டாக்டர் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் இணையும் ‘பிக்காசோ’ படத்தின் முதல் பாடல் ‘ஹக்கூனா மட்டாட்டா’ வெளியானது!
‘பிக்காசோ’ படத்தின் முதல் பாடலான ‘ஹக்கூனா மட்டாட்டா’ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜனவரியில் படம் வெளியாகிறது.

கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் இளம் தலைமுறையின் கவனம் பெற்ற நடிகர் அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் ‘பிக்காசோ’ (PICASSO). இப்படத்தின் முதல் பாடலான ‘ஹக்கூனா மட்டாட்டா’ தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், இப்படம் வரும் ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிராமா கம்பெனி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கவுதம் சிவராமன் இயக்கியுள்ள இப்படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக்கும் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருந்தார்.
இரண்டு வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடித்திருப்பது இப்படத்தின் முக்கிய சிறப்பம்சமாகும். வித்தியாசமான காட்சியமைப்புடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக், படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
இப்படத்தில் ஷிவானி நாகரம் கதாநாயகியாக நடிக்கிறார். யோகலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், பிரபல பாடகர் கானா வினோத் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.
இப்படத்திற்கு கவுதம் சிவராமன் கதை எழுதி இயக்குகிறார். லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஸ்வாதி ராமகிருஷ்ணன் ஆடை வடிவமைப்பையும், விஜு விஜயன் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.
டிராமா கம்பெனி சார்பில் ஏ. பாலமுருகன் இப்படத்தைத் தயாரிக்கிறார். ஆர். கார்த்திகேயன், தினேஷ் பாலச்சந்திரன் மற்றும் ஆர்.ஆர். தீபன் ராஜ் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகப் பணியாற்றுகின்றனர். கிரீன் காட் மற்றும் டி பிக்சர்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில் இணைந்துள்ளன.
படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது முதல் பாடலான ‘ஹக்கூனா மட்டாட்டா’ வெளியாகியுள்ள நிலையில், ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ‘பிக்காசோ’ திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
#hakunamatata is out now !!! Thank you so muchhh my dearest @sooriofficial anna for releasing this :) https://t.co/bwds2Ss60L https://t.co/VcP3cOVdeZ
— Abishan Jeevinth (@Abishanjeevinth) November 27, 2026
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























