Amudhavum Annalakshmiyum Aug 22: அமுதாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..மாயா பற்றிய உண்மைகள்.. அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட்
Amudhavum Annalakshmiyum Aug 22: அமுதாவும் அன்னலட்சுமியும் ஸ்கூலில் இருந்து வீட்டிற்கு வர செந்தில் தனியா வீட்டில் இருப்பதை கண்டு அன்னலட்சுமி ஷாக்காகிறாள்.
தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பழனியின் திட்டத்தின் படி ஹவுஸ் ஓனர் வீட்டிற்கு சென்ற பரமு அமுதாவும் அம்மா அன்னமும் இப்போதைக்கு வீடு வாங்க முடியாதுனு சொல்லிட்டாங்க என்று சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அமுதாவும் அன்னலட்சுமியும் ஸ்கூலில் இருந்து வீட்டிற்கு வர செந்தில் தனியா வீட்டில் இருப்பதை கண்டு அன்னலட்சுமி ஷாக்காகிறாள். செந்தில் ஆஸ்பிட்டலில் இருந்து ஒரு நர்ஸ் வந்ததாக கூற , அமுதா அதான் யாரையும் அனுப்ப வேண்டாம்னு சொல்லிட்டனே, நான் ஹாஸ்பிட்டல்ல போய் என்னன்னு கேட்டுட்டு வர்றேன் என கிளம்பியபடி போனை பார்க்க, ஹவுஸ் ஓனர் போன் செய்தது தெரிய வருகிறது. அவள் திருப்பி அவருக்கு போன் செய்ய அவர் எடுக்காமல் இருக்கிறார்.
மறுநாள் காலை ரிஜிஸ்டர் ஆபீசில் இருந்து பழனி ஹவுஸ் ஓனர் வீட்டுக்கு போன் பண்ணுவது சார் கிளம்பிட்டீங்களா என்று கேட்க அவர் நான் நேரத்துல வந்துருவேன் என்று சொல்கிறார். பழனி பரமுவிடம் போன் செய்து வீட்டை ரிஜிஸ்டர் செய்ய போவதாகவும் இரண்டு லட்சம் பணத்தை குடுத்து விடுவதாக சொல்ல, பரமு சந்தோஷம் அடைகிறாள்.
அடுத்ததாக ஆஸ்பிட்டலுக்கு அமுதா வர மாயா அவளை பார்க்க ஒரு வேளை டாக்டரிடம் நர்ஸ் விஷயத்தை கேட்பதற்காக வந்திருப்பாளோ என யோசிக்கிறாள். அமுதா டாக்டருக்காக வெயிட் செய்ய, மாயா டாக்டரிடம் ஒரு பேஷண்ட் பார்க்க வந்திருக்காங்க என சொல்லி அவரை டைவர்ட் செய்து வேறு ஒரு பேஷண்டை பார்க்க அனுப்பி வைத்து விடுகிறாள். பிறகு மாயா நர்ஸ் வீட்டுக்கு வர, மாயா வசதியான வீட்டை சேர்ந்தவள் என்பது ரிவீல் ஆகிறது. மாயாவை பார்த்து அவளது அப்பா மாயா நான் உன்னை இப்படி பார்க்கிறது எனக்கு கஷ்டமா இருக்கு எவ்வளவு பெரிய கோடீஸ்வரி நீ எவ்வளவு பெரிய பணக்காரி நீ எதுக்கு வேலை பார்க்கணும் , உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கோன்னு கட்டாயப்படுத்த மாட்டேன் என சொல்ல இவ்வளவு நாள் எங்கெங்கோ என் வாழ்க்கையை தேடிட்டு இருந்தேன் இப்பதான் எனக்கான சொந்தத்தை கண்டுபிடிச்சிருக்கேன்.. இது எனக்கு கிடைச்ச கடைசி சான்ஸ், இந்த சேன்ஸ நான் மிஸ் பண்ண விரும்பல கொஞ்சம் டைம் கொடுங்கப்பா என சொல்கிறாள்.
இங்கே அமுதா அன்னலட்சுமியிடம் ஹவுஸ் ஓனர் போன் பண்ணியும் எடுக்கலை, எனக்கு ஏதோ தப்பா தோணுது என சொல்லி கிளம்ப பொக, பரமு நெஞ்சு வலி வந்தது போல நடிக்க தொடங்குகிறாள். அன்னலட்சுமி தண்ணீர் குடுக்க, அமுதா இனிமே சரியாயிரும் என சொல்லி கிளம்புகிறாள். பரமு தனக்கு சரியாகி விட்டதாக சொல்லி பழனிக்கு போன் செய்து அமுதா ஹவுஸ் ஓனரை பார்க்க போயிகிட்டிருக்கா என விஷயத்தை சொல்கிறாள்.
இதனால் பழனி என்ன செய்வது என்று தெரியாமல் ஹவுஸ் ஓனருக்கு போன் பண்ணஅவர் ரிஜிஸ்டர் ஆபிசில் வந்து இறங்க பழனி மற்றும் உமா சந்தோஷப்படுகின்றனர். இதோடு இன்றைய எபிசோட் முடிகிறது.