கரப்பான் பூச்சிகள் குட்டிகளை பெற்றெடுக்காது, மாறாக முட்டையிடும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
ஆனால் ஹவாயில் காணப்படும் பசிபிக் வண்டு கரப்பான் பூச்சி, குஞ்சுகளைப் பெற்றெடுக்கிறது.
அதன் குட்டிகள் கருப்பையில் வளரும்போது, வெளிர், மஞ்சள் நிற திரவத்தை தன் குட்டிகளுக்கு ஊட்டுகிறது.
அந்த வெளிர், மஞ்சள் திரவம் தான் கரப்பான் பூச்சி பால் என ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த பாலை எடுப்பது மிகப் பெரிய செயல்முறை எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் கரப்பான் பூச்சி சுமார் 40 நாட்களில் பாலூட்ட தொடங்கும். அப்போது தான் இந்த பாலை எடுக்க முடியும்.
சில மில்லியன் கரப்பான்பூச்சிகளிடமிருந்து எடுக்கப்படும் பாலை மாத்திரைகளாக தயாரிக்கமுடியும்.
கரப்பான் பூச்சி பால் என்றவுடனேயே உங்களுக்கு ஒரு விதமான வெறுப்பு உண்டாகி இருக்கும்.
ஆனால், Journal of the International Union of Crystallography-ன் கூற்றுப்படி, கரப்பான் பூச்சி பாலில் அதிக புரத படிகங்கள் உள்ளது.
மேலும், செல் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து அமினோ அமிலங்கள் இருக்கிறது. மற்ற பால்களை ஒப்பிடும்போது கரப்பான் பூச்சி பாலில் அதிக ஊட்டச்சத்தும் இருக்கிறது.
இதில் உடலால் உற்பத்தி செய்ய இயலாத கொழுப்பு வகை பொருட்கள்(Lipids) நிறைந்துள்ளன.
இந்த செயல்முறையை சாத்தியமானதாக மாற்றும் வழியை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்ததும், கரப்பான் பூச்சி பால் எதிர்காலத்தின் சூப்பர்ஃபுட்டாக மாறிவிடும்.