Surya Siruthai Siva Movie: சிங்கத்தோடு இணைய சிறுத்தை சிவா ரெடி... சூர்யாவுக்காக காத்திருக்கும் கனவுக்கதை!
சூர்யாவின் 42 ஆவது படம் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது.

சூர்யாவின் 42 ஆவது படம் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது.
'எதற்கு துணிந்தவன்' வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார். ‘பிதாமகன்’ திரைப்படத்திற்கு பிறகு இருவரும் இணைவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பினை சொல்லவே தேவையில்லை. சூர்யாவின் 41 வது படமாக உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
View this post on Instagram
இப்படத்தை 2டி எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரித்து வருகின்றனர். இதற்கிடையில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடி வாசல்’ படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். ‘வாடிவாசல்’ நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்தப்படத்திற்காக சூர்யா இரண்டு காளைகளை தன்னுடன் வைத்து வளர்த்து வருகிறார். சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வாடிவாசல் படத்தில் இருந்து படப்பிடிப்பிற்கு சூர்யா தயாராவது தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டது. இந்தப்படத்தின் டெஸ்ட் ஷூட்டும் அண்மையில் சென்னை கடற்கரை சாலையில் வைத்து நடைபெற்றது.
View this post on Instagram
சூர்யா 42 அப்டேட்
இந்த நிலையில் சூர்யாவின் அடுத்தப்பட குறித்தான அப்டேட் வெளியாகியுள்ளது. அந்ததகவலின் படி, சூர்யா சிறுத்தை சிவாவுடன் இணைய இருப்பதாகவும், இந்தப்படத்தின் பூஜை இந்த வார இறுதியில் நடக்கும் என்றும் இது சிறுத்தை சிவாவின் கனவுப்படம் என்றும் சொல்லப்படுகிறது. அண்மையில் சூர்யா நடித்த சூரரைப்போற்று படத்திற்காக நடிகர் சூர்யாவிற்கு தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

