Baakiyalakshmi Serial: அவளாவே வந்தாலும் இனி இந்த வீட்டில் இடமில்லை...கறாராக சொன்ன கோபி...பாக்யா ரியாக்ஷன் என்ன?
பாக்யாவை நினைத்து அழும் இனியாவிடம் நான் அம்மாவுக்கு அம்மாவாக, அப்பாவுக்கு அப்பாவாக இருந்து உன்னை பார்த்துக் கொள்வேன் என கூறி கோபி ஆறுதல் தெரிவிக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி விவாகரத்து பெற்ற நிலையில் ராதிகா ஜெனிக்கு போன் செய்யும் காட்சிகள் இன்று இடம் பெறவுள்ளது.
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரங்களில் வீட்டை விட்டு வெளியேறிய பாக்யாவை குடும்பத்தினர் வந்து சமாதானப்படுத்தியது, குழந்தைகளுக்காக பாக்யா மீண்டும் வீட்டுக்கு வந்தது, கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது போன்ற காட்சிகள் இடம் பெற்றது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.
விவாகரத்து வாங்கிய கையோடு ஹோட்டலுக்கு சென்ற பாக்யா அங்கு விருந்து சாப்பிடும் அளவுக்கு பிடித்ததை சாப்பிடுகிறார். மறுபுறம் பாக்யாவை நினைத்து அழும் இனியாவிடம் நான் அம்மாவுக்கு அம்மாவாக, அப்பாவுக்கு அப்பாவாக இருந்து உன்னை பார்த்துக் கொள்வேன் என கூறி கோபி ஆறுதல் தெரிவிக்கிறார். மேலும் பாக்யாவே இனி மனசு மாறி இந்த வீட்டுக்கு வந்தாலும் நான் சேர்க்க மாட்டேன் எனவும், என்னை மீறி எனக்கு தெரியாமல் யாராவது அவருடன் பேசுவது, சமாதானப்படுத்த நினைப்பது என செய்தால் நடப்பதே வேற என தெரிவிக்கிறார்.
இதனைத் தொடர்ந்து ஜெனி, செழியன் இருவரும் பாக்யா - கோபி விவாகரத்து குறித்து பேசுகிறார்கள். ஏதாவது செய்து பாக்யாவை அழைத்து வர ஜெனி சொல்ல செழியனோ நிலைமை கைமீறி விட்டதாக கூறி புலம்புகிறார். தொடர்ந்து ராதிகாவிடம் இருந்து ஜெனிக்கு போன் வருகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியடையும் அவர் போனை எடுத்து பேசுகிறார். ராதிகா எல்லாரும் எப்படி இருக்கீங்க என கேட்டு நடந்ததை எல்லாம் நான் கேள்விப்பட்டேன். உண்மையிலேயே இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டதாக கேட்கிறார்.
இதனால் ஆத்திரமடையும் ஜெனி எல்லா பிரச்சனையும் உங்களால் தான் என தெரியாமல் பேசுறீங்களா..கூட்டுக் குடும்பத்தை உடைத்தால் என்ன வலி ஏற்படும் என உங்களுக்கு தெரியுமா என சரமாரியாக ராதிகாவிடம் கேள்வி எழுப்புகிறார். அவரிடமிருந்து போனை வாங்கி பேசும் செழியன் உங்களால் தான் இவ்வளவு பிரச்சனையும், கெட்ட வார்த்தை பேச தெரியும் என்ன பேச வச்சிராதீங்க..இனி போன் பண்ணாதீங்க என கூறி போனை கட் செய்கிறார். இதனால் கலங்கி நிற்கும் ராதிகாவிடம் என்னவென்று அண்ணன் சந்துரு விசாரிக்க நான் ஒரு அக்கறையில் தான் கேட்டேன் என தெரிவிக்கிறார். இதனைத் தொடர்ந்து நீ உன்னையே ஏமாத்திக்காத என கூறி சமாதானப்படுத்துகிறார், இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. இதற்கிடையில் ஹோட்டலில் இருந்து பாக்யா வீட்டுக்கு செல்லலாம் என கூற எழில் குழப்பமடைகிறார். இனி வரும் எபிசோடில் பாக்யா வீட்டுக்கு சென்றால் என்ன நடக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்