Survivor Tamil: சர்வைவரின் சாகசக்காரி... யார் இந்த ஐஸ்வர்யா?
பார்ட்- டைம் மாடலான இவர் இன்ஸ்டாகிராமில் செம ஆக்டீவ். அதே இன்ஸ்டாகிராமால்தான் ஐஸ்வர்யாவுக்கு சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து சர்வைவர் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட சில தினங்களிலேயே ரசிகர்களின் கவனத்தை மெல்ல ஈர்த்து வருகின்றது. பிரபல நட்சத்திரங்கள் போட்டியாளர்களாக பங்கேற்றிருக்கும் சர்வைவர் நிகழ்ச்சியில், விளையாட்டு வீராங்கனையாக இருந்து பயிற்சியாளராக மாறிய ஐஸ்வர்யா பற்றிய குறிப்புதான் இது!
ஐஸ்வர்யா ஒரு விளையாட்டு வீராங்கனை. படகு ஓட்டும் விளையாட்டில் தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வெறுள்ள அவர், அடுத்து ஃபிட்னஸ் பயிற்சியாளராகவும் வேலை செய்து வருகிறார். சான்றிதழ் பெற்ற பயிற்சியாளரான இவர், முன்னணி பிரபலங்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். பார்ட்- டைம் மாடலான இவர் இன்ஸ்டாகிராமில் செம ஆக்டீவ். அதே இன்ஸ்டாகிராமால்தான் ஐஸ்வர்யாவுக்கு சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது. பல சாகசங்களை அசால்ட்டாக செய்து ரீல்ஸ் பதிவேற்றி இருக்கும் அவர், ஃபிட்னஸ் ஃபிட்னஸ் ஃபிட்னஸ் என எந்நேரமும் ஃபிட்னஸைப் பற்றி யோசிப்பவராம்.
View this post on Instagram
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தபோதும், தனது ஃபிட்னஸ் வொர்க்-அவுட்டுக்கு இடைவெளிவிடாத ஐஸ்வர்யா, வீட்டிலேயே தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டாராம். அதுமட்டுமின்றி, இயல்பாகவே விளையாட்டு, சாகசம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யா சர்வைவர் நிகழ்ச்சியிலும் செம ஆக்டீவாகவே இருக்கிறார். கடினமான டாஸ்க்குகளையும் செய்ய தயங்காத இவர், வேடர்கள் அணிக்கு செம ப்ளஸ். விளையாட்டு வீராங்கனை ஒருவர் இது போன்ற சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றிப்பது நிச்சயம் வெற்றியை ஈட்டத்தான் என நிச்சயமாக சொல்கிறார் ஐஸ்வர்யா. தமிழ் பெண் தான் என்றாலும், மும்பையில் தனது ஃபிட்னஸ் பயிற்சி கூடத்தை நடத்தி வருகிறார் ஐஸ்வர்யா.
View this post on Instagram
சர்வைவர் நிகழ்ச்சி முழுவதும் ஆப்பிரிக்காவில் உள்ள அடர்ந்த வனத்தில் நடத்தப்பட்டுள்ளது. சிங்கம், புலி, சிறுத்தைகள், பாம்புகள் என்று ஆபத்தான விலங்குள் வாழும் இந்த காட்டில் எவ்வாறு உயிர்வாழ்கின்றனர் என்பதை போட்டியாக வைத்து இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிரபல நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜூன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி, செப்டம்பர் மாதம் 12-ந் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகின்றது.