மேலும் அறிய

Baakiyalakshmi Serial: ”சாப்பாடு கூட வேணாம்..காஃபி மட்டுமாவது கொடு”... ராதிகாவிடம் கெஞ்சும் கோபி...!

திரும்பி வரும் வழியில் பாக்யா வீட்டு வாசலில் நிற்கும் தன் அப்பா ராமமூர்த்தியை பார்த்து கோபி அதிர்ச்சியடைந்து பால் பாக்கெட்டை ஒளித்து வைக்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி காஃபி கேட்டு ராதிகாவிடம் போராடும் காட்சிகள் இடம் பெறுகிறது. 

எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி

விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழுகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில மாதங்களாக  எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.

இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில் ராதிகாவை திருமணம் செய்துக் கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார். மேலும் தன்னை அவமானப்படுத்திய பாக்யா மற்றும் குடும்பத்தினரின் முன்னால் வாழ்ந்து காட்ட வேண்டும் என சபதம் எடுக்கிறார். 

அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இந்த விஷயம் பாக்யா குடும்பத்தாருக்கு தெரிந்து அவர்கள் கோபி மீது கொலைவெறியுடன் உள்ளனர். இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம். 

காஃபி கேட்டது ஒரு குத்தமா? 

நடைபயிற்சி  சென்று விட்டு வீட்டுக்கு திரும்பும் கோபி ராதிகாவிடம் காஃபி கேட்கிறார். ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் பேப்பர் படித்துக் கொண்டு இருக்கிறார். ஆனால் கோபி காஃபிக்காக அவரையே பார்க்க நான் அழகா இருக்கணா என ராதிகா கேட்கிறார். இல்ல காஃபி வேணும் அதுக்குத்தான் பார்த்தேன் என சொல்ல, அப்ப நான் அழகா இல்லையா என கோபியை கேள்விக்கேட்டு ராதிகா மடக்குகிறார். 

இதனை சமாளிக்கும் கோபி தனக்கு சாப்பாடு கூட வேண்டாம். ஆனால் காலை, மதியம், இரவு என எல்லா நேரமும் காஃபி வேணும். ராதிகா அதற்கு முறைக்க நைட்டு கூட வேணாம். ஆனால் காலையில ஜாக்கிங் போய்ட்டு வந்ததும் காஃபி வேணும் என சொல்கிறார். உடனே ஏன் இப்படி கெஞ்சிட்டு இருக்கீங்க. வேணும்ன்னு கேட்டா காஃபி போட்டு தரப்போறேன் என ராதிகா சொல்லிவிட்டு மீண்டும் பேப்பர் படிக்கிறார். 

இதுபற்றி கேட்க வீட்டில் பால் இல்லை. கடைக்கு போய் வாங்கிட்டு வாங்க என சொல்ல கோபி அதிர்ச்சியடைகிறார். நான் எப்படி போக என திகைத்து நிற்க வேறுவழியில்லாமல் ராதிகா சொன்னதால் பால் வாங்க செல்கிறார். திரும்பி வரும் வழியில் பாக்யா வீட்டு வாசலில் நிற்கும் தன் அப்பா ராமமூர்த்தியை பார்த்து கோபி அதிர்ச்சியடைந்து பால் பாக்கெட்டை ஒளித்து வைக்கிறார். இதனை ராமமூர்த்தி பார்த்து விட்டு போனில் பேசுவது போல கிண்டல் செய்கிறார். 

உப்புமா ரொம்ப தப்புமா

ஊரை கூட்டி கல்யாணம் பண்ணியே. வீட்டுல ஒரு துரும்ப கூட நகட்ட மாட்டியே. இப்ப பாரு. இன்னும் என்னெல்லாம் பாக்க போறேன்னு என ராமமூர்த்தி சிரிக்க கடுப்பாகி கோபி வீட்டுக்கு செல்கிறார். உள்ளே வந்தால் ராதிகா மயூவை ஸ்கூலுக்கு கிளப்பும் பிஸியில் இருக்கிறார். இதனால் காஃபி கிடைக்குமா இல்லையா என கோபி தவித்துப் போகிறார். பின் ஒரு வழியாக காஃபி வர டிபன் கொண்டு வாரேன் என கூறி ராதிகா உப்புமாவை நீட்டுகிறார். நான் என் லைஃப்ல உப்புமா சாப்பிட்டதே இல்லை என கோபி சொல்ல, ராதிகா வற்புறுத்தலால் சாப்பிடுகிறார். இத்தோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. 

தலைப்பு செய்திகள்

Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget