Retro First Single : சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் கண்ணாடி பூவே பாடல் இதோ
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் முதல் பாடலாக கண்ணாடி பூவே பாடல் வெளியாகியுள்ளது

ரெட்ரோ
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44 ஆவது படமாக உருவாகியுள்ள படம்தான் ரெட்ரோ. ஸ்டோன் பெஞ்ச தயாரித்துள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிட்டவர்கள் பிற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாரயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் மே 1 ஆம் தேதி ரெட்ரோ திரைப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இன்று இப்படத்தின் முதல் பாடலாக கண்ணாடி பூவே பாடல் வெளியாகியுள்ளது
ரெட்ரோ படத்தில் கண்ணாடி பூவே பாடல்
சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்பாடலுக்கு விவேக் பாடல் வரிகளை எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயணனே இப்பாடலை பாடியுள்ளார்.
#KannadiPoove is all yours now. Sharing a part of my soul with you all. Thank you for this team #Retro , @Suriya_offl sir and @karthiksubbaraj . @Lyricist_Vivek - You are magical . https://t.co/VXQmvEg9OM
— Santhosh Narayanan (@Music_Santhosh) February 13, 2025
ரொமாண்டிக் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படம் சூர்யா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்று. சூர்யா நடித்து கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் பெரியளவில் தோல்வியை சந்தித்த காரணத்தினால் ரெட்ரோ சூர்யாவுக்கு கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. சூர்யா அடுத்தடுத்து நடிக்கவிருக்கும் வாடிவாசல் , சூர்யா 45 ஆகிய படங்களின் வெற்றிக்கு ரெட்ரோ படத்தின் வெறி அவசியமானதாக இருக்கும்.





















