Baakiyalakshmi Serial: தனது வேலையை காட்டிய பாக்யா..அதிர்ந்து போன முதலாளி..!
பாக்யலட்சுமி சீரியலில் வேலை ஒன்றிற்கு நேர்காணல் செல்லும் பாக்யா அங்கு தனது திறமைகளை வெளிப்படுத்தும் காட்சிகள் இடம் பெறவுள்ளது.
பாக்யலட்சுமி சீரியலில் வேலை ஒன்றிற்கு நேர்காணல் செல்லும் பாக்யா அங்கு தனது திறமைகளை வெளிப்படுத்தும் காட்சிகள் இடம் பெறவுள்ளது.
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது, கோபி வீட்டை விட்டு வெளியேறிய காட்சிகள் இடம் பெற்றது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.
சமையலில் அசத்தும் பாக்யா
திருமண மண்டபத்தில் சமையல் காண்டிராக்டர் வேலைக்கு விண்ணப்பித்திருந்த பாக்யா நேர்காணலுக்கு சென்ற நிலையில் அங்கு சமையல் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. 15 நிமிடத்தில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு சமைக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. இதனால் அங்கு வந்த தொழிலதிபர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வெளியே சென்று விட பாக்யா உட்பட சிலர் மட்டும் போட்டியில் பங்கேற்கின்றனர். பாக்யாவும் சமைத்து அசத்துகிறார்.
அனைத்தையும் திருமண மண்டப ஓனர் சாப்பிட்டு பார்த்து பாக்யாவை நேர்காணல் நடத்த அழைக்கிறார். அங்கு பாக்யா அவரை கண்டதும் மகிழ்கிறார். அவர்கல் இருவருக்குள்ளும் ஏற்கனவே அறிமுகம் இருந்துள்ளது. ஆனால் பாக்யாவின் சமையல் கலையை பாராட்டும் அவர் இவ்வளவு பெரிய திருமண மண்டபத்தில் இத்தனைப் பேருக்கு உங்களால் எப்படி சமைக்க முடியும் என கூறி வாய்ப்பு கொடுக்க மறுக்கிறார்.
வாய்ப்பு இல்லை..அது என் வாழ்க்கை
ஆனால் தன்னால் முடியும் என பாக்யா உறுதியாய் தெரிவிக்கிறார். மேலும் இது எனக்கான வாய்ப்பு மட்டுமல்ல என்னோட வாழ்க்கைக்கான எதிர்காலம் என கூறி தனக்கு ஒரு சான்ஸ் தருமாறு கெஞ்சுகிறார். அவரின் தன்னம்பிக்கையை கண்ட திருமண மண்டப ஓனர் சரி எங்களுக்கு ஒரு மினி ஹால் இருக்கு.அங்க 200,300 பேர் வருவாங்க. நீங்க அங்க சமைச்சி கொடுங்க. எங்களுக்கு பிடிச்சிருந்தா மேற்கொண்டு 6 கல்யாண மண்டபங்களுக்கான சமையல் காண்டிராக்ட் பத்தி பேசலாம் என தெரிவிக்கிறார். இதனை ஏற்றுக் கொள்ளும் பாக்யா மகிழ்ச்சியுடன் அங்கிருந்து செல்கிறார்.
வெளியே வந்து எழிலை பார்த்து நடந்ததை எல்லாம் கூறுகிறார். உடனே அவர் இனிமேல் உனக்கு எல்லாமே வெற்றி தான் என தெரிவிப்பதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. இது கோபியை பழிவாங்குவதற்கான பாக்யா எடுக்கும் முடிவுகளின் தொடக்கம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.