மேலும் அறிய

Kanguva: என்னது கங்குவா டீசரில் வந்தது நிஜப் புலியா? சைலண்டாக சம்பவம் செய்த கங்குவா கேங்!

கங்குவா படத்தில் நிஜப்புலியை படப்பிடிப்பிற்காக பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கங்குவா படத்தின் டீசரில் இடம்பெற்ற புலி கிராஃபிக்ஸ் இல்லை நிஜம் என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

கங்குவா

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் கங்குவா. பாபி தியோல் , திஷா பதானி உள்ளிட்ட பாலிவுட் நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்தை இசையமைத்துள்ளார். கங்குவா படத்தின் டீசர் கடந்த மார்ச் 19 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

சிறுத்தை சிவாவை பாராட்டிய ரசிகர்கள்

சிறுத்தை சிவா இயக்கத்தில் விவேகம், அண்ணாத்த உள்ளிட்டப் படங்கள் தோல்வியை சந்தித்தன. இதனால் கங்குவா படத்தின் மேல் ரசிகர்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கவே செய்தது. பொதுவாக சரித்திர கதை என்றாலே தமிழில் அதில் கிராஃபிக்ஸ் காட்சிகள் எதிர்பார்த்த அளவு இருப்பதில்லை. 17 ஆம்  நூற்றாண்டை கதைக்களமாகக் கொண்ட கங்குவா படத்தில் எக்கச்சக்கமான கிராஃபிக்ஸ் காட்சிகள் இருக்கும்  இந்த கிராஃபிக்ஸ் காட்சிகளில் சிறுத்தை சிவா சொதப்பி விடுவாரோ என்கிற ஐயம் ரசிகர்களுக்கு இருந்தது.

கங்குவா படத்தின் டீசர் இந்த சந்தேகத்தை உடைத்தெறிந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பிரம்மாண்டமான காட்சிகள், அட்டகாசமான வி.எஃப்.எக்ஸ் மற்றும் கிராஃபிக்ஸ் காட்சிகள் இந்தப் டீசரில் இடம்பெற்றன. இதனால் ரசிகர்கள் இயக்குநர் சிவாவை பாராட்டினார்கள். மேலும் படத்தின் மீதான அவர்களின் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது. கங்குவா படத்தின் டீசர் பற்றி அதிர்ச்சியளிக்கும் உணமையைத் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் தனஞ்செயன்

படத்தில் நிஜப் புலியை பயன்படுத்தி இருக்கிறோம்

கங்குவா டீசரில் சூர்யா புலியை எதிர்கொள்ளும் காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்த காட்சியில் கிராஃபிக்ஸ் சிறப்பாக இருப்பதாக பாராட்டுகள் குவிந்தன. இந்த காட்சி முழுக்க கிராஃபிக்ஸ் இல்லை என்றும் படத்திற்காக நிஜப் புலி ஒன்று பயன்படுத்தப் பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார். நிஜப் புலி ஒன்றை அதிகாரிகளின் ஒப்புதலோடு க்ளோஸ் அப் காட்சிகள் எடுத்து அதனை கிராஃபிக்ஸ் மூலம் பொருத்தியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த தொழில் நுட்பம் ஏற்கனவே மோகன்லால் நடித்து வெளியான புலிமுருகன் படத்தில் பயன்படுத்தப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலங்களில் தமிழில் வெளியாகும் படங்களில் கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு அதிக கவனம் செலுத்தப்படுவது ஒரு சிறப்பான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget