Kanguva: ரிலீஸுக்கு முன்பே 22 சதவீதம் வசூல் எடுத்த கங்குவா... ஓடிடி விற்பனை மட்டும் இவ்வளவா?
சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமத்தை அமேசான் பிரைம் மிகப்பெரிய தொகைக் கொடுத்து பெற்றுள்ளது. இந்த வசூல் படத்தின் மொத்த பட்ஜெட்டில் 22 சதவீதம் என்பது குறிப்பிடத் தக்கது
கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. ஸ்டுடியோ கிரீன் இப்படத்தை 350 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. பாபி தியோல் , திஷா பதானி உள்ளிட்ட பாலிவுட் நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இயக்குநர் சிவாவின் முந்தைய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த வெற்றி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கங்குவா படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த பாடல் யூடியூபில் இதுவரை 40 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
Fueling spirits with its tribal fury 🔥#FireSong - Crosses 40M+ views across all languages ❤️🔥
— Kanguva (@KanguvaTheMovie) July 27, 2024
▶ https://t.co/eJeLCNVuKf
A @ThisIsDSP Musical#KanguvaFromOct10 🦅 @Suriya_offl @DishPatani @thedeol @directorsiva @StudioGreen2 @GnanavelrajaKe @vetrivisuals @supremesundar… pic.twitter.com/r1K0rOC3i1
கங்குவா ஓடிடி விற்பனை
தமிழ் , தெலுங்கு , இந்தி , மலையாள , கன்னடம் என பல மொழிகளில் இப்படத்தை வெளியிட இருக்கிறது படக்குழு. மேலும் மூன்று மொழியில் இப்படத்திற்கு இசை வெளியீடு நிகழ்ச்சி நடத்த படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. கங்குவா படத்திற்கு அனைத்து மொழி ரசிகர்களுக்கு மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. படத்தின் தெலுங்கு மொழி வெளியீட்டு உரிமம் மட்டுமே 25 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. அதேபோல் கேரள வெளியீட்டு உரிமம் 10 கோடிக்கு விற்பனை செய்யப் பட்டுள்ளது. அதேபோல் இந்தி மொழியில் படம் பெரும் தொகை ஒன்றுக்கு விற்பனை செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கங்குவா படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் 80 கோடிக்கு வாங்கியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த 80 கோடி என்பது படத்தின் 350 கோடி பட்ஜெட்டில் 22 சதவீதமாகு. அடுத்தடுத்து சாட்டலைட் விற்பனை , ஆல்பம் விற்பனை என படத்தின் ப்ரீ ரிலீஸ் பிஸ்னஸில் மட்டுமே 300 கோடி வரை படம் விற்கப் படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
சூர்யா 44
கங்குவா படத்தைத் தொடர்ந்து சூர்யா கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் சூர்யா 44 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பூஜா ஜெக்டே , கருணாகரன் , ஜெயராம் , ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஸ்பெஷல் வீடியோ ஒன்று வெளியானது. விரைவில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாக இருக்கிறது.