(Source: ECI/ABP News/ABP Majha)
Bhagyalakshmi Serial: ராமமூர்த்தியை தொடர்ந்து கோபி வீட்டுக்கு சென்ற செழியன்.. கடைசியில் நடந்த எதிர்பாராத ட்விஸ்ட்..!
Bhagyalakshmi Serial Written Update Today (21.11.2022): இனியா அங்க வந்தா எல்லாரும் என்னை திட்டுவீங்களே. நான் வரல என தெரிவிக்கிறார். இதனால் கடுப்பாகி செழியன் மீண்டும் வீட்டுக்கே செல்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் இனியா, ராமமூர்த்தியை அழைத்து வர செழியன் கோபி வீட்டுக்கு செல்லும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழுகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது, அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில மாதங்களாக எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்துக் கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார். அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இதன் பின்னர் நடக்கும் காட்சிகள் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.
படாதபாடுபடும் கோபி
ராமமூர்த்தி வீட்டை விட்டுச் சென்ற இனியாவை மீண்டும் கூப்பிட்டு வர கோபி வீட்டுக்கு பேக்குடன் செல்கிறார். இதனைக் கண்டு ராதிகா அதிர்ச்சியடைகிறார். பின்னர் ரூமுக்குள் சென்று தனியாக இருக்கும் அவரிடம் கோபி பேசுகிறார். அப்போது இனியா வந்ததுல ஒரு அர்த்தம் இருக்கு. உங்க அப்பா வந்தது பயமா இருக்குன்னு ராதிகா சொல்ல, அவர் சண்டை போட வந்த மாதிரி தெரியல. வந்தவரை போய் ஏன் வந்தீங்கன்னு கேட்கவா முடியும். அதனால ஏதாவது பிரச்சனை வராம நான் பார்த்துக்குறேன் என கோபி நம்பிக்கை தெரிவிக்கிறார். இதற்கிடையில் உங்களை கல்யாணம் பண்ணதுல இருந்து பிரச்சனையா இருக்கு. மயூ வேற நடக்குறதை பார்த்து பயப்படுவா என சொல்ல, கோபி என்ன எதுக்கெடுத்தாலும் இப்படியே சொல்ற என டென்ஷனாகிறார்.
செழியன் எடுத்த முடிவு
வீட்டில் எல்லாரும் இனியா மற்றும் ராமமூர்த்தி போனதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். செல்வியை போய் 2 பேரையும் கூட்டிட்டு வா என ஈஸ்வரி சொல்ல, செழியன் நான் போகிறேன் என சொல்லி கோபி வீட்டுக்கு செல்கிறார். கோபி அவரை பார்த்ததும் நீயும் என்கூடவே வந்துட்டியா. இப்பவாது என்ன பத்தி புரிஞ்சிக்கிட்டியே என சொல்ல, தான் இனியா, தாத்தாவை கூட்டி செல்ல வந்ததாக கூறுகிறார். ஆனால் இனியா அங்க வந்தா எல்லாரும் என்னை திட்டுவீங்களே. நான் வரல என தெரிவிக்கிறார். இதனால் கடுப்பாகி செழியன் மீண்டும் வீட்டுக்கே செல்கிறார்.
ஈஸ்வரியை தடுத்த பாக்யா
செழியன் சும்மா வருவதைப் பார்த்து ஈஸ்வரி டென்ஷனாகிறார். நான் கூப்பிட்டு 2 பேரும் வரலை என செழியன் கூற, நானே போய் கூப்பிட்டு வாரேன் என ஈஸ்வரி கிளம்புகிறார். அவரை தடுக்கும் பாக்யா இனியா அவ விருப்பப்பட்டு தான் போயிருக்கா. அவளுக்கு எங்க சந்தோஷாமா இருக்கோ அங்கேயே இருக்கட்டும் என சொல்கிறார். இதனையடுத்து ராமமூர்த்தி, இனியா இருவரும் கேரம் விளையாட அதை மயூ ஏக்கத்தோடு பார்ப்பதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.