மேலும் அறிய

Bhagyalakshmi Serial: நானா..ராதிகாவா..யார் முக்கியம்?..இனியா கேட்ட கேள்வி; அரண்டு போன கோபி!

Bhagyalakshmi Serial Written Update Today (25.11.2022): கோபி வீட்டுக்கு வந்ததும், இனியாவின் முகம் ஒருமாதிரி இருப்பதை கண்டு என்னவென்று மயூவிடம் விசாரிக்க, அவள் இருவருக்கும் சண்டை என சொல்கிறாள்.

பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தி எதிர்பார்த்தபடியே ராதிகா, இனியா இடையே உச்சக்கட்ட சண்டை வெடித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி

விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.

இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த சீரியலின் ஹீரோ கோபி, குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல், அவரோடு சகித்து கொண்டு வாழுகிறார்.

அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது, அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில மாதங்களாக  எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. 

குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்து கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார். அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இதன் பின்னர்  வீட்டில் திட்டியதால் கோபியுடன் இனியா செல்கிறார். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.

பாக்யாவுக்கு கிடைத்த வாய்ப்பு

மண்டப ஓனர் ராஜசேகரை பாக்யாவும், செல்வியும் சந்திக்க செல்கின்றனர். அப்போது மண்டபத்தில் எல்லா நாளும் ஆர்டர் இருக்காது என்பதால் தன் நண்பரின் ஆபீஸ் அமைந்துள்ள கட்டிடத்தில் உள்ள கேண்டீன் பொறுப்பை உங்களுக்கு வழங்க விரும்புவதாகவும், நீங்க பண்ண ரெடியா எனவும் ராஜசேகர் கேட்டு பாக்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார். முதலில் சம்மதம் சொல்ல தயங்கும் பாக்யா, செல்வி அறிவுறுத்தலாலும், ராஜசேகர் தன் மீது வைத்த நம்பிக்கையாலும் சம்மதம் தெரிவிக்கிறார். 

தொடங்கிய சண்டை 

கோபி வீட்டில் மயூவுக்கு இனியா பாடம் சொல்லிக் கொடுக்கிறார். அப்போது அங்கு வரும் ராதிகா, இனியா காஃபி சாப்பிடாமல் இருப்பதை கண்டு ஏன் குடிக்கல என கேட்கிறார். எனக்கு காபி பிடிக்காது என இனியா சொல்ல, அப்ப என்ன பிடிக்கும்ன்னு சொன்னாதான் எனக்கு தெரியும் என ராதிகா கேட்கிறார். நீங்க யாரு நான் ஏன் உங்ககிட்ட சொல்லணும் என்ற இனியாவின் பதிலை கேட்டு அதிர்ச்சியடையும் ராதிகா, உங்க அம்மான்னா இப்படித்தான் மரியாதை இல்லாம பேசுவியா என எதிர் கேள்வி கேட்கிறார். 

நீங்க ஒண்ணும் எங்க அம்மா இல்லையே என சொல்ல ராதிகா கோபத்தில் கிச்சனுக்கு சென்று காஃபி கப்பை தூக்கி எறிகிறார். இதற்கிடையில் ஈஸ்வரி கோவிலுக்கு போகும் போது செயின் பறிக்கும் திருடன் தன்னை நோக்கி வந்ததாகவும், தான் சத்தம் போட்டதால் ஓடிவிட்டதாகவும் குடும்பத்தினரிடம் கூறுகிறார். இதனால் பயந்துபோன அவருக்கு பாக்யா, எழில்,ஜெனி தைரியம் சொல்கின்றனர். பின்னர் பாக்யா கேண்டீன் காண்ட்ராக்ட் கிடைத்த மகிழ்ச்சி செய்தியை குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொள்கிறார். 

கடுப்பான இனியா - ராதிகா 

கோபி வீட்டுக்கு வந்ததும் இனியாவின் முகம் ஒருமாதிரி இருப்பதை கண்டு என்னவென்று மயூவிடம் விசாரிக்க, அவள் இருவருக்கும் சண்டை என சொல்கிறாள். உடனே ராதிகா என்ன பண்ணா? இனியா என கோபி கேட்க, கிச்சனில் இருந்து ஆவேசத்துடன் வரும் ராதிகா, எப்ப பாரு நான் என்ன பண்ணன்னு மட்டும் கேக்குறீங்க..இவதான் எல்லாமே பண்ணா என இனியா மீது குற்றம் சாட்டுகிறார்.

நான் காஃபி கொடுத்தேன் குடிக்கல என ராதிகா சொல்ல, அவளுக்கு அது பிடிக்காது என கோபி பேச, என்கிட்ட பேசுனாதானே என்னன்னு தெரியும். நான் என்ன எதிரியா என ராதிகா கேள்வி மேல் கேள்வியெழுப்புகிறார். ஆமா நீங்க எதிரி தான். நீங்க யாரு என்ன கேள்வி கேட்க, டாடி கேட்டா பதில் சொல்வேன். உங்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை என இனியா எகிறுகிறார். அவரை சமாதானப்படுத்த வந்த கோபியிடம், இப்ப சொல்லுங்க உங்களுக்கு நான் முக்கியமா? இல்ல ராதிகா முக்கியமா? என இனியா கேட்க அவர் ஆடிப்போகிறார். 

எனக்கு நீதான்டா ஃபர்ஸ்ட் என இனியாவிடம் சொல்ல ராதிகா கோபத்தின் உச்சிக்கே செல்லும் காட்சிகளோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget