Swagatha Krishnan Debut: ”நான் நடிகை ஆவேன்னு எப்போவும் நினைச்சு பாக்கல” - பாடகி ஸ்வாகதா..

நான் திரைத்துறை சாராத  குடும்பத்திலிருந்து வந்தவள் , எனவே ஒரு திரைப்பட நடிகையாக வேண்டும் என்ற எண்ணம் என் கனவில் கூட இருந்தது இல்லை

பாடகி  ஸ்வாகதா கிருஷ்ணன் கயல்  திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகவிருக்கிறார் ஸ்வாகதா. பாடலாசிரியர் தமயந்தி இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகவுள்ளார் .ஒரு பாடகியாக இருந்து எப்படி நடிக்கும் ஆர்வம் வந்தது எனக் கேட்டதற்கு, சில விஷயங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.Swagatha Krishnan Debut: ”நான் நடிகை ஆவேன்னு எப்போவும் நினைச்சு பாக்கல” - பாடகி ஸ்வாகதா..


நடிப்பு குறித்த உங்களின் கனவு என்னவாக இருந்தது?


"உண்மையைச் சொல்வதானால், நான் திரைப்படங்களில் ஒரு நடிகையாக வேண்டும் என்ற எண்ணம் என்றும் இருந்தது இல்லை" என்று ஸ்வாகதா தொடங்கினார். "என் சகோதரி மாயாவைப் போலவே  எனக்கு நாடகத்தில் அதிக ஆர்வம் இருந்தது (மகளிர் மட்டும் , வேலைக்கரன் மற்றும் 2.0 போன்ற படங்களில் மாயா நடித்துள்ளார் ). மதுரையில் உள்ள டி.வி.எஸ் லட்சுமி பள்ளி - பள்ளியில் தியேட்டரில் சேர்ந்து நாடகம் கற்றுக்கொண்டேன்  - அங்கு எங்களுக்கு நாடகத் துறைக்கென்று  தனி வகுப்பு  இருந்தது. நான் பள்ளி நாடகங்களில் முன்னணி வகிப்பேன், நான் பள்ளி முடியும் வரை நாடகங்களில் மிகவும் முனைப்போடு  இருந்தேன். ஆனால் அப்போது எனக்கு சினிமா பற்றி எந்த அறிவும் இல்லை. நான் திரைத்துறை சாராத  குடும்பத்திலிருந்து வந்தவள்,எனவே ஒரு திரைப்பட நடிகையாக வேண்டும் என்ற எண்ணம் என் கனவில் கூட இருந்தது இல்லை” 


நடிப்பு விபத்துதான் என்றால், உங்களின் கனவுகள் எதை நோக்கியதாக இருந்தன?


சிறு வயதில் இருந்தே "நான் அழகானவள் இல்லை " என்ற எண்ணம் என்னிடத்தில் இருந்தது ."நான் பள்ளியில் ஒரு கிரிக்கெட் மற்றும் விளையாட்டில்தான் ஆர்வமாக இருந்தேன், மேலும் எனது பெரும்பாலான நேரத்தை விளையாட்டு மைதானத்தில், வெயிலில் கழித்தேன். எனவே, எனது நிறம் மிகவும் கருமையாக மாறத்தொடங்கியது. ஒல்லியாக இருந்தேன். அக்கம்பக்கத்தினரும் மற்றும்  சில உறவினர்களும் கூட என்னை கருவாச்சி என்று அழைத்தார்கள் . எனவே, நான் ஒரு நடிகையாக மாறும் அளவுக்கு என்னை ஒருபோதும் கவர்ச்சியாக கருதவில்லை” என்றார்.Swagatha Krishnan Debut: ”நான் நடிகை ஆவேன்னு எப்போவும் நினைச்சு பாக்கல” - பாடகி ஸ்வாகதா..


தயக்கங்களை உடைப்பதற்கு உங்களுக்கு துணையாக இருந்த விஷயம் என்ன?


"இந்த பாடி ஷேமிங் உண்மையில் இசையுடன் நெருக்கமான பிணைப்பை எனக்கு உருவாக்க உதவியது. இசை என்னை மிகவும் நன்றாக உணரவைத்தது, ஏனென்றால் நான் பாடும்போது எனது தோற்றத்தை வைத்து  யாரும் என்னை தீர்மானிக்கவில்லை. மேலும் அனைத்து பாடும் போட்டிகளிலும் நான் வெற்றி பெறுவேன். இந்த சமூகம் என்னை எப்படி பார்த்தது என்பது எனக்கு பெரிதாக தெரியவில்லை . நானும் இசையும் இதனால் ஒன்றினைந்தோம் என்ற சந்தோஷம் எனக்கு எப்பொழுதும் உண்டு "என்றார் .Swagatha Krishnan Debut: ”நான் நடிகை ஆவேன்னு எப்போவும் நினைச்சு பாக்கல” - பாடகி ஸ்வாகதா..


படப்பிடிப்பு அனுபவம் குறித்து சொல்லுங்கள்.. உங்கள் இயக்குநரும் பெண்தான்.. அவரைப்பற்றி சொல்லுங்கள்


"இதெல்லாம் ஒரு புறம் இருக்க இந்த ஆண்டு பிப்ரவரியில், பாடலாசிரியர் தமயந்தியிடமிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது,நாங்கள்  இருவரும் இசைத் துறையின் ஒரு பகுதியாக இருப்பதால் எனக்கு அவரை பற்றி  நன்கு தெரியும் . “நான் நடிக்கத் தயாரா என்று தமயந்தி  என்னிடம் கேட்டார்கள் . அவர் எழுதிய ஒரு ஸ்கிரிப்டை நான் கேட்க வேண்டும் என்று விரும்பினார். நாங்கள் இருவரும்  சந்தித்தோம்,  இரண்டு மணி நேரம் தனது  ஸ்கிரிப்டை விவரித்தார் . இது ஒரு அழகான ஸ்கிரிப்டைக் கொண்ட ஒரு சிறிய படம், நான் உடனடியாக ஆம் என்று சொன்னேன். தமயந்தி  என்னை மிகவும் நம்பினார் , ஆடிஷன் அல்லது தோற்ற சோதனை எதுவும் இல்லை, உடனடியாக படப்பிடிப்பு துவங்கியது. வேளாங்கண்ணி, நாகர்கோயில், ராமேஸ்வரம், பாண்டிச்சேரி போன்ற இடங்களில் 18 நாட்களில் படத்தை படமாக்கினார்கள் " Swagatha Krishnan Debut: ”நான் நடிகை ஆவேன்னு எப்போவும் நினைச்சு பாக்கல” - பாடகி ஸ்வாகதா..


எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள். இந்த படப்பிடிப்பு எப்படியான எதிர்பார்ப்பை உங்களுக்கு கொடுத்திருக்கிறது?


"கேமராவை எதிர்கொள்வது எனக்கு  மிகவும் பதட்டமாக இருந்தது , பலரும் தங்களின் கருத்துக்களை என்னிடம் வைத்தார்கள் அதிர்ஷ்டவசமாக நான் எனது நடிப்பு பயிற்சியை வீட்டில் தொடர்ந்து செய்துகொண்டு இருந்தேன் , பின்பு எனது இயக்குநர் தமயந்தி தனக்கு இதுதான் வேண்டும் என்ற விளக்கத்தை என்னிடம் கொடுத்தார் இது எனக்கு ஆயத்தமாவதற்கு மிகவும் உதவியது . ஒரு புதுமுகமாக அனைவர் முன்னிலையிலும் நடிப்பது ஒரு பக்கம் பயமாக இருந்தாலும் மறுபக்கம் மிகவும் உற்சாகமாக இருந்தது "Swagatha Krishnan Debut: ”நான் நடிகை ஆவேன்னு எப்போவும் நினைச்சு பாக்கல” - பாடகி ஸ்வாகதா..


“இசை எப்போதும் எனது முதல் முன்னுரிமையாக இருக்கும். திரைப்படங்களில் நடிப்பதற்கான பயணத்தின்போது  எனக்கு கிடைக்க இருக்கும் அணைத்து புகழையும் நான் எனது இசை ரசிகர்களை மிக எளிதில் அடையக்கூடிய ஒரு வழியாகத்தான் பார்க்கிறேன்" என்று முடித்துக்கொண்டார் ஸ்வாகதா.

Tags: actress Swagatha Krishnan Dream heroine singer

தொடர்புடைய செய்திகள்

Marvel Loki : ’சென்னை பையன்’ டாம் ஹிடில்ஸ்டன் நடித்த லோக்கி சீரிஸ், எப்படி இருக்கு?

Marvel Loki : ’சென்னை பையன்’ டாம் ஹிடில்ஸ்டன் நடித்த லோக்கி சீரிஸ், எப்படி இருக்கு?

மனோ குரலில், தரமான நைட் ப்ளேலிஸ்ட்!

மனோ குரலில், தரமான நைட் ப்ளேலிஸ்ட்!

புதிய வேலையில் களமிறங்கிய பிக்பாஸ் நிஷா : வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரீஸ்..!

புதிய வேலையில் களமிறங்கிய பிக்பாஸ் நிஷா : வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரீஸ்..!

Valimai Update | கடைசியாக கிடைத்தேவிட்டது வலிமை அப்டேட்..! அஜித்துக்கு இந்த ரோலா?

Valimai Update | கடைசியாக கிடைத்தேவிட்டது வலிமை அப்டேட்..! அஜித்துக்கு இந்த ரோலா?

”ஏன் சமைக்கணும்னு அம்மாகிட்ட சண்டைபோட்டேன்” - பாலின பாகுபாடு குறித்து வித்யா பாலன் ஷார்ப்!

”ஏன் சமைக்கணும்னு அம்மாகிட்ட சண்டைபோட்டேன்” - பாலின பாகுபாடு குறித்து வித்யா பாலன் ஷார்ப்!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News :தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News :தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?