மேலும் அறிய

suriya , vijay meetup | ஜெய்பீம் பாராட்டு.. ஒன்றாக சாப்பாடு.. விஜய் - சூர்யா திடீர் சந்திப்பு.. கசிந்த தகவல்கள்!

இந்த திடீர் சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தைஅவரது ரசிகர்களை உற்ச்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் நடிகர் சூர்யாவும் விஜய்யும் . சினிமாவில் சூர்யா நடிக்க வந்த காலக்கட்டத்திலிருந்தே இருவரும் நெருங்கிய நண்பர்கள். 1997 ஆம் ஆண்டு வெளியான நேருக்கு நேர் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த காம்போவிற்கு கிடைத்த வெற்றியின் விளைவு அடுத்ததாக ஃபிரண்ட்ஸ் படத்திலும் நடித்தனர். அந்த படமும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. சூர்யா மற்றும் விஜய் இருவருமே தங்களுக்கான தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளனர். விஜய், சூர்யா இருவரின் தந்தையும் சினிமா துறையில் ஸ்டார்ஸாக இருந்தவர்கள் என்பதால், சிறுவயது முதலே பரீட்சியம் ஆனவர்கள் , அதோடு சிறந்த நண்பர்களும் கூட. இந்நிலையில் ஸ்டார்டம் வேல்யூ கொண்ட இரண்டு நடிகர்களும் தற்போது சந்திப்பு நடத்தியுள்ளனர். அது குறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த திடீர் சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தை அவரது ரசிகர்களை உற்ச்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

suriya , vijay meetup | ஜெய்பீம் பாராட்டு.. ஒன்றாக சாப்பாடு..  விஜய் - சூர்யா திடீர் சந்திப்பு.. கசிந்த தகவல்கள்!

சென்னை, பெருங்குடியில்  நேற்று விஜய், நெல்சன் இயக்கத்தில் நடித்துவரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.அதே வேளையில், சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் ஷூட்டிங்கில் இருந்துள்ளார். விஜய் மற்றும் சூர்யா இருவரும் ஒரே இடத்தில் இருப்பதை அறிந்து சந்திப்பதற்கான முடிவுகளை எடுத்துள்ளனர். சூர்யா மற்றும் விஜய் இருவரின் சந்திப்பு அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. ஆனால் இந்த சந்திப்பு மிகவும் தனிப்பட்ட சந்திப்பாக இருந்ததால் புகைப்படங்கள் எடுக்கப்படவில்லையாம். .மேலும் புகைப்படங்கள் கசிந்தால் படத்தில் அவர்களின் தோற்றம் குறித்தான தகவல்களும் கசிந்துவிடும் என்பதால் அதனை  படக்குழு மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

சூர்யா மற்றும் விஜய் இருவரும் நேற்று மதிய சாப்பாட்டை ஒன்றாக சாப்பிட்டுள்ளார்கள்.அப்போது விஜய் , ஜெய் பீம் திரைப்படம் குறித்து பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் மீண்டும் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என சமூக வலைத்தள பக்கங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நெல்சன் தற்போது பெருங்குடி பகுதியில் பீஸ்ட் படத்தின் காட்சியை எடுத்து வருகிறார் என்பது குறித்த செய்திகளை முன்பே பார்த்தோம். இந்நிலையில் இயக்குநர் பாண்டிராஜனும் தற்போது பெருங்குடி பகுதியில் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக  ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் மற்றும் நடிகர் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
TN Assembly Session LIVE: ஆளுநர் உரையை வாசிக்காமலே புறப்பட்டுச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி
TN Assembly Session LIVE: ஆளுநர் உரையை வாசிக்காமலே புறப்பட்டுச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன அச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன அச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
TN Assembly Session LIVE: ஆளுநர் உரையை வாசிக்காமலே புறப்பட்டுச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி
TN Assembly Session LIVE: ஆளுநர் உரையை வாசிக்காமலே புறப்பட்டுச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன அச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன அச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
Jasprit  Bumrah : இந்திய அணிக்கு அடுத்த அதிர்ச்சி.. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விலகும் பும்ரா? முழு விவரம்
Jasprit Bumrah : இந்திய அணிக்கு அடுத்த அதிர்ச்சி.. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விலகும் பும்ரா? முழு விவரம்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
Embed widget