Amudhavum Annalakshmiyum Aug 18: பழனி போடும் திட்டம்.. சிக்கலில் பரமு... அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட்!
நேற்றைய எபிசோடில் செந்தில் “என்னால உனக்கு எவ்வளவு கஷ்டம்” என அமுதாவிடம் வருத்தப்பட்ட நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் செந்தில் “என்னால உனக்கு எவ்வளவு கஷ்டம்” என அமுதாவிடம் வருத்தப்பட்ட நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அமுதா செந்திலிடம் “எனக்கு படிப்பை விட நீங்க, இந்த வீடு, அத்தை, மாமா இதுதாங்க முக்கியம். இதைவிட இந்த உலகத்துல ஒரு பொண்ணுக்கு வேற என்னங்க சந்தோஷம் இருக்க முடியும்?” என சொல்ல, செந்தில் அவளிடம் “இப்ப இருக்குற சூழ்நிலையில் இந்த வீட்டை கஷ்டப்பட்டு வாங்கணுமா” என்று கேட்க, “அப்படி இல்லைங்க, நம்ம ஸ்கூலுக்காக இந்த வீட்டை வித்தோம், அது தப்பு இல்ல. இது நம்ம மாமா வாழ்ந்த வீடு. அத்தையும் மாமாவும் சந்தோஷமா இருந்த வீடு. என்னை பொறுத்த வரைக்கும் இது கோயில்” என சொல்கிறாள்.
மேலும் “இந்த வீட்டை விக்கணும்னு நான் என்னிக்கும் நினைக்க மாட்டேன். கடவுளே பார்த்து இந்த வீட்ட திருப்பி நம்மகிட்ட கொடுத்திருக்கிறார்ன்னு தோணுது. இந்த தடவை நான் இந்த வீட்டை விட மாட்டேன், என் உயிரே போனாலும் இந்த வீட்டை மீட்டு அத்தை கிட்ட கொடுப்பேன்” என்று சொல்ல, செந்தில் ஃபீல் பண்ணுகிறான்.
அதனைத் தொடர்ந்து பழனி வீட்டுக்கு பரமு வர, பழனியும் உமாவும் அவர்களை வரவேற்று உள்ளே அமர வைக்கின்றனர். உமா பரமுவைப் பார்த்து “கழுத்தில் ஒண்ணுமே இல்ல, கல்யாணம் ஆன பொண்ணு கழுத்துல ஒண்ணுமில்லாம இருக்கலாமா? ஒரு நிமிஷம் இருங்க” என்று சொல்லி உள்ளே சென்று ஒரு செயினை எடுத்து வந்து “இதை கழுத்துல போட்டுக்குங்க” என்று சொல்லி போட்டு விடுகிறாள். ஐயோ வேண்டாங்க.. என்று சொல்ல “ஏன் நானும் உங்க தம்பி தான போட்டுக்கோங்க” என சொல்ல பரமு போட்டுக் கொள்கிறாள்.
அடுத்து பழனி பரமுவிடம் “அந்த வீட்டை நானே வாங்கிக்கிறேன், நீங்க அமுதாவை மட்டும் வாங்க விடாம பார்த்துக்கோங்க, நான் 2 லட்ச ரூபா தர்றேன்” என சொல்ல பரமு தலை ஆட்டுகிறாள். ஹவுஸ் ஓனர் வீட்டுக்கு வந்து நடந்த விஷயத்தை கேள்விபட்டு வருத்தம் தெரிவித்து விட்டு “வீட்டை வாங்குறதை பத்தி என்ன முடிவு பண்ணிருக்கீங்க” எனக் கேட்கிறார்.
பரமு ஹவுஸ் ஓனரிடம் “ஆஸ்பிடலுக்கு பணத்தை கட்டுறதுக்கே அந்த பாடு பட்டோம், நாங்க எங்க வீடை வாங்குறது” என சொல்ல, அன்னலட்சுமியும் பரமு சொல்வது சரி என சொல்ல, அமுதா “இந்த வீடு மாமா வாழந்த கோயில், இதை விட்டுடக் கூடாது” என சொல்கிறாள். ஹவுஸ் ஓனர் முடிவு பண்ணி சொல்லுங்கம்மா என சொல்லிவிட்டு கிளம்ப, பரமு பழனியிடம் போன் செய்து விஷயத்தை சொல்கிறாள்.
அடுத்ததாக வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்க, மாயா வீட்டுக்கு வருகிறாள். செந்தில் தட்டுத் தடுமாறி கிச்சனில் தண்ணீர் குடிக்க, மாயா அதை பார்த்து ரசிக்கிறாள். செந்தில் செம்பை கீழே போட, சத்தம் கேட்டு அனைவரும் கிச்சனுக்கு வர மாயா கதவுக்கு பின்னால் ஒளிந்து கொள்கிறாள்.
அமுதா செந்திலை திட்டிக் கொண்டே அமுதா கிச்சனுக்குள் வர, மாயா மாட்டிக் கொள்வாளோ என்கிற பில்டப்ஸ் எகிறுகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.