Baakiyalakshmi Serial: மயூ கேட்ட ஒற்றை கேள்வி...ஆடிப்போன கோபி..இனியாவின் இடத்துக்கு சிக்கல்..!
செழியனும் தன் பங்கிற்கு நான் பார்த்துக்குறேன் என சொல்ல, ராமமூர்த்தி என் பென்ஷன் பணம் இருக்கு அதை நீ எடுத்துக்க ஆள் ஆளுக்கு பாக்யா மீது பாசமழை பொழிகின்றனர்.
பாக்கியலட்சுமி சீரியலில் மயூவின் கேட்ட ஒற்றை கேள்வியால் கோபி அதிர்ச்சியடையும் காட்சிகள் இன்று இடம் பெறுகிறது.
எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.
இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழுகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில மாதங்களாக எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில் ராதிகாவை திருமணம் செய்துக் கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார். அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இதன் பின்னர் நடக்கும் காட்சிகள் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.
சாப்பாடு பிரச்சனை
பாக்யா வீட்டில் தடபுடலாக விருந்து நடைபெறுகிறது. சின்ன ஆர்டர் ஒன்றில் சமைக்கும் போது வீட்டுக்கும் சேர்த்து சமைத்து எடுத்து வந்ததாக பாக்யா கூற,அப்பா போனதுல இருந்து விதவிதமா சமைக்குற, அவர் எப்போ போவாருன்னு வெயிட் பண்ணியா என செழியன் கேட்கிறார். இதைக்கேட்டு ஈஸ்வரி அதிருப்தியடைய செழியன் மன்னிப்பு கேட்கிறார். ஆனால் எழில், செழியன் கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பதோடு சின்ன ஆர்டர்லாம் இனி வேண்டாம் நான் பாத்துக்குறேன் என பாக்யாவிடம் சொல்கிறார்.
செழியனும் தன் பங்கிற்கு நான் பார்த்துக்குறேன் என சொல்ல, ராமமூர்த்தி என் பென்ஷன் பணம் இருக்கு அதை நீ எடுத்துக்க ஆள் ஆளுக்கு பாக்யா மீது பாசமழை பொழிகின்றனர். இதைக்கேட்கும் பாக்யா நீங்க எல்லாரும் சொன்னது சந்தோசமா இருக்கு. ஆனால் என்னால எல்லாம் முடியும்ன்னு நிரூபிக்கணும் என ஆசைப்படுறேன். என்னால முடியலன்னா உங்ககிட்ட தானே கேட்கப் போறேன் என சொல்கிறார்.
அப்போது கோபிக்கு நாற்பதாயிரம் அனுப்புன செய்தியை சொல்ல அனைவரும் டென்ஷனாகின்றனர். விவாகரத்து வாங்குன நீ நஷ்ட ஈடு கேட்டா எவ்வளவு கொடுக்கணும் தெரியுமான என ராமமூர்த்தி சொல்ல, அவன் உன்கிட்ட பணம் கேட்டானா நீ ஏன் கொடுக்க என ஈஸ்வரி கோபப்படுகிறார். ஆனால் பணம் அனுப்புனதும் தான் நிம்மதியா இருக்கு என பாக்யா கூற அனைவரும் அமைதியாகின்றனர்.
அடிமேல் அடி வாங்கும் கோபி
பாக்யா வீட்டில் விருந்து நடக்க கோபிக்கு ராதிகா வீட்டியோ நூடுல்ஸ் சாப்பாடு கொடுக்கப்படுகிறது. தனக்கு இது பிடிக்கவில்லை வேறு சாப்பாடே இல்லையா என நான்வெஜ் உணவுகளை கோபி சொல்ல, தனக்கு சமையலறையில் நின்று நீண்ட நேரம் சமைக்க பிடிக்காது என ராதிகா அதிரடி காட்டி அவரது வாயை அடைக்கிறார். மேலும் உங்களுக்கு சமைக்க தெரியும்ன்னா நாளைல இருந்து நீயே சமைச்சிருங்க என கோபியிடம் ராதிகா சொல்ல அவர் ஆளை விட்டால் போதும் என கொடுத்ததை சாப்பிடுகிறார்.
உண்மையை சொன்ன எழில்
அம்ரிதா வீட்டில் நடந்த கதையை பாக்கியாவிடம் எழில் கூறுகிறார். ஆனால் தன்னால் வந்து உத்தரவாதம் தரும்படி பேச முடியாது என்றும், அப்படி பேசினால் திருமணம் நடத்த பேசுவது போல ஆகிவிடும். அதனால் நீயே அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் படி பேசுமாறு பாக்யா அறிவுரை வழங்குகிறார்.
இனியாவுக்கு ஆப்பு வைக்கும் மயூ
கட்டிலில் ராதிகா மற்றும் மயூவுக்கு நடுவில் கோபி இடம் பிடித்துக் கொண்டு இங்கே தான் படுக்கப்போகிறேன் என சொல்கிறார். அப்போது மயூ உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சா என கேட்டு இருவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறாள். என்ன உன் முன்னாடி தானடா கல்யாணம் பண்ணோம் என கோபி சொல்ல, அப்ப ஏன் நான் உங்களை அங்கிள்ன்னு கூப்பிடுறேன். அப்பான்னு கூப்பிடவா என கேட்டு கோபியை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார். அவருக்கோ இனியாவின் நியாபகம் வருவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.