மேலும் அறிய

Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!

Bharathiraja Passes Away: ஸ்டூடியோவுக்குள் முடங்கி கிடந்த தமிழ் சினிமாவை கிராமத்தின் எல்லை வரை அழைத்துச் சென்றவர் பாரதிராஜா. மண்வாசனை சார்ந்த படங்களை இன்றைக்கும் தமிழ் சினிமா எடுக்க முன்னோடியாக திகழ்ந்ததால் இயக்குநர் இமயம் என அழைக்கப்பட்டார்.

தமிழ் சினிமாவின் இயக்குநர் இமயம் என அழைக்கப்பட்ட பாரதிராஜா உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுச் செய்தி தமிழ் சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இயக்குநர் இமயம் பாரதிராஜா

தேனி மாவட்டம் அல்லிநகரத்தைச் சேர்ந்தவர் பாரதிராஜா. 1941ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி பிறந்த அவர் தனது திரைப்பட வாழ்க்கையை கன்னட திரைப்பட இயக்குனர் புட்டண்ணா கனகலின் உதவியாளராகத் தொடங்கினார். தமிழ் சினிமாவில் 16 வயதினிலே படம்  இயக்குநராக அறிமுகமானார். 1977 ஆம் ஆண்டு வெளியான இப்படம் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். அதுவரை ஸ்டூடியோவுக்குள் முடங்கி கிடந்த தமிழ் சினிமாவை கிராமத்தின் எல்லை வரை அழைத்துச் சென்றவர் பாரதிராஜா. இதனாலேயே இவர் இயக்குநர் இமயம் என அழைக்கப்படுகிறார். 84 வயதான பாரதிராஜா இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் ஜொலித்தவர். வயது மூப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் தொடர் சிகிச்சையிலும் இருந்து வந்தார். 

இந்த நிலையில் தனது இல்லத்தில் இன்று அதிகாலை அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதிராஜாவின் மறைவு தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: விஜய் ஜெயிச்சாரு.. மொத்த மானத்தையும் வாங்கிய குடும்பம்.. போஸ் வெங்கட் வேதனை!

தொடர்ந்து ஆக்டிவாக இயங்கி வந்த பாரதிராஜா

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜயகாந்த் காலக்கட்டம் தொடங்கி விஷால், தனுஷ் காலக்கட்டம் அவரை தமிழ் சினிமாவில் தொடர்ந்து பயணித்தார். கடைசியாக 2020ம் ஆண்டு மீண்டும் ஒரு மரியாதை என்ற படத்தையும் இயக்கியிருந்தார். கிராமத்து மண்வாசனையை திரையுலகிற்கு கொண்டு வந்து தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய மகத்தான படைப்பாளர் பாரதிராஜாவின் மறைவு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு தான். 

பாரதிராஜா இயக்கிய படங்களில் 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, மண் வாசனை, முதல் மரியாதை, கடலோர கவிதைகள், வேதம் புதிது, கருத்தம்மா, கிழக்கு சீமையிலே ஆகியவை மிக மிக முக்கியமான படங்களாகும்.  அதேபோல் நடிகராக ஆய்த எழுத்து, ரெட்டைச்சுழி, பாண்டிய நாடு, குரங்கு பொம்மை, திருச்சிற்றம்பலம், கருமேகங்கள் கலைகின்றன ஆகியவை அவருக்குள் இருந்த மிக யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தது. 

இந்திய சினிமாவில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2004 ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜாவுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. மேலும் முதல் மரியாதை, வேதம் புதிது, கருத்தம்மா, அந்திமந்தாரை, கடல்பூக்கள், சீதா கொகா சியூகா (தெலுங்கு) ஆகிய அவரது படங்கள் தேசிய விருது பெற்றிருக்கிறது. வயதானாலும் சினிமாவுலகில் மிகவும் ஆக்டிவாக பாரதிராஜா செயல்பட்டு வந்தார். 

Also Read: CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!

நிலைகுலைய வைத்த மகனின் மரணம்

ஆனால் கடந்த 2025ம் ஆண்டு பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதன்பின்னர் மிகப்பெரிய துயரத்தில் மூழ்கிய பாரதிராஜாவின் உடல்நிலையும் வெகுவாக பாதிக்கப்பட்டது.  மேலும் சில மாதங்களாவே பாரதிராஜா மரணம் குறித்த வதந்திகள் பரவி வந்தது ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியது. அப்போதெல்லாம் அவர் சிகிச்சைப்பெறும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு அந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தனது 84வது வயதில் அவர் உயிரிழந்துள்ளார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget