மேலும் அறிய

Suriya39 Movie Poster : ’ஜெய் பீம்’ - வெளியானது ‛சூர்யா39’  ஃபர்ஸ்ட் லுக்!

நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு அவரது 39 திரைப்படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது இது வெளியிடப்பட்டுள்ளது. 

தா.சே. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடிக்கும் அவரது 39வது படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. படத்துக்கு ‘ஜெய் பீம்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. கதிர் படத்தின் ஒளிப்பதிவாளர், ஷான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சூர்யாவுடன் பிரகாஷ்ராஜ், ரஜீஷா விஜயன், லிஜோ மோல் ஆகியோர் நடித்துள்ளனர். இன்று நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு அவரது 39 திரைப்படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது இது வெளியிடப்பட்டுள்ளது. 

முன்னதாக நேற்று பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் அவரது 40வது திரைப்படத்துக்கான டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. ‘எதற்கும் துணிந்தவன்’ என அந்தத் திரைப்படத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் சூர்யா40 திரைப்படத்துக்கு ‘எதற்கும் துணிந்தவன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.இதனை இயக்குநர் பாண்டிராஜ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். படத்தில் டைட்டில் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஒன்றாகச் சேர்த்து வெளியிடப்பட்டிருக்கிறது, சூர்யாவின் பிறந்தநாள் நாளை அவரது ரசிகர்களால் கொண்டாடப்படும் நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாண்டிராஜன்  இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சூர்யா40. பெயர் வைக்கப்படாத இந்த திரைப்படத்தை தற்போது சூர்யா40 என்றே  அழைக்கின்றனர். இந்த படம் சூர்யாவின் 40 வது திரைப்படமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சூர்யா40 திரைப்படத்தில்  சத்யராஜ், ப்ரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் சூர்யாவுடன் நடித்து வருகின்றனர். படம்  முன்னதாகவே முடிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக தள்ளிப்போனது. இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது காரைக்குடி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சூர்யா 40 படத்தின் பெயர் மற்றும் அதன் ஃபஸ்ட்லுக் புகைப்படங்கள் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23 ஆம் தேதி ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , ஜூலை 22 ஆம் தேதி மாலை 6 மணிக்கு  முன்னோட்ட புகைப்படம் வெளியாகிறது என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் கிளிம்ஸ் வீடியோ ஒன்றுடன் அறிவித்திருந்தது.

இது ஒருபுறம் இருக்க வருகிற ஜூலை 23 ஆம் தேதி சூர்யாவில் பிறந்த நாளை  ரசிகர்கள் தற்போதே கொண்டாட துவங்கிவிட்டனர். வாடிவாசல் படக்குழுவினர் வெளியிட்டுள்ள காமன் டிபியும் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது . #SuriyaBdayCDPCarnival  என்ற பெயரில்  நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்ட பலர் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர்.  அந்த புகைப்படத்தில் ஆக்ரோஷத்துடன் தனது  பெயருடன் கூடிய ஏர் கலப்பையை இழுத்து வருகிறார் சூர்யா.

சூர்யா மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில்  மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் படம் ‘வாடிவாசல்’.  சமீபத்தில் இந்த  படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களை கலக்கின. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை கொண்டாடும் விதமாக  படம் உருவாகி வருகிறது. மதுரை வட்டார வழக்குடன் , கிராமத்து இளைஞனாக  படத்தில் வலம் வருவாராம் சூர்யா. இந்த படத்தில் இடம்பெறும் மாடு பிடி காட்சிகளுக்காக சூர்யாவிற்கு சிறப்பு பயிற்சிகளும் கூட வழங்கப்பட்டுள்ளன. கலைப்புலி எஸ் தாணு  இந்த படத்தை தயாரித்து வருகிறார். ஃபஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் பதிவிட்ட தயாரிப்பாளர் “ நமது வரலாறு மற்றும் துணிச்சலைக் குறிக்கும் ஒரு சின்னத்துடன்  வாடிவாசல் படத்தின் போஸ்டரை வெளியிடுவதில்  நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், பெருமிதம் கொள்கிறேன்” என குறிப்பிட்டுருந்தார். வாடிவாசல் திரைப்படம்  சி.சு.செல்லப்பா எழுதிய 'வாடிவாசல்' என்னும்  நாவலை தழுவியே உருவாகி வருகிறது 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget