Baakiyalakshmi Serial: வீட்டைவிட்டு வெளியே துரத்தப்படும் கோபி...பாக்யா பிரச்சனையில் புதிய திருப்பம்..
நான் எப்ப கோபி கூட இருக்கப்போறேன்னு சொன்னேன். அவனை வீட்டை விட்டு வெளியே போகத்தான் சொல்றேன் என மூர்த்தி தெரிவிக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி - பாக்யா பிரச்சனையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் காட்சிகள் இன்று இடம் பெறவுள்ளது.
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது போன்ற காட்சிகள் இடம் பெற்றது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.
கடந்த ஒரு வாரமாகவே வீட்டுக்கு வந்த பாக்யாவை வெளியே போகச் சொல்லி கோபி கொந்தளிக்க, பாக்யாவை வீட்டில் இருக்க வைக்க குடும்பத்தினர் முயற்சிக்கும் காட்சிகள் இடம் பெற்றது. அந்த வகையில் மகள் இனியாவிடம் நீ அப்பாவுடன் இருக்கப் போகிறாயா? இல்லை என்னுடம் இருக்க போகிறாயா? என பாக்யா கேட்கிறார். நான் உன்னுடன் முடிவை மதிக்கிறேன். நீயே முடிவு பண்ணிக்க என சொல்கிறார். இதனை ஈஸ்வரி கண்டிப்பதோடு மட்டுமல்லாமல் கோபி பண்ணது பச்ச அயோக்கியத்தனம் தான். ஆனால் நீ விவாகரத்து பண்ணிட்டு வந்து இப்படி அந்த சின்ன பொண்ணுகிட்ட கேள்வி கேட்குறது எல்லாம் என நியாயம் என கேட்கிறார். இப்படி நீ ஒவ்வொருத்தருகிட்டயும் மகன் வேணுமா, மருமகள் வேணுமான்னு கேட்பியா என ஈஸ்வரி கேள்வியெழுப்புகிறார்.
அதற்கு நீங்களும், மாமாவும் கோபி கூட இருக்குறதுல எனக்கு பிரச்சனை இல்லை என பாக்யா சொல்ல, அதைக்கேட்டு நான் எப்ப கோபி கூட இருக்கப்போறேன்னு சொன்னேன். அவனை வீட்டை விட்டு வெளியே போகத்தான் சொல்றேன் என மூர்த்தி தெரிவிக்கிறார். இதற்கும் ஈஸ்வரி ஆட்சேபனை தெரிவிக்க பாக்யா ஒரு கட்டத்தில் கோபமாகி நான் இப்ப இப்படி பேச கோபி தான் காரணம்ன்னு எல்லாருக்கும் தெரியும். நான் இதெல்லாம் சொல்லலன்னா இவர் எனக்கே தெரியாம என்ன விவாகரத்து பண்ணிட்டு வெளியே அனுப்பிருப்பாரு இல்லையா என பேசுகிறார். பாக்யவை ஜெனி, மூர்த்தி என அனைவரும் சமாதானப்படுத்த கோபி டென்ஷனில் நான் ஆரம்பத்துல இருந்தே இவளை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லிட்டு இருக்கேன். பாக்யா இங்க நின்னுகிட்டு சீன் போடுறா... பொட்டியை தூக்கிட்டு வெளியே போடி என கத்துகிறார்.
உடனே மூர்த்தி குறுக்கிட்டு பாக்யா ஏன் வீட்டை விட்டு வெளியே போகணும், எல்லா தப்பையும் பண்ணுனது நீ தான்...அதனால் நீ வீட்டை விட்டு வெளியே போ என சொல்வதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. பாக்யாவை வீட்டை விட்டு வெளியேற்ற நினைத்தால் கோபி வெளியே போய்விடுவாரோ என்ற எதிர்பார்ப்புடன் வரும் நாட்களின் எபிசோடுகளுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்