(Source: ECI/ABP News/ABP Majha)
சருமம் வெயிலால் கருத்துப்போகுதா? தமன்னா சொன்ன மேஜிக் டிப்ஸ் என்ன? ஏர்போர்ட் லுக் சீக்ரெட் தெரிஞ்சுக்க இதை படிங்க
தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை தமன்னா சில ஆண்டுகளிலேயே கோலிவுட்டில் பெரும் வளர்ச்சியடைந்து விஜய், அஜித், தனுஷ் உள்ளிட்ட பெரும் நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
தமன்னா என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அவரது நிறம்தான். அவர் திரையில் அறிமுகமானபோது பால் வெள்ளை பருவ மங்கை என்று அவரை எழுதிக் கொண்டாடியது சினி ஊடகம். இன்றைக்கும் தமன்னா தனக்கென்று ஒரு மார்க்கெட்டை தக்க வைத்துள்ளார்.
கோலிவுட் டூ டோலிவுட்:
கேடி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை தமன்னா சில ஆண்டுகளிலேயே கோலிவுட்டில் பெரும் வளர்ச்சியடைந்து விஜய், அஜித், தனுஷ் உள்ளிட்ட பெரும் நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். பின்னர் தமிழில் வாய்ப்புகள் குறைய தெலுங்கு பக்கம் ஒதுங்கிய அவர், தற்போது டோலிவுட் திரையுலகில் மிகவும் பிசியாகியிருக்கிறார்.
குர்துந்தா சீதகலம், போல சங்கர், போலே சுடியான், சோர் நிகல் கே பாகா. பப்ளி பவுன்சர், தட் ஈஸ் மஹாலட்சுமி, ஏன் என்று காதல் என்பேன், காத்து கருப்பு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
தயாரிப்பாளர் தில் ராஜுவின் தயாரிப்பில், அனில் ரவிப்புடி இயக்கத்தில், வெங்கடேஷ் டகுபதி, வருன் தேஜ், தமன்னா, மெஹ்ரீன் பிர்ஷதா, சோனல் சவுகான் உள்ளிட்ட பெரும் நடிகர் பட்டாளமே நடித்த எஃப்3 திரைப்படம் உலகம் முழுவதும் 1400 தியேட்டர்களில் மே 27ம் தேதி வெளியானது. 2019ல் வெளியான F2 திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட, காமெடி திரைப்படமான எஃப்3 திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அமெரிக்காவில் மட்டும் ஒரு மில்லியன் டாலர்களை இதுவரை வசூல் செய்துள்ளது.
கோடையில் சருமத்தை பாதுகாப்பது எப்படி?
இந்நிலையில் கோடையில் சருமத்தை பாதுகாப்பது எப்படி? என்று தமன்னா டிப்ஸ் கூறியுள்ளார். மாசு மருவற்ற அவரது முகப் பொலிவு அவர் கூறும் டிப்ஸை கடந்து செல்ல விடுமா என்ன? எனது சரும பராமரிப்பை நான் பருவத்துக்கு ஏற்றவாறு மாற்றிவிடுவேன். இப்போது கோடை காலம் என்பதால் அதற்கு ஏற்ப சருமத்தை பராமரிக்கிறேன். கோடையில் அடிக்கடி சருமத்தை உள்ளிருந்து சுத்தப்படும் க்ளென்ஸிங் செய்தல் முக்கியம். இரண்டாவதாக தோலில் வறட்சி ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். அதற்கேற்ப மாய்ஸ்சரைஸர் தடவ வேண்டும். கோடை என்பதால் தண்ணீரை அடிப்படையாகக் கொண்ட மாய்ஸ்சரைஸர்களை அதிகமாகப் பயன்படுத்துவேன். இறுதியாக எனது மேக்கப்பை ரிமூவ் செய்யும்போது மட்டும் ஆயில் பேஸ்ட் க்ளென்ஸர் பயன்படுத்துவேன். அதுபோல் மேக்கப் ரிமூவ் செய்யும்போது சருமத்தை அழுத்தி தேய்க்க மாட்டேன். அவ்வாறு செய்தால் சருமம் பாதிக்கப்படும். நிறைய பேர் அழுத்தித் தேய்க்கிறார்கள். அதை தவிர்த்து விடுங்கள் என்றார்.
ஏர்போர்ட் ஃபேஷன் ட்ரெண்ட் பழகிவிட்டது:
ஏர்போர்ட் ஃபேஷன் ட்ரெண்ட் பற்றி பேசிய தமன்னா ஆரம்ப காலத்தில் விமான நிலையங்களில் புகைப்படக்காரர்கள் சூழ்ந்து கொள்ளும்போது ஐய்யோ நாம் ஃப்ரெஷ்ஷாக இல்லையே என்று கோபம் வரும். ஆனால் இப்போதெல்லாம் ஒருவித கம்ஃபோர்ட் ஜோனுக்குள் வந்துவிட்டேன். ஏன் அதை ரசிக்கக் கூட ஆரம்பித்துவிட்டேன். அதனால் இப்போதெல்லாம் ஏர்போர்ட்டுக்கு செல்வதென்றால் ஸ்பெஷலாக தயாராகிறேன். ஒருநாளுக்கான ஊக்கத்தை அது தருகிறது என்று கூறினார்.