Chandra Lakshman | காதலிக்க நேரமில்லை சீரியல் ஞாபகம் இருக்கா.. இவங்களுக்கு இவரோட டும்டும்டும்..!
காதலிக்க நேரமில்லை சீரியல் எல்லா 90-ஸ் கிட்ஸுக்கும் ஃபேவரைட். அதன் கதாநாயகி சந்திரா குறித்து ஒரு அப்டேட்..
காதலிக்க நேரமில்லை சீரியல் எல்லா 90-ஸ் கிட்ஸுக்கும் ஃபேவரைட். அதன் கதாநாயகி சந்திரா குறித்து ஒரு அப்டேட்.. திரையுலகின் முன்னணி கதாநாயகியாக இருந்த, சந்திரா லக்ஷ்மணன் சமீபத்தில் மலையாளத்தில் ஹிட் அடித்து ஓடிக்கொண்டிருக்கும் ஸ்வந்தம் சுஜாதா நிகழ்ச்சி மூலம் கம்பேக் கொடுத்திருந்தார். அவர் தற்போது மீண்டும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை சந்திரா லக்ஷ்மணனுக்கு சக நடிகர் தோஷ் க்ரிஷ்டியுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தனது இன்ஸடாகிராம் பக்கத்தில் மெசேஜ் ஒன்றை எழுதி தனது ரசிகர்களுடனும் நலம் விரும்பிகளுடனும் இந்நற்செய்தியை பகிர்ந்துள்ளார்.
2002 ல் 'மனசெல்லாம்' தமிழ் திரைப்படத்தில் ஹீரோவின் தங்கையாக அறிமுகமாகி 'ஏப்ரல் மாதத்தில்' திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சந்திரா லஷ்மணன். பின்னர் தன் தாய் மொழியான மலையாள திரையுலகில் தஞ்சம் அடைந்தவர் பல பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். தமிழிலும் காதலிக்க நேரமில்லை, வசந்தம் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நாயகியாக நடித்துள்ளார். அதன் பின் சில வருடங்கள் காணாமல் போன சந்திரா மீண்டும் ஒரு மலையாள தொலைக்காட்சி தொடர் மூலம் வெளிவந்தார். அவர் தற்போது இன்ஸ்டாகிராமில்ஒருபோஸ்ட் செய்திருக்கிறார்.
தோஷ் க்ரிஷ்டியின் கைகளை பிடித்தவாறு புகைப்படம் பதிவிட்டு அவர் எழுதியிருப்பது, உற்றார் உறவினர்களின் ஆசியுடன் புதிய பயணத்தை தொடங்குகிறோம். எங்கள் நலம் விரும்பிகளுயும் இந்த மகிழ்ச்சியில் பங்குகொள்ள விரும்புகிறோம். திருமணம் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் இது முற்றுப்புள்ளியாக இருக்கும் என நம்புகிறேன். எங்களை ஆசிர்வதித்து இறைவனிடம் வேண்டிக்கொள்ளவும்" என்று பதிவிட்டுருக்கிறார்.
ஸ்வந்தம் சுஜாதா மலையாளத்தில் தற்போது அனைவராலும் விரும்பப்படும் ஓர் தொலைக்காட்சி நிகழ்ச்சி. கிஷோர் சத்யாவிற்கு இணையாக முக்கிய கதாப்பாத்திரத்தில் தோன்றி தனது இரண்டாவது இன்னிங்க்ஸை பெரிய அளவில் தொடங்கியிருந்தார். தோஷ் க்ரிஷ்டி அதே நாடகத்தில் வழக்கறிஞராக வருகிறார். அவருக்கு அந்த நாடகத்தில் சுஜாதாவுக்கு உதவும்படியான கதாபாத்திரம்.
மலையாள நடிகர் சைஜூ குரூப்பும் அந்த தொடரில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் படப்பிடிப்பு தள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, "தொலைக்காட்சி தொடர்களில் மிகப்பெரிய ரசிகனாக ஒரே ஒரு எபிசோடிலாவது தோன்றிவிட வேண்டுமென்ற ஆசை தற்போது ஸ்வந்தம் சுஜாதா தொலைக்காட்சி தொடர் மூலம் முதன்முறையாக நிறைவேறி உள்ளது. நான் நடித்த எபிசோட் விரைவில் ஒளிபரப்பாகும். இதை அறிந்துகொள்வதில் என் அம்மாதான் மிகவும் மகிழ்ச்சியானவராக இருப்பார்" என்று சொல்லியிருக்கிறார்.
என்னைத்தேடி காதல் என்ற செய்தி அனுப்பு... பாட்ட கேக்க ஆரம்பிச்சுட்டீங்களா..