![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ABP NADU Exclusive: ‘விஜய் எங்களுக்கு எதிரி இல்லை’- பீஸ்ட் படத்துக்கு தடைகோரிய முஸ்தபா பிரத்யேக பேட்டி
’விஜய் எங்களுக்கு எதிரி இல்லை’ இசுலாமியர்களை தவறாக சித்தரிக்கும் காட்சிகளை நீக்கி படத்தை வெளியிடுங்கள் என்றுதான் கேட்கிறோம்..!
![ABP NADU Exclusive: ‘விஜய் எங்களுக்கு எதிரி இல்லை’- பீஸ்ட் படத்துக்கு தடைகோரிய முஸ்தபா பிரத்யேக பேட்டி tamilnadu muslim league alleges beast movie portraits muslims as terrorists ABP NADU Exclusive: ‘விஜய் எங்களுக்கு எதிரி இல்லை’- பீஸ்ட் படத்துக்கு தடைகோரிய முஸ்தபா பிரத்யேக பேட்டி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/05/09f3b9f3b47c5ae6d141ee5f3fec8061_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் மாநில அரசுக்கு வலியுறுத்திய நிலையில், எதற்காக படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்பது குறித்து அதன் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா ஏபிபி நாடுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் வரும் 13ஆம் தேதி வெளியாகிறது. இதற்கான வேலைகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. ரசிகர்களும் படத்தை காண ஆவலுடன் இருக்கின்றனர். இந்த நிலையில், இந்தப் படத்துக்கு குவைத்தில் திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. பீஸ்ட் படத்தில் முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக குவைத் அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் மாநில அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அதன் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா ஏபிபி நாடுக்கு பிரத்யேகமாக அளித்த பேட்டியில், “பீஸ்ட் படத்தில் முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து காண்பிக்கப்பட்டுள்ளதாக குவைத் நாட்டில் அந்தப் படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இந்தப் படத்துக்கு தமிழ்நாட்டிலும் தடை விதிக்க வேண்டும்” என்று கூறினார்.
மேலும் படிக்க: 'பீஸ்ட்' படத்தை தடை செய்ய வேண்டும் - அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்
மேலும், “சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய்பீம்’ படத்தில் ஒரு சமுதாயத்தை தவறாக சித்தரித்து காட்டியதற்கு பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், குறிப்பிட்ட மதத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பயங்கரவாதிகளாக காட்டப்பட்டு வருவதை தமிழ் சினிமாவினர் வழக்கமாக கொண்டுள்ளனர்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், விஜய் தங்களுக்கு எதிரி அல்ல என்றும், படத்தில் முஸ்லீம்களை சித்தரித்தது போன்ற காட்சிகளை சென்சாரில் நீக்கிவிட்டு படத்தை வெளியிடலாம் என்றும், மொத்த படத்தை வெளியிட தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் கூறினார்.
#JUSTIN | விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை தடை செய்ய வேண்டும் - அரசுக்கு முஸ்லீம் லீக் கடிதம்https://t.co/wupaoCQKa2 | #Beast #Vijay #TNGovt pic.twitter.com/aEZHeqTLJp
— ABP Nadu (@abpnadu) April 5, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)