மேலும் அறிய

Amudhavum Annalakshmiyum: மார்க்கெட்டில் ரவுடிகளுடன் சண்டை போட்ட அமுதா... அமுதாவும் அன்னலட்சுமியும் ஹைலைட்ஸ் இதோ..!

சந்தையில் பழனி ஏற்பாடு செய்த ஆட்கள் கடன் தொகையை கேட்டு அன்னலட்சுமியை சேலையை பிடித்து இழுப்பதோடு புவனாவையும் கீழே தள்ளி விடுகிறார்கள்.

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் அன்னலட்சுமிக்காக அமுதா மார்கெட்டில் சண்டை போடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 

விறுவிறுப்பாக செல்லும் சீரியல் 

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இதில் அமுதாவாக கண்மணி மனோகரனும், அன்னலட்சுமியாக ராஜஸ்ரீயும் நடிக்கின்றனர்.

தன் அம்மாவின் கனவுக்காக வாத்தியார் வேலை செய்வதாக சொல்லி பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் பியூனாக இருக்கும் செந்திலை வாத்தியார் என நினைத்து காதல் கொள்கிறார் அமுதா. அந்தக்காதல் திருமணம் வரை சென்ற நிலையில் செந்திலை பற்றிய உண்மை தெரிய வருகிறது. இதன் பிறகு இந்த சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்பது விறுவிறுப்பாக செல்வதால் ரசிகர்களின் பேவரைட் சீரியலாக அமுதாவும் அன்னலட்சுமியும் உள்ளது. 

முன்னதாக வட்டிக்கு வாங்கிய பணத்தை கட்ட செந்தில், அமுதா, அன்னலட்சுமி ஆகியோர் ஒருவருக்கொருவர் தெரியாமல் ஒரே கல்யாண மண்டபத்தில் சமையல் வேலை செய்வதை, அமுதாவின் அப்பா சிதம்பரம் பார்த்து அதிர்ச்சியடையும் காட்சிகள் நேற்றைய எபிசோடில் இடம் பெற்றது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம். 

View this post on Instagram
 
A post shared by zeetamil (@zeetamizh)

சந்தையில் பழனி ஏற்பாடு செய்த ஆட்கள் கடன் தொகையை கேட்டு அன்னலட்சுமியை சேலையை பிடித்து இழுப்பதோடு புவனாவையும் கீழே தள்ளி விடுகிறார்கள். அவர்கள் அவமானப்படுவதை சந்தையே வேடிக்கை பார்க்கிறது. இதனையடுத்து அன்னலட்சுமி நடந்ததை வீட்டில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என புவனாவிடம் சொல்கிறாள்.அவரும் சரி என சொன்ன நிலையில்  வெளியில் இருந்து வரும் அமுதா அவர்களை பார்க்கும்போது இருவரும் கண் கலங்கி இருப்பதை தெரிந்து ஏதோ நடந்துள்ளது என்பதை யூகித்து கொள்கிறாள்.

பின் என்ன நடந்தது என அமுதா  கேட்க அன்னலட்சுமி மார்கெட்டில் நடந்தவற்றை மறைப்பதோடு மழுப்பும் வகையில் பதிலளிக்கிறார். இதனையடுத்து அமுதா புவனாவிடம் சென்று உண்மையை சொல்லுமாறு சொல்ல, புவனா அழுதபடியே நடந்தவற்றை மறைக்க முடியாமல் சொல்லி விடுகிறார். இதனால் கடும்  கோபம் கொள்ளும் அமுதா மாணிக்கம், செந்திலுக்கு போன் செய்து நடந்தவற்றை கூறி உடனே வருமாறு கூறுகிறார்.

மேலும் அன்னலட்சுமி, புவனாவை அழைத்துக் கொண்டு அமுதா மார்க்கெட்டுக்கு வருகிறார். அப்போது அன்னலட்சுமியை பார்க்கும் வட்டிக்கடைக்காரன் என்ன பணம் கொண்டு வந்துட்டியா கொடு கொடு என கேட்கிறார். இந்தா நான் குடுக்குறேன் என அவர்களை விலக்கி விட்டு ஹைஸ்பிடீல் அமுதா வருகிறார். அதனை வட்டிக்கடைக்காரன் ஏளனமாக பார்க்க, அமுதா அவனை அடி வெளுக்கிறாள்.

சண்டையில் அமுதா வட்டிக்கடைக்காரன் வேட்டியை உருவி விடுகிறார். அப்போது அங்கு  வேகமாக வந்து பார்க்கும் செந்தில் அமுதாவின் இன்னொரு முகத்தை பார்த்து ஷாக்காகிறார்.  இதனையடுத்து அன்னலட்சுமி உணர்ச்சி பெருக்குடன் அமுதாவை கட்டியணைத்து நீ தான்ம்மா என் குலசாமி, அவமானப்பட்டு நிக்குற என் குடும்பத்தை நீ தான்  தலைநிமிர வைச்சிட்டே என பெருமிதம் கொள்ளும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

தலைப்பு செய்திகள்

Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget