மேலும் அறிய

Baakiyalakshmi Serial : சிக்கிய கோபி.. நடுவீட்டில் வைத்து விளாசியெடுத்த பாக்யா.. அடுத்து இதுதானே?

மருத்துவமனையில் இருக்கும் எழில் ராதிகாவின் முதல் கணவர் செய்த பிரச்சனையெல்லாம் நினைத்து பார்க்க, கோபி எழிலின் முகத்தைக் கண்டு குழப்பமடைகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் விபத்தில் சிக்கிய கோபி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில் அவரிடம் பாக்யா கேள்வி மேல் கேள்வி கேட்கும் காட்சிகள் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 

விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.

இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யா தான் தன் மனைவி என போதையில் கோபி ராதிகாவிடம் உளறியது, கோபியின் மீதான சந்தேகத்தால் அவரது போனை பாக்யா சோதனை செய்தது. ராதிகா - கோபி இடையேயான சண்டை, நடுவில் ராதிகாவின் முதல் கணவன் ராஜேஷின் எண்ட்ரி, கோபி வீட்டில் உண்மை தெரிந்தது, அவர் விபத்தில் சிக்கியது, கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உண்மை பாக்யாவுக்கு தெரிந்தது என இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என பார்க்கலாம். 

 இரவு நேரத்தில் பாக்யா மாடியில் உண்மையெல்லாம் தெரிந்து அதிர்ச்சியில் சிலை போல நின்ற நிலையில் அவரை தூங்க அழைக்க ஜெனியும், செல்வியும் செல்கின்றனர். அப்போது வீட்டில் நடந்த பிரச்சனையெல்லாம் கோபி வீட்டுக்கு வந்தவுடன் கேட்டுக் கொள்ளலாம் நீங்க கீழே வாங்க என ஜெனி அழைக்கிறார். ஆனால் தன்னை தனியே விடுமாறு கூறி பாக்யா அவர்கள் இருவரையும் கீழே அனுப்பி விடுகிறார். இதற்கிடையில் மருத்துவமனையில் இருக்கும் எழில் ராதிகாவின் முதல் கணவர் செய்த பிரச்சனையெல்லாம் நினைத்து பார்க்க, கோபி எழிலின் முகத்தைக் கண்டு குழப்பமடைகிறார். வீட்டில் என்ன பிரச்சனை நடந்திருக்கும் என்ற கேள்வி அவருக்கு மீண்டும் மீண்டும் எழுகிறது. 

ராதிகாவும் நடந்த சம்பவங்களை எல்லாம் நினைத்து பார்க்கிறார். இதனிடையே காலையில் மாடிக்கு சென்று பாக்யாவை பார்க்க மீண்டும் இருவரும் சென்ற போது அவர் அந்த இடத்திலேயே நிற்பதை கண்டு அதிர்ச்சியடைகின்றனர். பாக்யாவிடம் இருவரும் பல கேள்விகளை எழுப்புகின்றனர். அந்நேரம் பார்த்து கோபியை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு செழியனும், எழிலும் அழைத்து வருகின்றனர். கோபிக்கு ஆரத்தி எடுக்க பாக்யாவை கூப்பிட அவர் கீழே செல்கிறார். 

அப்போது வீட்டுக்குள் வரும் கோபியை பாக்யா முறைத்து பார்க்க அவரிடம் மருத்துவமனையில் இருந்து பாதியில் வந்தது குறித்து அனைவரும் கேள்வி எழுப்புகின்றனர். ஈஸ்வரி கோபியை உட்கார சொல்ல அவரை இடைமறித்து பாக்யா கேள்வி மேல் கேள்வி எழுப்புகிறார். மருத்துவனையில் மனைவி தான் கோபிக்கு பணம் செலுத்தியதாக சொன்னார்களே என அனைவரும் சொல்ல மனைவின்னு சொன்னாங்களே...பாக்கியலட்சுமின்னு சொன்னாங்களா என கேட்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடையும் கோபி பாக்யாவுக்கு எதோ ஒரு உண்மை தெரிந்து விட்டதாக எண்ணுகிறார்.அதை மறைக்க நீ உண்மையிலேயே அங்கு வந்தயா என கோபி கேட்பதோடு இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. 

இனி வரும் எபிசோடில் கோபி பற்றி தான் அறிந்த உண்மைகளை பாக்யா அனைவரிடமும் தெரியப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
Embed widget