மைக்கல் Vs ராஜேந்திரன்...பராசக்தி படத்தால் சூர்யா சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே மோதல்
சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியதைத் தொடர்ந்து சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது

பராசக்தி
சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியானது. ஶ்ரீலீலா , அதர்வா , ரவி மோகன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். டான் பிக்ச்சர்ஸ் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார். 1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மைய கதைக்களமாக வைத்து இப்படம் உருவாக இருக்கிறது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ராஜேந்திரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் இப்படத்தில் ராஜேந்திரனாக நடிக்க இருக்கிறார். ஒருபக்கம் பராசக்தி படத்தின் டைட்டில் டீசர் பரவலான கவனம் பெற்றாலும் இன்னொரு பக்கம் சூர்யா ரசிகர்கள் இந்த டீசருக்கு எதிராக பதிவிட்டு வருகிறார்கள் .
சூர்யா கைவிட்டுபோன புறநாநூறு
சூர்யாவை நாயகனாக வைத்து சுதா கொங்காரா இயக்கவிருந்த படம் புற்நாநூறு. இந்தி எதிர்ப்பு போராட்டை மையமாக வைத்து பீரியட் டிராமாவாக இப்படம் உருவாக இருந்தது. நஸ்ரியா , துல்கர் சல்மான் என பெருக் நட்சத்திரங்கள் படத்தில் நடிக்க இருந்தார்கள். ஆனால் சில காரணங்களால் இப்படத்தில் இருந்து சூர்யா விலக அடுத்தடுத்து மற்ற நடிகர்களும் விலகினர். இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் இப்படத்தில் இணைந்தார். பராசக்தி டைட்டில் டீசர் வெளியானதைத் தொடர்ந்து சூர்யா நல்ல படத்தை மிஸ் பண்ணிட்டார் என பலர் தங்கள் ஆதங்கத்தை தெரியபடுத்தி வருகிறார்கள். இதனால் கடுப்பான சூர்யா ரசிகர்கள் பராசக்தி டீசரை விமர்சித்து வருகிறார்கள்.
ஆயுத எழுத்து படத்தில் சூர்யா நடித்த மைக்கல் கதாபாத்திரத்தை சுட்டிக் காட்டி சிவகார்த்திகேயன் என்ன முயற்சி செய்தாலும் இந்த மாதிரி அவரால் நடிக்க முடியாது என சூர்யா ரசிகர்கள் பழைய கதை பேசி முட்டுக் கொடுத்து வருகிறார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

