Amudhavum Annalakshmiyum: புது வேலைக்கு போன செந்திலுக்கு அமுதா கொடுத்த அதிர்ச்சி...அமுதாவும் அன்னலட்சுமியும் அப்டேட் இதோ!
சின்னா பரமுவிடம் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியது பற்றியும், அமுதா சீர்சனம் எதுவும் எடுத்து வரவில்லை, இங்க வந்து அதிகாரம் பண்ணிட்டு இருக்கா என புறணி பேசுகின்றார்.
அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் செந்தில் புதுவேலைக்கு சென்ற நிலையில் அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இதில் அமுதாவாக கண்மணி மனோகரனும், அன்னலட்சுமியாக ராஜஸ்ரீயும் நடிக்கின்றனர். தன் அம்மாவின் கனவுக்காக வாத்தியார் வேலை செய்வதாக சொல்லி பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் பியூனாக இருக்கும் செந்திலை வாத்தியார் என நினைத்து காதல் கொள்கிறார் அமுதா. அந்தக்காதல் திருமணம் வரை சென்ற நிலையில் செந்திலை பற்றிய உண்மை தெரிய வருகிறது. இதன் பிறகு இந்த சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்பது விறுவிறுப்பாக செல்வதால் ரசிகர்களின் பேவரைட் சீரியலாக அமுதாவும் அன்னலட்சுமியும் உள்ளது.
சின்னா பரமுவிடம் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியது பற்றியும், அமுதா சீர்சனம் எதுவும் எடுத்து வரவில்லை, இங்க வந்து அதிகாரம் பண்ணிட்டு இருக்கா என புறணி பேசுகின்றார். பின்னர் கோவிலில் சிதம்பரம் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க, பரமுவும் சின்னாவும் அங்கு வருகின்றனர். அவரிடம் சீர் தர வக்கில்லாம தான் பொண்ணை வீட்டை விட்டு துரத்தி விட்டுட்டாரு என நக்கலாக பேச, சிதம்பரத்திடம் இளங்கோ உமாவுக்கு சீர் தரும் போது, அமுதாவுக்கும் கொடுப்பது தானே நியாயம் என வாதிடுகிறான்.
View this post on Instagram
இதனையடுத்து இளங்கோ செந்தில் வீட்டிற்கு வந்து சீர் கொடுக்க, அமுதா இதெல்லாம் வேண்டாம் என மறுக்கிறார். அண்ணனுக்காக இதை வாங்கிக் கொள்ள கூடாதா என அவர் உணர்ச்சி பெருக்குடன் சொல்ல அஞ்சறைப் பெட்டியை கொடுத்து இதையாவது வாங்கிக்கொள் என சொல்ல அமுதா அதை வாங்கி பார்க்க, உள்ளே பணம் இருக்கிறது.
பணத்தை இளங்கோவிடம் திருப்பி கொடுத்து விட்டு இது என் வீட்டு பிரச்சனை தானே பார்த்துக் கொள்வதாக கூறுகிறாள். சின்னா அமுதாவிடம் வீட்டுக்கு வந்த லட்சுமியை திருப்பி அனுப்புற, வட்டிக்காரன் வந்து கத்திட்டு போறான் பணத்தை வாங்கி கொடுக்குறதை விட்டுட்டு, எங்களை அதிகாரம் பண்ணிகிட்டிருக்க என திட்டுகிறார். ஆனால் அன்னலட்சுமி குறுக்கிட்டு இங்க பாருங்க, என் மருமகள் என்ன சொன்னாலும் யாரும் எதுவும் திருப்பி பேசக் கூடாது. அவள் செய்யுறது தான் சரி என சொல்ல சின்னா, பரமு அதிர்ச்சி அடைகிறார்கள்.
செந்தில் அம்மாவிடம் வந்து நீ என் கிட்ட பேச மாட்டேன்னு எனக்கு தெரியும். எதுவா இருந்தாலும் உன்கிட்ட சொல்லிட்டு போனாதான் நல்லதே நடக்கும். இன்னைக்கு நான் புது வேலைக்கு இண்டர்வியூ போவதாக சொல்லிவிட்டு வெளியே கிளம்ப அன்னலட்சுமி எதுவும் கண்டு கொள்ளாமல் இருக்கிறாள். செந்தில் பேண்ட் சர்ட் போட்டு வெளியே வர, சமையல் காண்ட்ராக்டர் என்னப்பா ஆபீசர் மாதிரி வந்திருக்க, போ போயி எடுபிடி வேலை செய்யுற மாதிரி டிரஸ் போட்டு விட்டு வா என சொல்ல செந்தில் வீட்டிற்கு வந்து உடை மாற்றி செல்கிறான்.
செந்தில் மண்டபத்திற்கு சென்று இறங்க காண்ட்ராக்டர், அவனிடம் அரிசி மூட்டைகளை இறக்கி சமையலறையில் வைக்க சொல்ல ஒரு கட்டத்தில் செந்தில் அங்கு அமுதாவை கண்டு அதிர்ச்சி அடைகிறான். அவன் அமுதாவிடம் பேச முயல, காண்ட்ராக்டர் வந்தவர் என்னப்பா நீ பொம்பளை பிள்ளையை பார்த்த உடனே பேச ஆரம்பிச்சிருவியா, இதுக்கு தான்யா சின்ன பசங்களை வேலைக்கு கூட்டிட்டு வரக் கூடாது என திட்டுகிறான்.