..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/07/835bba7f8991141c8eefd4bfdfbda8b41670383485365572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாக்கியலட்சுமி சீரியலில் ஏரியா செகரட்டரி கோபியிடம் பாக்யா அசோஷியேஷன் தேர்தலில் நிற்கும் தகவலை கூறும் காட்சிகள் இடம் பெறுகிறது.
எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில், பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த சீரியலின் ஹீரோ கோபி, குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல், அவரோடு சகித்து கொண்டு வாழுகிறார்.
அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது, அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில், கடந்த சில மாதங்களாக எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்து கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார். அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இதன் பின்னர் வீட்டில் திட்டியதால் கோபியுடன் இனியா செல்கிறார். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.
போட்டுக் கொடுக்கும் செல்வி
ஏதேச்சையாக ஏரியா செகரட்டரியை கோபி சந்திக்கிறார். அவரிடன் ஏன் மீட்டிங்கிற்கு வரவில்லை என கேட்டு விட்டு, இந்த முறையும் ஏரியா அசோஷியேசன் தேர்தலில் நீங்க தானே நிற்க போறீங்க? என கேட்கிறார். அதற்கு உங்களுக்கு விஷயமே தெரியாதா..உங்க முன்னாள் மனைவி பாக்யா தான் நிற்க போறதா சொல்லிருக்காங்க என செகரட்டரி தெரிவிக்க கோபி அதிர்ச்சியடைகிறார். உடனே அவர் பாக்யாவுக்கு அதெல்லாம் ஒன்னும் தெரியாது என சொல்லி அவரைப் பற்றி தகுதிக்குறைவாக பேசுகிறார். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் செல்வி வீட்டுக்கு சென்று பாக்யா குடும்பத்தாரிடம் விஷயத்தை சொல்ல, பாக்யா டென்ஷனாகிறார்.
இனியாவை பார்க்கும் பாக்யா
இதனையடுத்து பாக்யா ஆர்டர் ஒன்றிற்காக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, அவர்கள் கோபி விட்டுச் சென்றதைப் பற்றி பேசுகிறார். இதனால் கோபமாகும் பாக்யா அவர்கள் முகத்தில் அடித்தவாறு பேசுகிறார். அப்போது கோபி இனியாவை ஸ்கூலில் இருந்து அழைத்துக் கொண்டு வருகிறார். இனியாவோ அம்மாவை பார்த்ததும் அங்கேயே நின்று கண்கலங்க, கோபி அவரை வலுக்கட்டாயமாக உள்ளே அழைத்து செல்கிறார்.
ஆர்டர் கொடுக்க வந்தவர்கள் இனியா மேல கோபி நிறைய பாசம் வச்சிருக்காரு போல. நாங்க எல்லாம் இப்படி என் பொண்ணு போயிருந்தா அவ்வளவு தான் நொந்து போயிருப்போம். நீ எப்படி தான் தைரியமா இருக்கியோ என கூற, உங்களோட ஆர்டரை பண்றதுக்கு தான் என அவர்களுக்கு பாக்யா பதிலடி கொடுக்கிறார்.
செழியன் - எழில் சண்டை
அமிர்தா விஷயத்தில் எழில் செழியனிடம் எப்படி பாட்டியிடம் சொல்லலாம் என கூறி வாக்குவாதம் செய்கிறார். எழிலுக்கு ஆதரவாக ஜெனியும் வர செழியன் தான் பண்ணது தப்பு தான் என மன்னிப்பு கேட்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)