மேலும் அறிய

Bhagyalakshmi Serial: ராதிகாவால் நிம்மதி இழந்த கோபி...பாக்யா வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Bhagyalakshmi Serial Written Update Today (10.11.2022): பாக்யா வீட்டில் செழியன் ஜெனியை விழுந்து விழுந்து கவனிக்க இனியா, ஈஸ்வரி, பாக்யா, ராமமூர்த்தி என அனைவரும் ஜாலியாக பேசிக்கொண்டிருக்கின்றனர்.

பாக்கியலட்சுமி சீரியலில் வர்ஷின் அம்ரிதா வீட்டுக்கு சென்று புதிய பிரச்சனை ஒன்றை கிளப்பும் காட்சிகள் இடம் பெறுகிறது. 

எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி

விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.

இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழுகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது, அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில மாதங்களாக  எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.

இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்துக் கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார். அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இதன் பின்னர் நடக்கும் காட்சிகள் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம். 

நிம்மதி இழந்த கோபி 

இனியா தன்னை ஸ்கூலில் திட்டி தள்ளி விட்டதை எண்ணி மயூ சோகத்துடன் காணப்படுகிறாள். அவளை ராதிகா சமாதானப்படுத்த அப்போது கோபி வருகிறார். மயூவிடம் ஏன் தூங்காம இருக்க என கேட்டுவிட்டு ராதிகாவிடம் பேச முயலும் போது அவர் முகம் ஒரு மாதிரி இருப்பதை காண்கிறார். உடனே  ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க  என கேட்க, மயூ ஸ்கூலில் நடந்ததை எல்லாம் சொல்கிறார். இனியா அப்படியா பண்ணா என கூறி, தான் மன்னிப்பு கேட்பதாகவும் கோபி மயூவிடம் தெரிவிக்கிறார். 

உடனே ராதிகா உங்களால நாங்க 2 பேரும் என்னென்ன கஷ்டம்லா படப்போறோமோ?, உங்களை கல்யாணம் பண்ணியிருக்கவே கூடாது என கோபத்தில் சொல்லிவிட்டு ரூமுக்குள் சென்று கதவை அடைத்துக் கொள்ள வழக்கம்போல அரெஞ்ச் மேரேஜ்லயும் நிம்மதி இல்ல, லவ் மேரேஜ்லயும் நிம்மதி இல்ல என புலம்புகிறார். 

அதிர்ச்சியில் எழில் 

பாக்யா வீட்டில் செழியன் ஜெனியை விழுந்து விழுந்து கவனிக்க எழில் கிண்டல் செய்கிறார். இனியா, ஈஸ்வரி, பாக்யா, ராமமூர்த்தி என அனைவரும் ஜாலியாக பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது ஈஸ்வரி எழில் நீயும் சீக்கிரம் கல்யாணம் பண்ணி குழந்தை பெத்து கொடுடா. நானும் தாத்தாவும் போறதுகுள்ள அவங்களை நல்ல வளர்த்துட்டு போய்டுறோம் என கூறிவிட்டு  வர்ஷினி கொண்டு வந்த ஸ்வீட் எடுத்துட்டு வா என பாக்யாவிடம் சொல்ல, அதைக்கேட்டு எழில் அதிர்ச்சியடைகிறார். 

மேலும் அவளை எங்களுக்கு பிடிச்சிருக்கு. அம்ரிதா கூட எங்களிடம் நடிக்கிற மாதிரி இருக்கும். ஆனால் இவ அப்படியில்லை என ஈஸ்வரி கூற, எழில் ஆடிப்போகிறார். உடனே இதை கவனித்த பாக்யா , வர்ஷினி சும்மா வந்துட்டு போனா  என சொல்லி சமாளிக்கிறார். மறுநாள் பாக்யா தனக்கு புதிய சமையல் ஆர்டர் வந்ததை பற்றி வீட்டில் தெரிவிக்கிறார். அப்போது ராமமூர்த்தி வீட்டுக்கு தேவையான பணத்தை என் பென்ஷன் காசில் இருந்து எடுத்துக்கலாமே  என சொல்கிறார். அதற்கு பாக்யா வேணும்னா உங்ககிட்டா கேட்கப்போறேன் என கூறுகிறார். 

வர்ஷினி செய்த சிறப்பான சம்பவம்

அம்ரிதா வீட்டுக்கு செல்லும் வர்ஷினி, அங்கு அவரின் அம்மா அப்பாவிடம் எழிலை நான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன் என கூறுகிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். அவங்க குடும்பம் எனக்கு பிடிச்சிருக்கு, எங்கப்பா கிட்ட பேசிட்டேன் என காரணங்களை அடுக்கி விட்டு கிளம்புகிறார். ஆனால் அப்படியெல்லாம் நடக்கவில்லை அம்ரிதா விளக்கமளிக்க, எதுவும் பேசாமல்  அம்மா, அப்பா இருவரும் எழுந்து செல்கின்றனர். நடந்ததை நினைத்து அம்ரிதா குழம்பி போவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எடப்பாடி முன்வைத்த நிபந்தனைகள்; ஓகே சொன்ன அமித்ஷா- கூட்டணி மீண்டும் உருவானது இப்படித்தான்!
எடப்பாடி முன்வைத்த நிபந்தனைகள்; ஓகே சொன்ன அமித்ஷா- கூட்டணி மீண்டும் உருவானது இப்படித்தான்!
EPS on Alliance: கூட்டணி கேள்விக்கு டென்ஷன்.. தேர்தல் நேரத்தில் திமுகவை விட்டு கட்சிகள் பிரியும்.. இபிஎஸ் அதிரடி...
கூட்டணி கேள்விக்கு டென்ஷன்.. தேர்தல் நேரத்தில் திமுகவை விட்டு கட்சிகள் பிரியும்.. இபிஎஸ் அதிரடி...
JNV Result 2025: ஜவஹர் நவோதயா நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
JNV Result 2025: ஜவஹர் நவோதயா நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
இபிஎஸ் வைத்த நிபந்தனைகள்! உறுதியளித்த அமித்ஷா! டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை!
இபிஎஸ் வைத்த நிபந்தனைகள்! உறுதியளித்த அமித்ஷா! டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எடப்பாடி முன்வைத்த நிபந்தனைகள்; ஓகே சொன்ன அமித்ஷா- கூட்டணி மீண்டும் உருவானது இப்படித்தான்!
எடப்பாடி முன்வைத்த நிபந்தனைகள்; ஓகே சொன்ன அமித்ஷா- கூட்டணி மீண்டும் உருவானது இப்படித்தான்!
EPS on Alliance: கூட்டணி கேள்விக்கு டென்ஷன்.. தேர்தல் நேரத்தில் திமுகவை விட்டு கட்சிகள் பிரியும்.. இபிஎஸ் அதிரடி...
கூட்டணி கேள்விக்கு டென்ஷன்.. தேர்தல் நேரத்தில் திமுகவை விட்டு கட்சிகள் பிரியும்.. இபிஎஸ் அதிரடி...
JNV Result 2025: ஜவஹர் நவோதயா நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
JNV Result 2025: ஜவஹர் நவோதயா நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
இபிஎஸ் வைத்த நிபந்தனைகள்! உறுதியளித்த அமித்ஷா! டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை!
இபிஎஸ் வைத்த நிபந்தனைகள்! உறுதியளித்த அமித்ஷா! டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை!
மீண்டும் கூட்டணி சேரும் அதிமுக - பாஜக? திமுகவுக்கு ஜாக்பாட்.. அப்போ தவெக நிலைமை? 
மீண்டும் கூட்டணி சேரும் அதிமுக - பாஜக? திமுகவுக்கு ஜாக்பாட்.. அப்போ தவெக நிலைமை? 
Trump Changes Election Rules: பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
Manoj Death Funeral: மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
Embed widget