மேலும் அறிய

MK Stalin: "அணையைக் கூட திறக்கிறார்கள்.. ஆனால் முதல்வர் வாயை யாராலும் திறக்க முடியவில்லை"! மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

MK Stalin Vs CM Vijay: முதலமைச்சர் விஜய் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்துறையில் இத்தனை பிரச்சினைகள் நடந்துகொண்டிருக்கிறது. இப்போதும் பேசவில்லை என்றால் எப்போதுதான் அவர் பேசுவார்?

போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க அமைக்கப்பட்ட 65 சிறப்பு அதிரடிப் படை என்ன செய்துகொண்டிருக்கிறது? என மு.க.ஸ்டாலின் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளத்தில்: சென்னையில் 700 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை ஒன்றிய அரசின் வருவாய்ப் புலனாய்வுத் துறை பறிமுதல் செய்துள்ளது. கடந்த மாதம் நாகையில், 270 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளுடன் த.வெ.க. நிர்வாகியான 'மெத்' பூபாலனின் கடத்தல் சாம்ராஜ்யத்தைப் பிடித்த அதே DRI அமைப்புதான் இதனையும் பிடித்துள்ளது. நம் மாநிலத்தில் அவர்கள் மாதாமாதம் பிடிக்கிறார்கள்.

போதைப் பொருள் நடமாட்டங்கள்

இதில் நமக்கு எழும் கேள்வி என்னவென்றால், தமிழ்நாட்டுக்குள் நடக்கும் இவ்வளவு பெரிய அளவிலான போதைப் பொருள் நடமாட்டங்களை மாநில அரசின் காவல்துறையால் ஏன் பிடிக்க முடியவில்லை? பிடிக்க முடியவில்லையா அல்லது கண்டும் காணாமல் இருக்கிறார்களா? முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக இருந்த தமிழ்நாடு இப்போது மெத், ஹெராயின் கடத்தல்காரர்களின் favourite destination ஆகிவிட்டது.

இதையும் படிங்க: Magalir Urimai Thogai: இவ்வளவு பேருக்கு மகளிர் உரிமைத்தொகை நிறுத்தம்? உடனே உங்க அக்கவுண்ட் செக் பண்ணுங்க..!

TVK ஆட்சியில் தமிழ்நாடே Vice City

தொடரும் சட்ட ஒழுங்கு சீர்குலைவு, த.வெ.க.வினரின் கட்டுக்கடங்காத பாலியல் அத்துமீறல்கள், மாபெரும் கொள்ளைச் சம்பவங்கள், குலைநடுங்க வைக்கும் லாக்கப் மரணங்கள் என TVK ஆட்சியில் தமிழ்நாடே Vice City ஆகிக் கொண்டிருக்கிறது. இவற்றில் இருந்தெல்லாம் திசைதிருப்ப நேற்று புள்ளிவிவரங்களை ஒப்பித்த காவல்துறைத் தலைவர் இந்த ஹெராயின் பறிமுதல் குறித்து என்ன சொல்லப் போகிறார்? எல்லவாற்றுக்கும் 'வழக்கு பதியப்பட்டுள்ளது' என்பதை மட்டுமே பதிலாகத் தரும் அவர், மாநில அரசின் அமைப்புகளால் ஏன் போதைக் கடத்தல்காரர்களைப் பிடிக்க முடியவில்லை என்பதற்கு பதில் சொல்ல வேண்டும்.

முதலமைச்சர் விஜய் குறித்து விமர்சனம்

போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க அமைக்கப்பட்ட 65 சிறப்பு அதிரடிப் படை என்ன செய்துகொண்டிருக்கிறது? முதலமைச்சர் விஜய் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்துறையில் இத்தனை பிரச்சினைகள் நடந்துகொண்டிருக்கிறது. இப்போதும் பேசவில்லை என்றால் எப்போதுதான் அவர் பேசுவார்? த.வெ.க. ஆட்சியில் அக்கட்சியின் ரீல்ஸ்மோகிகள் சட்டவிரோதமாக அணையைக் கூட திறக்கிறார்கள். ஆனால், முதலமைச்சர் விஜயின் வாயை யாராலும் திறக்க முடியவில்லையே என விமர்சனம் செய்துள்ளார். 

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

அல்ரெடி அன்பில் மகேஷ், கே.என்.நேரு.. இப்போ துரைமுருகன்..! அடுத்தடுத்து சிக்கும் முக்கிய தலைகள்..! நெருக்கடியில் திமுக
அல்ரெடி அன்பில் மகேஷ், கே.என்.நேரு.. இப்போ துரைமுருகன்..! அடுத்தடுத்து சிக்கும் முக்கிய தலைகள்..! நெருக்கடியில் திமுக
Governor RV Arlekar: டெல்லி பயணத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பிய ஆளுநர்! திடீரென மருத்துவமனையில் அனுமதி!
Governor RV Arlekar: டெல்லி பயணத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பிய ஆளுநர்! திடீரென மருத்துவமனையில் அனுமதி!
UP Assembly Election:
UP Assembly Election: "100 தொகுதியா..? முடியவே.. முடியாது.." காங்கிரசிடம் கறாராக பேசிய அகிலேஷ் யாதவ்!
Magalir Urimai Thogai: இவ்வளவு பேருக்கு மகளிர் உரிமைத்தொகை நிறுத்தம்? உடனே உங்க அக்கவுண்ட் செக் பண்ணுங்க..!
Magalir Urimai Thogai: இவ்வளவு பேருக்கு மகளிர் உரிமைத்தொகை நிறுத்தம்? உடனே உங்க அக்கவுண்ட் செக் பண்ணுங்க..!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஆதார் கார்டு முகவரியால் அம்பலமான வழக்கறிஞரின் லீலைகள்" பெண்ணிடம் ரூ.21 லட்சம் அபேஸ்
அல்ரெடி அன்பில் மகேஷ், கே.என்.நேரு.. இப்போ துரைமுருகன்..! அடுத்தடுத்து சிக்கும் முக்கிய தலைகள்..! நெருக்கடியில் திமுக
அல்ரெடி அன்பில் மகேஷ், கே.என்.நேரு.. இப்போ துரைமுருகன்..! அடுத்தடுத்து சிக்கும் முக்கிய தலைகள்..! நெருக்கடியில் திமுக
Madurai Bike Race:
Madurai Bike Race: "நான் மோசமான ஆளு" கானா பாட்டுப் போட்டு பைக் ரேஸ்.. எல்லை மீறும் இளம்பெண்கள்.. தட்டித் தூக்குமா போலீஸ்?
Guru Peyarchi: 3 முறை குரு பெயர்ச்சி.. எப்போது தெரியுமா? கோடீஸ்வர யோகம் யாருக்கு? உஷாராக இருக்க வேண்டியது யார்?
Guru Peyarchi: 3 முறை குரு பெயர்ச்சி.. எப்போது தெரியுமா? கோடீஸ்வர யோகம் யாருக்கு? உஷாராக இருக்க வேண்டியது யார்?
Karthigai Deepam: ஹேக்கர் பிடியில் மாமியார் இதயம்.. காப்பாற்றுவானா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ஹேக்கர் பிடியில் மாமியார் இதயம்.. காப்பாற்றுவானா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Dhanush:
Dhanush: "தனுஷ் அண்ணா தம்பிக..." நாளை ரிலீசாகும் ஓம்..! செலிபிரேஷன் மோட்-ஐ ஸ்டார்ட் செய்த ரசிகர்கள்!
Gold Rate Today: தாறுமாறாக குறையும் தங்கம்! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? விலை குறைய இதுதான் காரணமா?

Embed widget