Anna Serial: பரணிக்கு ஆப்பு வைத்த பாக்கியம்.. ஷண்முகம் பற்றி தெரிய வந்த உண்மை.. அண்ணா சீரியல் இன்றும் நாளையும்!
கடைக்கு போன இடத்தில் ஷண்முகம் போன் பேச போன கேப்பில் ரவுடிகள் சிலர் இந்த பெண்களிடம் தப்பா பேச, அவர்களை அடித்து சண்டை போட, அந்தப் பக்கம் வரும் பாக்கியமும் சிவபாலனும் இதை பார்த்து விடுகின்றனர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி ஷண்முகத்தை வேலைக்காரனாக தனது தோழிகளுக்கு அறிமுகம் செய்து வைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
சனியன் சௌந்தரபாண்டியிடம் “பொண்ணுக்கு முறை செய்யணும்” என சம்பளத்துடன் தீபாவளி போனஸ் கேட்க, “அதான் கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆகிடுச்சே, இன்னுமா முறை செய்துட்டு இருக்க? போனஸ் எல்லாம் தர முடியாது. ஏன் உன் மாப்ள பிச்சை எடுக்கறானா?” என்று மோசமாக பேசி செல்ல சனியன் கண்கலங்கி நிற்கிறார்.
அதன் பிறகு அங்கு வந்த பாக்கியம் “சனியனுக்கு பணத்தை கொடுத்து உங்க பொண்ணுக்கு முறை செய்யுங்க” என்று சொல்ல, உங்க பொண்ணு பரணிக்கும் இது தல தீபாவளி தான் என்பதை ஞாபகப்படுத்துகிறார். மறுபக்கம் பரணி தனது தோழிகளை எப்படியாவது ஊருக்கு அனுப்பியாக வேண்டும் என திட்டம் போடுகிறாள்.
பாக்கியம் பரணிக்கு தீபாவளி முறை செய்யணும் என்று சொல்ல, சௌந்தரபாண்டி முத்துப்பாண்டி என இருவரும் அதெல்லாம் செய்ய முடியாது என்று மறுப்பு தெரிவிக்கின்றனர். சிவபாலன் அண்ணனுக்கு கோவில்ல அடி வாங்குனது மறந்துடுச்சு போல என்று சொல்ல, முத்துப்பாண்டி சிவபாலனை அறைந்து விடுகிறான். பாக்கியம் கண்டிப்பா முறை செய்யணும் என சொல்லி விட்டு வருத்தமாக இருக்க சிவபாலன் தன்னிடம் ஒரு ஐடியா இருக்கு என சொல்கிறான்.
அடுத்து பரணி “நானும் என் வீட்டுக்காரரும் ஹனிமூன் போறோம், நீங்க பொங்கலுக்கு வாங்க, அவரை பார்க்கலாம்” என்று சொல்லிக் கொண்டிருக்க, ஷண்முகம் அப்போது அங்கு வந்து விட, அவனிடம் இவர்களை பஸ் ஏற்றி விட்டு வர சொல்கிறாள். ஷண்முகம் இவர்களை காரில் அழைத்து வந்து கொண்டிருக்கும்போது பானிபூரி சாப்பிடணும் என்று அடம்பிடிக்க, ஷண்முகம் இவர்களை கடைக்கு அழைத்துச் செல்கிறான்.
கடைக்கு போன இடத்தில் ஷண்முகம் போன் பேச போன கேப்பில் ரவுடிகள் சிலர் இந்த பெண்களிடம் தப்பா பேச, அவர்களை அடித்து சண்டை போட, அந்தப் பக்கம் வரும் பாக்கியமும் சிவபாலனும் இதை பார்த்து விடுகின்றனர். “வேலைக்காரன் பயங்கரமாக சண்டை போடுறான்” என்று சொல்ல, பாக்கியம் இவன் தான் பரணியின் புருஷன் என்ற உண்மையை உடைக்கிறாள்.
அதோடு தோழிகள் “ஷண்முகம் தான் என் புருஷன் என பரணி வாயால் சொல்ல வைக்கிறோம்” என பிளான் போடுகின்றனர். இப்படியான நிலையில் இந்த வார அண்ணா சீரியல் நிறைவடைகிறது.