Amudhavum Annalakshmiyum July 26: அமுதா ஸ்கூலில் வாத்தியாரான செந்தில்.. அன்னத்துக்கு காத்திருந்த ஷாக்... அமுதாவும் அன்னலட்சுமியும் எபிசோட்!
அமுதா கிளாசில் உட்கார்ந்து ஹோம் வொர்க் செய்து கொண்டிருக்க, செந்தில் பில்டப்புடன் வகுப்பிற்கு வருகிறான்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் செந்தில் வேலையை விட்டு விட்டதாக சொல்ல அன்னலட்சுமி அதிர்ச்சி அடைந்தாள்.
இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் அன்னம் “செந்தில் எப்படி வேலையை விடப் போச்சு” எனப் புலம்ப , பாட்டி அவன் பார்த்துப்பான் என அன்னமிடம் சொல்கிறார். மேலும் அமுதா செந்திலிடம் “ஏன் வேலையை விட்டீங்க” எனக் கேட்க, “அது உனக்கு தேவை இல்லாத விஷயம்” என பதிலடி கொடுக்கிறார்.
அடுத்ததாக கிளாஸ் ரூமில் சில மாணவிகள் “புது கணக்கு வாத்தியார் வரப்போறாரு, ஹோம் ஒர்க் செய்யலைன்னா அவர் டேபிள் மேல் ஏற்றி நிக்க வச்சிடுவாராம்” என பில்டப்பாக கொடுத்து கொண்டிருக்க இதையெல்லாம் கேட்டு அமுதா “கணக்கு புத்தகத்தை வேற வீட்ல வச்சிட்டு வந்துட்டோமே” என பயப்படுகிறாள்.
இதையடுத்து அமுதா கிளாசில் உட்கார்ந்து ஹோம் வொர்க் செய்து கொண்டிருக்க, செந்தில் பில்டப்புடன் வகுப்பிற்கு வருகிறான். அவனைப் பார்த்ததும் அமுதா ஷாக்காக, செந்தில் அமுதாவிடம் “இன்னும் ஏன் ஹோம் ஒர்க் எழுதலை” என அதட்டி கேள்வி கேட்க அமுதா பம்மியபடி பதில் சொல்ல செந்தில் அதைப் பார்த்து ரசிக்கிறான்.
அதனைத் தொடர்ந்து செந்தில் வெளியே வர, அமுதா பின்னால் ஓடி வந்து அவனை நிறுத்த செந்தில் அவளிடம் “பாடத்துல சந்தேகம் இருந்தா கிளாசுலயே கேளும்மா” என பில்டப் கொடுக்க, அமுதா நடிக்காதீங்க என சொல்ல, செந்தில் இது நடிப்பு இல்ல அத்தனையும் உண்மை என சொல்கிறான். “அமுதா மரியாதையா சொல்றேன் நீங்க வேற ஸ்கூல் பாருங்க” என சொல்கிறாள்
செந்தில் ஏன் கல்யாணம் ஆகவில்லைனு சொன்ன என அமுதா அவனிடம் கேட்க, அதற்கு “நீ மட்டும் கல்யாணம் ஆகவில்லை என பொய் சொல்லலாமா?” என கேட்கிறான். அப்போது அங்கு பாலா வர, அதை பார்த்து செந்தில் சமாளித்து பேசுகிறான். பாலா செந்திலிடம் “என்ன சார் நல்ல மிரட்டி விட்டுட்டீங்களா” எனக் கேட்க, “ஆமா சார் என்னை பார்த்தாலே இனி பயந்து ஓடுவா” என பில்டப் கொடுக்கிறான்.
அதன் பிறகு செந்தில் வீட்டிற்கு வந்து தான் வேறு ஒரு பள்ளியில் வாத்தியாராகி விட்டதாக சொல்கிறான். மாணிக்கம் அப்பத்தாவிடம் அமுதா படிக்கிற ஸ்கூல்லயே வாத்தியாரா சேர்ந்துருக்கான் என்று சொல்ல, அன்னம் செந்திலை திட்டுகிறாள். இப்படியான நிலையில் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.